யுரேகா கோர்ட்

இரா.நடராசன்

அன்று கோர்ட்டில் ஏக பரபரப்பு. வளாகத்தைச் சுற்றிலும் ஆயிரம் கார்கள். மெர்செடிஸ் முதல் மாருதி வரை விதவிதமான கார்களைச் சுட்டிகள் பார்த்து ரசித்தனர். "அதோ ரத்தன் டாட்டா... இங்கே பார் ஹென்றி ஃபோர்டு" என்ற குரல்கள் நீதிபதியைக் கண்டதும் கப்சிப் பானது.

நீதிபதி அனைவரும் அமரலாம். இது மாணவச் செல்வங்களின் அறிவியல் சிறப்பு நீதிமன்றம். எனவே கோர்ட் காவலர்கள் குழந்தைகள் உட்கார இடம்செய்து தருமாறு உத்தரவிடுகிறேன். இன்றைய வழக்கு என்ன?

பெஞ்சு கிளார்க் யுவர் ஹானர்... ஜெர்மனியின், ஸ்கான் டார்பனி நகரைச் சேர்ந்த காட்டிலலே டெய்ம்லர் (Gottilale Daimler) அதே நாட்டின் லாடர்ன்பர்க் நகரின் காரல் பென்ஸ் (Karal Benz) மீது கார் என்ற மகிழ்வு ஊர்தியைக் கண்டுபிடித்தது தான்தான் என்று தொடர்ந்து இருக்கும் வழக்கு.

நீதிபதி அப்படியா! சரி, திரு டெய்ம்லர்... உங்கள் வழக்கை முன் வைக்கலாம். உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

டெய்ம்லர் மை லார்டு... நான் ஜெர்மனியின் ஸ்டான்ஃபோர்டில் 1834-ல் ஒரு ரொட்டிக் கடை முதலாளிக்குப் பிறந்தேன். சிறுவயதிலேயே பொறியியல் துறையில் ஆர்வம். ஆறு வயதில் எதிர்காலத்தின் இரு சக்கர... மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை வரைபடமாக வரைந்துள்ளேன். ஆனால் பள்ளிப்படிப்பு முடிந்ததும் துப்பாக்கி ரவைகள் செய்யும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். எனது ஆர்வம் இயந்திரவியல் பக்கமே இருந்தது. அப்போது நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டோவின் இயந்திரவியல் ஆய்வுகளில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. ஓட்டோ, நான்கு பிஸ்டன் கொண்ட இஞ்சின் (ஃபோர் ஸ்ட்ரோக் இஞ்சின்) தயாரித்து இருந்தார். அதை நான் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பொருத்த முயற்சி செய்தேன். 1877-ல் கிட்டத்தட்ட வெற்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓட்டோவுக்கும் எனக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிய நேர்ந்தது. எனக்கு ஓட்டோவின் தொழில் நிலையத்தில் மே பாட்ச் என்ற நண்பர் இருந்தார். அவரும் நானும் கேன்ஸ்டாஃப் எனும் ஊரில் ஒரு கோடை பங்களாவை விலைக்கு வாங்கி இருந்தோம்.

நீதிபதி அதற்கும் கார் கண்டுபிடிப்புக்கும் என்ன சம்பந்தம்?

டெய்ம்லர் கனம் நீதிபதி அவர்களே... அந்த பங்களாவின் உள்ளே நாங்கள் ஒரு பட்டறை வைத்து இருந்தோம். பலவகையான புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்தோம். அந்த இயந்திரங்களை நாங்கள் உள்ளேயே ஓட்டிப் பார்க்கும் அளவுக்கு பங்களாவில் இடம் இருந்தது. ஒரே இயந்திரத்தை வைத்து இரு சக்கர வாகனத்தை வடிவமைத்தேன். பிறகு மூன்று சக்கர... நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்தோம். சுற்றிலும் வசித்தவர்கள் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தார்கள். நாங்கள் இல்லாத சமயம் தோட்டக்காரரிடம் சாவியை வாங்கிய போலீஸ், வீட்டுக்குள் நுழைந்து நான்கு சக்கர வாகனம் இருப்பதைக் கண்டார்கள். அப்போது வருடம் 1883. அவர்கள் அதை ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் நாங்கள் அங்கு சென்றோம். அதே இயந்திரத்தை வைத்து பிறகு நான் ஒரு ஸ்டீம்போட் செய்து குளத்தில் விட்டேன். ஸ்டீம் பலூனில் பறந்தேன். இதுதான் உண்மை. ஆனால் அந்தக் கூண்டில் நிற்கும் காரல் பென்ஸ் தானே காரை கண்டு பிடித்ததாகக் கூறுகிறார்.

நீதிபதி நல்லது. உங்கள் கண்டுபிடிப்பு உண்மையிலேயே சுவாரசியமாக உள்ளது. ஒரே இஞ்சினை வைத்து இத்தனை கருவிகளை இயக்க முடியுமாயின் சாதனைதான். திரு. காரல் பென்ஸ், இவரது குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? முதலில் உங்களைப் பற்றிக் கூறுங்கள்.

காரல் பென்ஸ் யுவர் ஹானர்... நான் ஜெர்மனியின் கார்ல்சுஹ் பகுதியில் 1844-ல் பிறந்தேன். என் தந்தை ரயில் இஞ்சின் டிரைவர். நான் இரண்டு வயதாக இருக்கும்போது ரயில் விபத்தில் தந்தை இறந்து விட்டார். என் தாயின் துணை இன்றி இன்று நான் இல்லை. பட்டினி இருந்தோம். ஆனால் எப்படியோ என்னை பள்ளிக்கூடம் அனுப்பிப் படிக்க வைத்தார். குழந்தைப் பருவத்திலேயே நான் மேதைமை படைத்தவனாக குறிப்பாக இயந்திரவியலில் ஆர்வம் கொண்டவனாய் இருந்தேன். என் ஆறாவது வயதில் மின்சாரம் எங்கள் ஊருக்கு வந்தது. எங்கள் பள்ளிக்கு மின் இணைப்பை நான் ஒருவனாகக் கொடுத்தேன்.

(சுட்டிகள் கை தட்டிப் பாராட்ட... மீண்டும் பேசத் தொடங்குகிறார் பென்ஸ்)

காரல்பென்ஸ் எனக்கு ஒன்பது வயதாக இருக்கையில் லீசியம் எனும் உலகின் முதல் அறிவியல் கிளப்பை எங்கள் தெருப் பையன்களோடு தொடங்கினேன். கார்ஸ் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வை பதினைந்து வயதிலேயே எழுதி முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது என் கண்டுபிடிப்புகளுக்குள் செல்வோம். காரை இப்போது நிறைய பேர் வைத்திருக்கிறார்கள். நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது அம்மா ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அதில் அவரை ஏற்றிக்கொண்டு போக அப்போது அனுமதி கிடையாது. அதை மூன்று சக்கர சைக்கிளாக மாற்றினேன். படிப்பு முடிந்து பல இடங்களில் வேலை செய்தேன். பிறகு நண்பர் ஒருவரோடு சேர்ந்து மெஹம் எனும் ஊரில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தேன். அது திவால் ஆனதும் கடனை எல்லாம் அடைத்து என் மனைவி காப்பாற்றினார். பிறகு அந்த தொழிற்சாலையை நானே நடத்தினேன். இரவு பகலாக உழைத்தேன். குதிரை வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்தேன். டிராம் என்று வாகனங்கள் அழைக்கப்பட்டன. குதிரையே இல்லாமல் அவற்றை ஓட்டிப் பார்ப்பதே என் ஆர்வம். எப்படியோ பலவிதமாக முயன்று 1878-ல் இரு பிஸ்டன் இஞ்சினைக் கண்டுபிடித்தேன். 1879-ல் வேகத்தைக் காட்டும் கருவி... 1880-ல் பொறி மூலம் இஞ்சினை இயக்கும் ஸ்பர்க் பிளக்கைக் கண்டுபிடித்தேன். அதே வருடம் கார்புரேட்டர் எனும் பாகத்தை வடிவமைத்ததும் நான்கு சக்கர வாகனம் சாத்தியமானது. இஞ்சின் வெளியிட்ட வெப்பம் அந்த வண்டியில் உட்காரும் சீட்டைப் பொசுக்கியதால் ரேடியேட்டரைக் கண்டுபிடித்தேன். ஆனால் என் வண்டியில் இஞ்சினைப் பின் சீட்டுக்கு அடியிலேயே வைத்தேன். பாரீஸில் 1882 கண்காட்சியில் அதை வெள்ளோட்டம் விட்டேன். பதினெட்டு நாட்கள் தங்கு தடையின்றி ஓடியது. பிறகு அதே போல இரு வண்டிகள் செய்தேன்.

நீதிபதி திரு.பென்ஸ்... உங்கள் கண்டுபிடிப்பும் கேட்க சுவாரசியமாகவே உள்ளது. இந்த வழக்கில் எனக்கு ஆலோசனை வழங்க பேராவூரணியைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டி என்.பார்த்திபனை வரச் சொல்லி இருக்கிறேன். அவரும் வந்திருக்கிறார். பார்வையாளர் மாடத்திலிருந்தே பேசுவார்.

என்.பார்த்திபன் மா மனிதர்கள் கூடி உள்ள இந்த அவையை நான் வணங்குகிறேன். இது மிகவும் சிக்கலான வழக்கு. கார்களின் வரலாறு என்று டைப் செய்து இணையதளத்தில் தேடினேன். லத்தீன் மொழியில் கார்ரம் (carrum) என்ற சொல்லுக்கு நான்கு சக்கரம் என்று பொருள். 1672-ல் சீன அரசருக்கு பெர்டினாட் என்பவர் பொம்மையாக ஒரு காரை பரிசளித்தாராம். அது கை அகலத்தை விட கொஞ்சம் பெரிதாக இருந்ததாம். 1801-ல் பிரான்சிலும் அதற்கு முன் 1780-ல் ரஷ்யாவிலும் மூன்று சக்கர வாகனம் வந்தாலும் அவற்றில் உட்காரும் இடத்தில் ரயில் இஞ்சினைப் பயன்படுத்தி கரி வைத்து இயக்கி இருக்கிறார்கள். ஆனால் முதல் கார் 1883-ல் 106 கி.மீ. ஓடியதாக தகவல் உள்ளது. அதில் சென்றவர் பெயர் உள்ளது. இங்கே உள்ள இரு விஞ்ஞானிகளுமே ஒரே ஆண்டில் தங்கள் கண்டுபிடிப்பு நடந்ததாகக் கூறுகிறார்கள். இரண்டு கேள்விகள் என்னிடம் உள்ளன. அவர்களது பதில் தேவை. முதலாவது... அவர்களது காரின் 'ஸ்டியரிங்'-ஆக இருந்தது எது? இரண்டாவது... பயன்படுத்திய எரி பொருள் எது?

நீதிபதி விஞ்ஞானிகளே இதற்கு பதில் சொல்லுங்கள்.

டெய்ம்லர் என் முதல் காரில் ஸ்டியரிங்கே கிடையாது. ஒரு கயிறுதான் இருக்கும்.

பென்ஸ் என் காரில் ஸ்டியரிங் சைக்கிளின் கைப் பிடி.

நீதிபதி எரி பொருள்?

பென்ஸ் கனம் நீதிபதி அவர்களே... அப்போது 'காஸலின்' எனப்படும் மண்ணெண்ணெயை மருந்துக் கடைகளில் விற்றார்கள். அதைப் பயன்படுத்தினோம். ரொம்ப நாட்களுக்கு அப்படித்தான்.

டெய்ம்லர் நான் பெட்ரோலைப் பயன்படுத்தினேன். அதற்கு கார்புரேட்டரில் ஒரு ஃபில்ட்டர் போட்டால் போதும்.

என்.பார்த்திபன் நல்லது. முதல் நான்கு சக்கர வாகனம் 106 கி.மீ. ஓடியதை இன்றும் கொண்டாடி வருகிறோம். அந்த வண்டியில் பயணம் செய்த மங்கையின் பெயர் பெர்த்தா. இவர்கள் இருவரில் அந்தப் பெயரோடு தொடர்பு உடையவர் யார்?

பென்ஸ் நீதிபதி அவர்களே... இந்தச் சுட்டியைப் பாராட்டுகிறேன். அது என் மனைவி பெர்த்தா பென்ஸ். தனது தாய் வீட்டுக்குத் தைரியமாக அதில் சென்றாள். போய்ச் சேர்ந்ததும் தந்தி கொடுத்தாள். அந்தப் பயண அனுபவத்தை வைத்து நாங்கள் வண்டியில் ஷாக் அப்சர்வர் எனும் ஸ்பிரிங்கை இருக்கைக்குக் கீழே சேர்த்தோம்.

நீதிபதி நல்லது... இதோ எனது தீர்ப்பு. கார் எனப்படும் நான்கு சக்கர வாகனத்தைக் கண்டுபிடித்தது கார்ல் பென்ஸ்தான். டெய்ம்லரின் வண்டியும் ஓடியது. ஆனால் அது வெள்ளோட்டமாக ஓடவில்லை. அதில் ஸ்டியரிங் கைப் பிடி இல்லை. பெட்ரோலில் ஓடும் வண்டியை... இயந்திரத்தை டெய்ம்லர் கண்டுபிடித்து இருக்கிறார். அதற்காக வரலாறு அவரைப் போற்றிப் பாராட்ட மறக்காது. சொலிசிட்டர் சுட்டிக்கு பாராட்டுக்கள். சபை கலையலாம்.