தபால்தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதன் மூலம் உலக நாடுகள் பற்றியும் அவற்றின் மொழி, அறிவியல் வளர்ச்சி, சமுக கலாச் சாரங்கள், இயற்கை அமைப்பு இப்படி பல விஷயங்களையும் தெரிந்துகொள்ளாம். இதன் மூலம் நீங்கள் பொது அறிவில் வல்லவர் களாக முடியும். இதுபோன்ற ஒரு சிறந்த பொழுதாக்கத்தை (Hobby) கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல தொடர்புகளும், நட்பும் கண்டிப்பாக கிடைக்கும். என்கிறார்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கிரிக்கெட் அணியின் வீரராக இருப்பதால், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் தொடர்பான தபால்தலைகளும் இவரது ஆல்பங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ராஜேஷ் தபால்தலைகள் சேகரிப்பதுடன் நில்லாமல் காந்திஜியின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் அந்த தேதி, மாதம், ஆண்டைக் குறிக்கும் எண்களை சீரியல் எண்களாகக் கொண்ட கரன்சிகளையும் சேகரித்து வைத்திருக்கிறார். "இதுபோல, வி.ஐ.பி.க்களின் பிறந்த நாட்களைக் குறிக்கும் கரன்சிகளை சேகரித்து, ஸ்பெஷல் அட்டையில் ஒட்டி, அந்த வி.ஐ.பி.க்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது ரொம்பவே த்ரில்லாகவும், வி.ஐ.பி.களிடம் நெருங்கிய நட்பையும் ஏற்படுத்தித் தரும். இப்படி கரன்சிகளைச் சேர்ப்பது ரொம்பவும் கடினம், நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்" என்றவர்... "அதுமட்டுமல்ல... டோனி, சச்சின் ஆகியோரது பிறந்த நாட்களைக் குறிக்கும் கரன்சிகளை நான் சேகரித்து அவர்களிடம் ஆட்டோகிராப் பெற்றபோது, டோனி மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார். சச்சின் ஒரு சுட்டியைப் போலவே மாறிவிட்டார். அப்போது அவர் முகத்தைப் பார்ர்க்க வேண்டுமே அவ்வளவு மலர்ச்சி. நான் சச்சினின் சாதனைகளை வைத்து ஒரு புதிய முயற்சி செய்து வருகிறேன்... அதை அவரிடம் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாகக் கொடுக்கப் போகிறேன்" என்றவரிடம் பெஸ்ட் ஆஃப் லக் சொல்லிக் கிளம்பினோம்.
படங்கள் து.மாரியப்பன்
|