Published:Updated:

சிக்கு.. புக்கு.. குக்கு..

சிக்கு.. புக்கு.. குக்கு..

சிக்கு.. புக்கு.. குக்கு..

சிக்கு.. புக்கு.. குக்கு..

Published:Updated:

சிக்கு புக்கு குக்கு !

சிக்கு.. புக்கு.. குக்கு..

ஹாய் சுட்டீஸ், இந்த இதழில் நாம் பார்க்கப் போவது வாழை என்ற முழு தாவரத்தை. வாழை மரத்தில் உள்ள தண்டு, பூ, காய், பழம் எல்லாமே நாம் உண்ணக் கூடிய அதுவும் நன்மை தரக்கூடிய பொருட்கள். அதன் நன்மை களைப் பற்றி ஒவ்வொன்றாகக் கூறுகிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

வாழைப்பூ இதில் நார்ச்சத்து அதிகம்.

ஸோடியம், பொட்டாஷியம் போன்ற தாது உப்புக்களும் நிறைய உண்டு.

இரும்புச் சத்து குறைவாகத் தான் இருக்கிறது.

மோவுச்சத்து குறைவாகத்தான் இருக்கும். இதனால் எடையைக் குறைக்க நினைப் பவர்களும், சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.

அதே நேரம் இதைத் தொடர்ந்து சாப்பிடுவ தால் கிட்னியில் கல் உருவாகும். அதனால் வாழைப்பூ சாப் பிட்டால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

வோழைப்பூவில் பொரியல், பச்சடி, வடை, பருப்பு உசிலி போன்றவை செய்யலாம்.

வாழைக்காய் மோவுச் சத்தும், இரும்புச் சத்து நிறைய இருக்கிறது.

ப்ரோட்டீன் குறைவுதான்.

தோது உப்புக்கள், வைட்டமின்-சி போன்றவை தேவையான அளவு கிடைக் கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கு.. புக்கு.. குக்கு..

வோழைக் காயில் காரப்புட்டு, பொரியல் போன்றவை செய்யலாம்.

வாழைப்பழம் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது வாழைப் பழம். சோர்வாக இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் உடனே ஆற்றல் கிடைக்கும்.

இதய நோய் உள்ளவர்களுக்கு வாழைப் பழம் ரொம்பவே நல்லது.

வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், இரும்புச் சத்து எல்லாம் வாழைப்பழத்தில் தேவையான அளவு இருக்கின்றன.

உணவு செரிமானத்துக்கு உறுதுணையானது.

சேர்க்கரை நோயாளிகள் தவிர்த்தே ஆக வேண்டிய பழம் இது.

வோழைப்பழத்தை வெறுமனே சாப் பிடலாம். அல்லது ஃப்ரூட் சாலட், மில்க்ஷேக், கஸ்டர்ட் செய்தும் சாப்பிடலாம்.

பூவன் பழத்தில் நார்ச் சத்து அதிகம். கற்பூரவல்லி, ரஸ்தாலி, செவ்வாழை போன்றவற்றில் மாவுச் சத்து அதிகம்.

வாழைத் தண்டு நோர்ச் சத்து மிக மிக அதிகம்.

மோவுச் சத்து குறைவு.

கிட்னியில் கல் இருப் பவர்கள் வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிட்டால் கல் மறைந்துவிடும். ஒரே தாவரத்திலேயே கல்லை உருவாக்கவும், அதை குணப்படுத்தவும் விஷயங்கள் இருப்பது ஆச்சர்யம்தான்.

வோழைத் தண்டைப் பொரியல், பச்சடி செய்யலாம்.

வேக வைத்து மிளகு சேர்த்து சூப் ஆக்கலாம்.

சிக்கு.. புக்கு.. குக்கு..

பேச்சையாக அரைத்து சாறு பிழிந்து மோர் சேர்த்து ஜூஸ் செய்யலாம்.

வாழை இலை வோழையின் இத்தனை விஷயங்களைப் பார்க்கும்போது வாழை இலையை மட்டும் விட முடியுமா?

வோழை இலையில் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள வைட்டமின் சி, தாது உப்புக்கள் போன்றவை உடலுக்குள் சேர்கின்றன. அதோடு உணவில் உள்ள இரும்புச் சத்தும் முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.

வாழை சார்ந்த இரண்டு ரெஸிபிக்களைத் தந்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

வாழைக்காய் முறுக்கு!

தேவையானவை வாழைக்காய் - 2 - 400 கி, பொட்டுக்கடலை மாவு - 50 கி, அரிசிமாவு - 50 கி, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

சிக்கு.. புக்கு.. குக்கு..

செய்முறை வாழைக்காயை வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற சாமான்களையும் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில்... மிதமான தீயில், வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை போட்டுப் பிழிந்து, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். ரொம்பவும் வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த முறுக்கு.

கிடைக்கும் சத்துக்கள்

கார்போஹைட்ரேட் - 128 கிராம்
ப்ரோட்டீன் - 19 கி
கொழுப்பு - 114 கி
ஆற்றல் - 1525 கிலோ கலோரி
கால்சியம் - 92 மில்லி கி
இரும்பு - 29.3 மி. கி
பீட்டா கரோட்டின் - 185 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் -140 மை. கி

டயட்டீஷியன் கமென்ட்ஸ் நல்ல ஆற்றல் மிகுந்த உணவு. ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து எல்லாம் தேவையான அளவில் இருக்கிறது. இது ஒரு சுவையான சமச்சீர் உணவு!

வாழைத்தண்டு பச்சடி!

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப் - 300 கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன் - 5 கி, கொரகொரப்பாக பொடித்த மிளகு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - 2 கப் - 200 மில்லி

செய்முறை வாயகன்ற பாத்திரத்தில் தயிருடன் மற்ற சாமான்களைச் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கிப் பரிமாறவும். உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான ஒரு பச்சடி இது.

கிடைக்கும் சத்துக்கள்

கார்போஹைட்ரேட் - 37 கிராம்
ப்ரோட்டீன் - 9 கி
கொழுப்பு - 15 கி
ஆற்றல் - 320 கிலோ கலோரி
கால்சியம் - 370 மில்லி கி
இரும்பு - 7.7 மி. கி
பீட்டா கரோட்டின் - 780 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 14 மை. கி
கொலின் - 10 மி. கி
வைட்டமின் சி - 7
டயட்டீஷியன் கமென்ட்ஸ்

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism