Published:Updated:

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

Published:Updated:

நியூ ஸ்போர்ட்ஸ் !

சபாஷ் மேரி !

நியூ ஸ்போர்ட்ஸ் !

இந்தியாவின் பெருமை மிகு வீராங்கனை, சமீபத்தில் பர்படாஸ்ஸில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் ருமேனியாவின் 'ஸ்டெலுடா டுடா’வை 16-6 என்ற கணக்கில் வெற்றி கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோமுக்கு வயது 27. இரண்டு சுட்டிகளுக்கு அம்மாவான இவர், இப் பட்டத்தை, தொடர்ந்து ஐந்தாவது முறையாகப் பெற்று சாதனை புரிந்திருக்கிறார்.


டேவிஸ் கோப்பை !

சென்னையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டி தகுதிச் சுற்றில்... இந்தியா பிரேசிலுடன் ஆடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூ ஸ்போர்ட்ஸ் !

இப்போட்டியில், இந்தியாவின் சார்பில் ரோஹன் பொப்பன்னாவும், சோம்தேவ் வர்மனும் ஒற்றையர் போட்டியிலும் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் இரட்டையர் பிரிவிலும் ஆடினார்கள்.

முதல் நாள் நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளில்... இந்தியா பிரேசிலிடம் தோற்றுவிட்டது. அடுத்த நாள் நடைபெற்ற இரட்டையர் போட்டியில், இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பயஸ் பூபதி ஜோடி, அபாரமாக ஆடி வெற்றி பெற்றனர். இறுதிக் கட்டமாக நடைபெற்ற போட்டியில், ரோஹன் பொப்பண்ணா பிரேசிலின் 'ரிக்கார்டோ மெல்லோ’வை நேர் செட்களில் தோற்கடித்தார். சோம்டேவ் வர்மனை எதிர்த்து ஆடிய தாமஸ் பெலூச்சி, ஆட்டத்தின் இடையிலேயே விலகிவிட்டார்.

இந்தியா, இப்போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது.

மார்ச் 2011-ல் நடைபெறும் போட்டியில்... செர்பியாவை எதிர்த்து இந்திய அணி ஆடும்.

படம் பொன்.காசிராஜன்


சாம்பியன்ஸ் லீக் 'சாம்பியன்ஸ் '!

தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற டி20 சாம்பியன்ஸ் லீக் போட்டியில்... கூல் கேப்டன் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

நியூ ஸ்போர்ட்ஸ் !

முதலில் ஆடிய வாரியர்ஸ் அணி 126 ரன்களுக்கு சுருண்டுவிட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரெண்டு விக்கெட் இழப்பில், ஒரு ஓவர் மீதம் இருக்கும்போது எளிதில் ரன்களை எட்டிவிட்டனர்.

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்றது. சென்னை அணியின் முரளி விஜய், இந்தத் தொடரில் 294 எடுத்து, அதிக ரன்கள் அடித்ததற்காக 'கோல்டன் பேட்’ விருதினைப் பெற்றார்.

அதேபோல சென்னை அணியின் அஷ்வின், நூற்று ஐம்பத்தியிரண்டு ரன்களைக் கொடுத்து பதிமூன்று விக்கெட்களை வீழ்த்தி, பந்து வீச்சில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.


மல்யுத்த மன்னன் !

சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற 66 கிலோ பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில்... சுஷில் குமார் பதக்கம் வென்றுள்ளார்.
மல்யுத்தத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ரஷ்யாவில், அந்நாட்டு 'ஆலன் கோகேவ்’வை 3-1 என்ற கணக்கில் வென்றதின் மூலம், இந்தியாவுக்குப் பெருமை சேர்த் திருக்கிறார் சுஷில் குமார்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

இருபத்தியேழு வயதாகும் சுஷில் குமார், காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டி களிலும் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

மல்யுத்தப் போட்டியில் உலகப் பட்டத்தைப் பெறும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism