டெஸ்ட் பேப்பர்...பயமுறுத்தும் அசைன்மென்ட் பேப்பர். நினைச்சாலே டென்ஷன் பண்ணும் பட் சுட்டீஸ் எல்லோருக்கும் எப்பவுமே பிடிச்ச பேப்பர்னா அது ஜிகினா பேப்பர்தான். சின்ன வயசுல ராஜா ராணி கதைகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் ரொம்பவே ஈர்ப்பது கலர் கலரான ஜிகினா பேப்பர் க்ரீடம்தான்.
அதுமட்டும் இல்லை... அதுக்குள்ள நிறைய சென்டிமென்ட்சும் இருக்கு.
சாக்லேட், ராப்பர் எல்லாமே ஜிகினா பேப்பர்ல வர்றதுக்கு காரணம் இதுதான். அந்த ஜிகினா பேப்பரை எடுத்து பத்திரமா நோட் புக்ல வச்சுக்காத சுட்டீஸ் இருக்கவே முடியாது. ஜிகினா பேப்பரை அவங்கவங்களுக்கு பிடிச்ச பக்கத்துலதான் வைப்பாங்க. எந்த பக்கத்தில் ஜிகினா பேப்பர் வைக் கிறோமோ... அந்த பக்கத்தில் இருந்து தேர்வுக்கு கேள்விகள் வரும் என்றும், அந்த பாடத்தில் மதிப்பெண் அதிகம் கிடைக்கும் என்பதும் சுட்டிகளின் சென்டிமென்ட்.
பரிசுப் பொருள் சுற்றி வரும் கிஃப்ட் ராப் பருக்கும் இப்படி எக்கச் சக்க சென்டிமென்ட்ஸ் உண்டு. தங்க நிற ஜிகினா பேப்பர் வைத்துக் கொள்பவர்கள், முதல் ராங்க் வாங்குவார்கள் என்றும், வெள்ளி நிற ஜிகினா பேப்பர் வைத்திருந்தால்... போட்டிகளில் பரிசு கிடைக்கும் என்றும், பிங்க் அல்லது சிவப்பு நிற ஜிகினா பேப்பர் வைத்திருந்தால்... வேண்டியது கிடைக்கும் என்றும், நீல நிற ஜிகினா பேப்பர் இருந்தால் |