பிரீமியம் ஸ்டோரி

01-05-2008
 
ஸ்கூல் BAG!

ரொம்ப வருடத்துக்கு முன்பு சீனாவில் ஆவு, ஆசியோ என்ற இரு வீரச்சிறுவர்கள் இருந்தனர்.

ஸ்கூல் BAG ...

அவர்களுடன் 'பிளாக்கி' என்ற நாயும் இருந்தது. மூவரும் இரண்டாம் உலகப்போரின் போது சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த ஜப்பானிய படைவீரர்களை விரட்டி அடித்து வாழை மரங்களும், தென்னந்தோப்புகளும் சூழ்ந்த ஹைடன் தீவில் ஒரு தென்னை மரத்தில் ஜப்பானிய வீரர்களை கட்டி வைத்ததோடு... சீன கொரில்லா படை வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியையும் செய்தனர் என தொடங்குகிற சுவாரஸ்யமான இக்கதையில் சிறுவர்கள் ஜப்பானிய படைவீரர்களை விரட்டி அடிக்க மேற்கொள்ளும் தந்திரங்கள் அற்புதமானவை. இதை தமிழில் மொழிப்பெயர்த்தவர் ச.சரவணப்பாண்டி.

வெளியீடு புக் ஃபார் சில்ட்ரன்,
எண்7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18.

 

பூமரப்பெண் (கதைகள், விவாதங்கள், சம்பவங்கள்)

இதில் கன்னடம், தமிழ், குஜாரத்தி என பல கதைகள் உள்ளன. இதிலுள்ள நீத்தா என்ற கதை குஜராத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அப்படியே சொல்கிறது. இப்புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், கதைகளுடன் நின்றுவிடாமல் அக்கதைகளை பல்வேறு பகுதி மக்களிடம் சொல்லி, அது குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தி சமுதாய சிக்கல்களை ஆராய்கிறது. சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே புதிய உலகத்திற்குள் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.

ஸ்கூல் BAG ...

எழுதியவர் ச.மாடசாமி

வெளியீடு பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018.

 

பாலைவனங்கள் (DESERTS)

ஸ்கூல் BAG ...

பாலைவனங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எளிய மொழி நடையில் வெளியாகியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பாலைவனத்தின் படங்கள் கண்களை கவரும் விதத்தில் உள்ளன. ஒவ்வொரு படத்துக்கும் அதற்குரிய குறிப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. புதுவிதமான முயற்சி இது!

வெளியீடு யுரேகா புக்ஸ், 20/34 ரத்தினம் தெரு, கோபாலபுரம் சென்னை-600086.


 

 

-
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு