Published:Updated:

அர்ச்சனா போனாள் டாக்டரிடம் !

அர்ச்சனா போனாள் டாக்டரிடம் !


01-05-2008
 
அர்ச்சனா போனாள் டாக்டரிடம்!

'அழகை பாதுகாத்து அதை மேலும் மெருகேற்றுவது எப்படி?' என்று எல்லோருக்குமே பொதுவாக சில சந்தேகங்கள் இருக்கும். இதோ நம்ம மதுரையைச் சேர்ந்த அர்ச்சனாவுக்கு தோல் பற்றி பல சந்தேகங்கள்... வாங்க, அவங்க மூலமா சில விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்.

அர்ச்சனா போனாள் டாக்டரிடம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என் பேரு அர்ச்சனா. நான் இப்போ மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.

''ஆ! என்ன ஆச்சுடீ உன் ஸ்கின்னுக்கு?''ன்னு என் தோழிகள் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. இதே யோசனையா இருந்தது. என்னோடு அவங்க பிரச்னைகளையும் சேர்த்து எடுத்துக்கிட்டு நேரா, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். அங்கே உமா முரளிதரன் என்கிற டாக்டரை சந்திச்சேன். தோல் சம்பந்தமான 'டெட்மட்டாலஜி' படிச்ச டாக்டர் இவங்க. பார்க்கறதுக்கு ரொம்ப பவ்யமான அழகோட இருந்தாங்க! பார்த்ததுமே கேள்விகளை ஆரம்பிச்சுட்டேன்.

SKin - ல எத்தனை வகை இருக்கு டாக்டர்?''

'''உலர்ந்த சருமம் (Dry Sking), எண்ணெய் சருமம் (Oily Skin) ன்னு இரண்டு வகை இருக்கு அர்ச்சனா.

நான் சைக்கிள்ல தான் ஸ்கூலுக்குப் போவேன்? வெயில்ல போறதால என் முகம் ரொம்ப கறுப்பா தெரியுது ஏன்?

சூரியக் கதிர்களில் இருக்குற புறஊதா கதிர்கள் (Ultra Violet rays) ஏற்படுத்துகிற பாதிப்பு இது. தோலில் உள்ள சுரப்பிகளும் ஒரு காரணம். வெயிலில் போய்விட்டு வந்ததும் நன்றாக முகம் கழுவிட்டா மறுபடியும் முகம் ஃப்ரெஷ்ஷா மாறிடும்.

தோலில் இருக்கிற நிறமிகள்தான் நம் நிறத்துக்கு காரணம்னு படிச்சிருக்கேன். கறுப்பா இருக்கிறவங்க ஃபேஷியல் க்ரீம் தடவி சிவப்பா மாறிட முடியுமா?

ஃபேஷியல் க்ரீம் என்பது நம் தோலில் ஒரு கோட்டிங் மட்டும்தான்.அது தடவிக்கறதுனாலே சிவப்பா தெரியலாமே தவிர நிறமிகளின் குணத்தை மாற்றிட முடியாது.

அர்ச்சனா போனாள் டாக்டரிடம் !

''என்னோட தோல் எந்த வகை டாக்டர்? நான் எந்த மாதிரி சோப் பயன்படுத்தணும்?

உலர்ந்த சருமம் உள்ளவங்க Dove,pears மாதிரியான ஆயில் சோப்புகளை போடலாம். எண்ணெய் சருமம் உள்ளவங்க, Hamam, cinthal மாதிரியான சோப்புகளை போடலாம்.

''தோல் பளபளப்புக்கு ஹெல்தி டயட் சொல்லுங்க டாக்டர்...''

நிறைய பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்க. முக்கியமா, அதிக அளவு தண்ணீர் குடிக்கணும். முக்கால்வாசி தோல் பிரச்னைகளுக்கு தண்ணீர் குறைவுதான் முக்கியக் காரணமா இருக்கு.

''ஃபாஸ்ட் ஃபுட்' சாப்பிடறதால ஏதாவது பாதிப்பு வருமா?''

எப்பவாவது சாப்பிட்டால் கெடுதல் இல்லை. எப்பவும் சாப்பிட்டால் உடல் பருமன், தோல் சுருக்கம், வாந்தி, வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் சீக்கிரமே வந்துவிடும்.

''எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்க என்ன செய்யணும் டாக்டர்?''

தினமும் நான்கு அல்லது ஐந்து முறை முகம் கழுவுங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா, இருந்தா முகம் அழகா ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

நமக்கு முடி ஏன் உதிருது?

அர்ச்சனா போனாள் டாக்டரிடம் !

புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துக்குறைவு ஏற்பட்டால் முடி உதிரும். தினமும் தேங்காய் எண்ணெய் தடவி கொஞ்சநேரம் ஊறவிடுங்கள். ஒரே வகையான ஷாம்பூ உபயோகிப்பதும் நல்லது.

''சுட்டிகளுக்கு சொறி, சிரங்கு, பித்த வெடிப்பு எல்லாம் வருதே எதனால் டாக்டர்?''

விளையாடி முடித்தவுடன் கை, கால்களை நன்றாக கழுவவேண்டும். மண்ணில் விளையாடி முடித்ததும் உடனே சோப்பு போட்டு கழுவாவிட்டால் இப்படி சொறி, சிரங்கு, பித்த வெடிப்பு எல்லாம் வர வாய்ப்பிருக்கிறது.

''நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்... ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.''

படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி