வியக்க வைக்கும் சிக்ரி!

ஹாய் ஃபிரெண்ட்ஸ், காலாண்டு விடுமுறையில் நான் காரைக்குடியில இருக்கும் CECRI  (சிக்ரி) எனப்படும் மைய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் போனேன்.

சாதாரணமாய் இங்கே உள்ளே போக அனுமதியில்லை. அன்று(26.09.09 ) பார்வையாளர் தினம். 'எல்லோரும் வந்து சுற்றிப் பார்க்கலாம்'னு விளம்பரம் வந்தது. நானும் எங்க கவிமணி குழந்தைகள் சங்க குழந்தைகளும் காலையில் சிக்ரிக்குச் சென்றோம். குழந்தைப் பிரியர் நேரு, விஞ்ஞானி சாந்திஸ்வரூப் பட்நாயக் CECRI  என்ற மத்திய அரசு நிறுவனத்தைத் தொடங்கி னார்கள். இந்தியா முழுவதும் 37 இடங்களில் இந்த ஆய்வகங்கள் இருக்கின்றன. வள்ளல் அழகப்பரின் பெருங்கொடையால் 1948-ல் சின்ன ஊரான காரைக்குடியில், பெரிய நிலப்பரப்பில் சிக்ரி தொடங்கப்பட்டது.

நீர் மூழ்கிக் கப்பல், கடலுக்கடியில் நிறுவியுள்ள இயந்திரங்கள், ஏவுகணைகள், எண்ணெய் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்றவற்றில் உள்ள உலோக அரிமானத்தைக் குறைக்க ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை ISRO, ONGC, BHEL, BPCL, NTPC ஆகிய நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பாம்பன் பாலம், கொங்கன் ரயில் பாலம் போன்றவற்றிற்குப் பயன்படும் ஸ்டீல் கம்பிகள் மீது சிமென்ட் பூச்சு செய்யப்படுவதால் பாலங்களில் தாங்கும் திறன் அதிகரிக்கிறதாம். Inhibitted cement sluory coating  என்ற இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த பெருமை செக்ரிக்கே.

சிமென்ட் தொழிற்சாலையில் கழிவாகக் கிடைப்பது Flyash எனும் சாம்பல். இந்தச் சாம்பலைக் கொண்டு செங்கல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் செங்கல் விலை மலிவானது, காற்று மாசுபடுவதைக் குறைக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேதியியல் தொழிற்சாலைகளின் மின்சாரச் செலவைப் பெரிய அளவில் குறைக்கும் TSIA எனும் தொழில்நுட்பத்தை Chlor alkali  என்ற சிக்ரி பிரிவு விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். அதனை Team - company, BHPV Ltd; Titanor Ltd போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

Glass filled organic coating என்ற தொழில்நுட்பத்தின் மூலம் கண்ணாடித் துகள்கள் சேர்க்கப்பட்ட பெயின்ட்டையும் உருவாக்கியுள்ளனர். இதை கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்குப் பயன்படுத்தி, உப்புக் காற்றின் மூலம் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.

சிக்ரியின் ஆராய்ச்சிகள் நம் நாட்டின் பாதுகாப்புக்கும், எரிபொருள் சிக்கனத்துக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவுவதைத் தெரிந்து கொண்டோம்.

சுட்டிகளின் சந்தேகங்களுக்கு செக்ரி விஞ்ஞானிகள் எளிமையான முறையில் விளக்கம் அளித்தனர். 4 மணி நேரம் சுற்றிப் பார்த்த களைப்பே தெரியாமல் வீடு திரும்பினோம்.