Published:Updated:

சிட்டி்யோகிராபி

சிட்டி்யோகிராபி

சிட்டி்யோகிராபி

சிட்டி்யோகிராபி

Published:Updated:

சிட்டியோகிராபி
கே.யுவராஜன்

சிட்டி்யோகிராபி

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி, பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியது உண்மைதான். அதே சமயம் அவர்களால் நன்மைகளும் விளைந்தன. நகரங்களை பக்காவாக நிர்வகித்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினர். அவற்றை அடித்தளமாக வைத்துதான் இன்று பல சாலைகளும் சிறந்த கட்டடங்களும் உருவாகியுள்ளன. சுதந்திரத்துக்குப் பின், ஆங்கிலத்தில் எழுதும்போது மெட்ராஸ் என்றும், தமிழில் எழுதும்போது சென்னை என்றும் குறிப்பிடப்பட்டேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1996 முதல் சென்னை என்று மாற்றப்பட்டேன். பல்வேறு கிராமங்கள், சிறுசிறு நகரங்களில் இருந்து மக்கள் என்னிடம் வந்தார்கள். இதனால், பல்வேறு வகையில் என்னை புதுப்பித்துக் கொண்டேன்.

மக்கள்தொகை அதிகமானால், (தற்போது சென்னையில் சுமார் 84 லட்சம் மக்கள் இருக்காங்க) அவர்கள் சென்று வருவதற்கான வாகன வசதிகளும் அதிகமாக வேண்டும் அல்லவா? பேருந்துகள் தவிர, மின்சார ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1997-ல் பறக்கும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை கடற்கரை, திருவான்மியூர், வேளச்சேரி என 21 நிலையங்கள்... 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில்கள் பறந்துட்டு இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிட்டி்யோகிராபி

ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் என்னிடத்தில்தான் இருக்கு. நான் எதைச் சொல்றேன்னு தெரியுதில்லையா... கோயம்பேடு பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம்தான் அது. 37 ஏக்கர் பரப்பளவில், 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2002 நவம்பர் 18-ல் திறக்கப்பட்டது. இங்கே, ஒரே நேரத்தில் 270 பஸ்களை இயக்கலாம். ஒரு நாளைக்கு சுமாரா 2000 பஸ்கள் போய்ட்டு வருது. சுமாரா இரண்டு லட்சம் பேர் பயணிக்கறாங்க. ஐ.எஸ்.ஓ. 90012000 தரச் சான்றிதழும் இதுக்கு கிடைச்சிருக்கு. அடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையம். இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்து அதிகமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தறது இங்கேதான். 2005-ல் பத்து மில்லியன் மக்களும், 2007-ல் 12 மில்லியன் மக்களும் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி இருக்காங்கன்னா பார்த்துக்கங்க.

1990 முதல், இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரமா நான் வளர ஆரம்பிச்சேன். தரமணியில் 2000-ல் தொடங்கின 'டைடல் பார்க்' ஆசியாவிலேயே பெரியது. 1,19,000 சதுர பரப்பளவில் அமைந்திருக்கு. இந்தியாவின் வாகன உற்பத்தியிலும் நான்தான் நம்பர் ஒன். டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹ¨ண்டாய், ஃபோர்டு, மிட்சுபிஷி இப்படி உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் என்னைச் சுற்றியும் இருக்கு. இங்கே தயாராகற வாகனங்கள் இந்தியா முழுக்க போகுது. அம்பத்தூரில் உள்ள சைக்கிள் தொழிற் சாலைகளும் மற்ற தொழிற் சாலைகளும் பொருளா தாரத்தில் முக்கிய பங்கு வகிக்குது. அது மட்டுமா... ஆவடியில், இந்திய ராணுவம் தொடர்பான சில கிளைகள் இருக்கு. போரில் பயன்படுத்தும் முக்கிய ஆயுதமான 'அர்ஜூன் பீரங்கி' இங்கேதான் தயாராகுது.

சிட்டி்யோகிராபி

கல்வி சம்பந்தமாவும் பல சிறப்புகள் என்கிட்ட இருக்கு. பல பல்கலைக்கழகங்கள் இங்கே இருக்கு. முக்கியமா அண்ணா பல்கலைக்கழகம். இது நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கு. கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 1978-ல் இந்த பல்கலைக்கழகம் உருவானது. பிறகு 2001-ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இந்த கல்லூரியின் கீழ் இணைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் என பல பிரபலங்கள் இந்த கல்லூரியின் மாணவர்கள்.

படிப்பு ஓகே... விளையாட்டு? 40,000 பேர் அமர்ந்து ஃபுட்பால் மேட்ச் பார்க்கும் வகையில் நேரு விளையாட்டரங்கமும், 50,000 பேர் பார்க்கும் வகையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானமும் நம்மகிட்ட இருக்கில்லே. 1952 ஆம் வருடம் இங்கிலாந்துக்கு எதிரா நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இங்கேதான். அதுதான் இந்தியா வின் முதல் டெஸ்ட் வெற்றி.

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, தனியார் பொழுதுபோக்குப் பூங்காக்கள்... இதைப் பத்தி எல்லாம் நீங்க ஏற்கெனவே தெரிஞ்சு வெச்சிருப்பீங்க.

இன்னும் என்ன சொல்றது... சமீபத்தில் கோட்டூர்புரத்தில் அண்ணா பிறந்த நாளில் 200 கோடி செலவில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் தொடங்கப்படவுள்ள ஆசியாவின் பெரிய தாவரவியல் பூங்கா, திட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம்...

போதும் சுட்டீஸ்! என்னைப் பத்தி நானே புகழ்ந்துட்டு இருக்கறது கூச்சமா இருக்கு. இதோடு நிப்பாட்டிக்கறேன். இதுவரை தமிழ்நாட்டின் தலைநகரைப் பத்தி தெரிஞ்சுகிட்டீங்க. அடுத்து, இந்திரபிரஸ்த்தம் அவர்களை பேச வருமாறு அழைத்து, விடைபெறுகிறேன் நன்றி... வணக்கம்!

அது யாரு?

(அது யாரு? அடுத்த சுட்டியில்...)

சிட்டி்யோகிராபி
உலகின் சிறந்த காவல்துறைகளில் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது... தமிழ்நாட்டுக் காவல்துறை. 1659-ஆம் ஆண்டில் மீனவ கிராமமாக இருந்தபோது... தங்கள் ஊரையும், உடைமைகளையும் பாதுகாக்க... 'பெட்டநாயக்' என்பவர் சில ஆட்களை நியமித்தார். அவர்களுக்கு சம்பளமும் அளித்தார். அதுவே, 1780-ல் மதராசபட்டினமாக வளர்ந்த நிலையில்... சரக்குகளைப் பாதுகாப்பவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் என்ற பதவி உயர்வு தரப்பட்டது. பிறகு மேலும் விரிந்து, நகரின் பல இடங்களில் காவல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது சென்னையில் 90 காவல் நிலையங்கள் உள்ளன.

பெயர்க் காரணம்!

ஜி.ஏ.சேம்பர்ஸ் என்பவர் 1884-ல் மதராசபட்டினத்துக்கு வந்தார். தோல் பதனிடும் தொழிலில் சிறந்து விளங்கிய அவர், இங்கே சில காலம் தோல்களை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார். பிறகு, 25 ஏக்கர் பரப்பளவில் ஓர் இடத்தை வாங்கி, 1903-ல் 'க்ரோம் லெதர் கம்பெனி' என்ற தோல் பதனிடும் தொழிற்சாலையை ஆரம்பித்தார். அதுவே... குரோம்பேட்டை!

1837 ஆம் ஆண்டுகளில் முஸ்லீம்கள் ஓரிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகையின் போது கூடி, ஆயிரம் விளக்குகளை ஏற்றுவார்கள். அதுவே, அண்ணாசாலையை ஒட்டியுள்ள பிரபலமான ஆயிரம் விளக்குப்(Thousand light) பகுதி!

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism