Published:Updated:

சில்லி கில்லி சிரித்திரம்!

சில்லி கில்லி சிரித்திரம்!


01-05-2008
 
சில்லி கில்லி சிரித்திரம்
ல.சி.சந்தானமூர்த்தி

விளையாட்டு நாம எல்லோருக்கும் புடிச்ச விஷயம்! அதுவும் விடுமுறையில சாப்பிடாம கூட விளையாடிக் கிட்டே இருப்போம். ஒவ் வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான விளையாட்டுகள் பிடிக்கும். இருந்தாலும், எல்லா விளையாட்டுகளின் நோக்கம்... நம்மோட உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்து கொள்வதற்காகத்தான்! சரி, ஆதிகாலத்துல மக்கள் ஏதாவது விளையாடினாங்களா...?! அப்படீன்னு பார்ப்போம்.

சில்லி கில்லி சிரித்திரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காட்டிலேயும், குகையிலும் வாழ்ந்த மக்கள் சின்ன சின்னக் குழுக்களாக வெவ்வேறான பகுதியில வாழ்ந்தாங்க. சிலசமயம் அப்பகுதி மக்களுக்குள்ளே சண்டை சச்சரவுகள் ஏற்படும். (அப்பவே ஆரம்பிச்சுட்டாங்கப்பா...!) அப்போது ஒரு பகுதி மக்களும், இன்னொரு பகுதி மக்களும் பயங்கரமா மோதிப்பாங்களாம். அதுல வெற்றிக்கொடி நாட்டுகிற குழுவினர், தோற்றுப்போனவங்களை தங்களோட அடிமையா ஆக்கிக்குவாங்க. அப்படி அடிமைகளா இருக்கிறவங்களை அடிக்கடி தொந்தரவு பண்ணி ஜாலியா விளையாடுவாங்களாம். அதுவும் எப்படீன்னா, உயரமான மலைகளில் இருந்து அடிமைகளை தள்ளி விட்டு விளையாடுங்களாம்!

(என்னடா கொடுமை இது?!) இதுதான் அப்போதைய மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாம்!

இன்னொரு வித்தியாசமான விளையாட்டும் இருந்துச்சு.

அது கி.மு.264-ல் வாழ்ந்த ரோம் நகரத்து அரசர்கள், தங்களுக்கு பொழுது போகவில்லையென்றால் (?!) நேராக சிறைக்குச் செல்வார்களாம். இது என்ன வித்தியாசமாக இருக்குன்னு நினைக்கிறீங்களா..?! இதில் இல்லே வித்தியாசம். இனிமேல்தான் இருக்கு.

சிறைக்கு போனவுடன் அங்கிருக்கிற கைதிகளை வரிசையாக நிற்க வைக்கச் சொல்லி உத்தரவிடுவார்களாம். பின்னர் சிறைக்குள் இருக்கும் மைதானத்தில் தன்னந்தனியே நிற்கும் சிங்கமோ, அல்லது காளையையோ, கைதி தனியாகப் போய் அடக்க வேண்டும். அப்போது கையில எந்த ஆயுதமும் இருக்காது. இருக்கவும் கூடாது. இதை அரசர் ஜாலியாக மாடத்தில் உட்கார்ந்து பார்த்து ரசிப்பாராம். இதுல இன்னொரு அதிசயமும் அவ்வப்போது நடக்குமாம்!

அதாவது, அரசரின் பொழுதுபோக்குக்காக சிறை மைதானத்துல நடக்குற இந்த வித்தியாசமான விளையாட்டை பார்க்க சிலசமயம் பொதுமக்களுக்கும் அனுமதி கிடைக்குமாம்! இதுல எப்பவும் போல சிங்கத்துகிட்டே கடிபட்டு கைதி துடிதுடித்து இறந்து போவான். இதை எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிப்பார்களாம்!

இப்படியெல்லாம் விளையாட்டு இருந்துச்சு. அதேமாதிரி பிரிட்டிஷ்காரர்களிடம் நம்ம நாடு அடிமைபட்டு இருந்தப்போ, அவங்களுக்கு என்ன மாதிரியான பொழுதுபோக்கு இருந்துச்சு தெரியுமா...?!

காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிகிற யானைகளை துரத்தி துரத்தி பிரிட்டிஷ்காரர்கள் வேட்டையாடுவார்களாம். இதுக்கு அடிமைகளாக வெச்சிருந்த நம் முன்னோர்களையும் கூடவே அழைச்சுட்டுப் போவாங்களாம். தூரத்துல போய்ட்டு இருக்குற யானை கூட்டத்தை கலைச்சுட்டு நேராக ஓடணும்னுட்டு அடிமைகளுக்கு உத்தரவிடுவாங்களாம்.

அடிமைகள் ஓட ஆரம்பிச்சதும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவாங்களாம். துப்பாக்கி சத்தத்தை கேட்டு யானைகள் எல்லாம் மிரண்டு போய் நாலாபக்கமும் சிதறி ஓட ஆரம்பிக்கும். அப்போது சரியாக யானைகளிடம் நம்மவர்கள் மாட்டிக் கொள்வார்களாம். அப்புறம் நமது முன்னோர்களின் நிலைமை அதோகதிதான்!

சிலசமயம் கூட்டத்துல இருக்குற ஒரு யானையை மட்டும் பிடிச்சுட்டு வரச்சொல்லி ஒரு அடிமையை அனுப்புவாங்களாம். அப்போது யானை கூட்டமே அந்த அடிமையை நன்றாக பதம் பார்த்து விடும். இதை பார்த்து ரசித்து சந்தோஷப்படுவார்களாம் பிரிட்டிஷ்காரர்கள்.

இது நம்ம பக்கத்து மேட்டர்..! ஆனைமலையில இருக்குற தேயிலை தோட்டத்துல வேலை பார்க்க பாளையங்கோட்டை, கயத்தாறு பகுதியில இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான ஏழை மக்களை பிரிட்டிஷ்காரர்கள் அழைத்து வருவார்களாம். தேயிலை தோட்டத்துல வேலை பார்க்க கஷ்டமா இருக்குமாம். சிலர் அங்கிருந்து தப்பிச்சுப்போக முயற்சி செய்வாங்களாம். அப்போ பிரிட்டிஷ்காரங்ககிட்டே மாட்டிகிறவர்கள் பாடு திண்டாட்டம்தான்!

தப்பிச்சு போறவங்களை புடிச்சுட்டு வந்து மரத்துல கட்டி வெச்சு சாகற வரைக்கும் சவுக்காலே அடிப்பாங்களாம். இதுதான் அப்போதைய பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்கு விளையாட்டாம்!

இன்னொரு பயங்கரமான விளையாட்டு பழைய கிரேக்கத்துல இருந்துச்சு. அதாவது யாராவது திருடிவிட்டால் அவ்வளவுதான்! மரண தண்டனை நிச்சயம்! அதுவும் எப்படின்னா, குற்றவாளியை ஊருக்கு பொதுவான இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள். மன்னர் உள்பட பொதுமக்கள் எல்லோரும் சுற்றிலும் கூட்டமாக நிற்பார்கள் வேடிக்கை பார்க்க...அப்போது வேகமாக குதிரையில் வரும் வீரன், நிற்க வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளியின் தலையை ஒரு ‘வீச்’! அவ்வளவுதான்...

பின்னர் தரையில் உருண்டு விழுந்த தலையை மக்கள் எல்லோரும் கால்பந்து மாதிரி உதைத்து விளையாடுவார்களாம். இவை எல்லாம் நாகரிகம் வளர வளர மறைந்தது. பிறகு வந்ததுதான் இப்போதைய நட்பு முறை விளையாட்டுகள் எல்லாம்.