Published:Updated:

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

Published:Updated:
ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !
ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

மதுரை பள்ளி மாணவர்கள் மத்தியில் விண்வெளி தொடர்பான வளர்ச்சிக்கு மாணவர்களை தயார்படுத்தவும், எதிர் காலத்தில் செயற்கைக்கோள் மற்றும் விண் கலங்கள் உருவாக்கும் கனவை அவர் களிடம் உண்டாக்கவும், மதுரை மிட் டவுன் ரோட்டரி சங்கம் ஒரு கட்டுரைப் போட் டியை நடத்தியது. அச்சங்கத்தின் இன்ட்ராக்ட் அமைப்பு, 'எனது கனவு விண்கலம்' (My dream satellite)

என்ற தலைப்பில் நடத்திய இப் போட்டியில்... சிறப்பான கட்டுரை எழுதிய 14 மாணவ, மாணவிகள் மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற (மதிப்பெண்) மாணவிகள் ஆகியோரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (ISRO) அழைத்து சென்றது. அப் போட்டியில் விவசாயத்துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச் சிகள் செய்யும் பல நாடுகளின் விண்கலன் களை, மொத்தமாக ஒரே சாட்டிலைட் மூலம் இந்தியா அனுப்பலாம் என எழுதிய கட்டுரைக்காக நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். எங்களது குழு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு விஜயம் செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !

43,360 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்ற ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கி வருகிறது 'சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம்'. எங்கள் குழு முதலில் இயந்திரக் கட்டுமான மையம் (Mission Control Center)எனப்படும் முக்கிய இடத்துக்குச் சென்றது. அங்கேதான் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகள், பல்வேறு வகையான செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவார்கள். அந்த மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 30 நிமிட திரைப்படமாகக் காண்பித்து விளக்கி னார்கள். ராக்கெட் மோட்டார் பரிசோதிக்கும் கூடத்தையும் கண்டோம். விண்கலத்தை நல்ல முறையில் விண்வெளியில் செலுத்திட மிகவும் முக்கியப் பங்காக செயற்கைக்கோளில் ராக்கெட் மோட்டார்கள் அமைந்துள்ளன.

1990-ல் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஏவுதளத்தின் (Frist Launch Pad) உயரமான கோபுரத்தில் ராக்கெட் உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து, முழுமையான ராக்கெட்டை உருவாக்கி, அதிலிருந்து விண்வெளியில் ஏவப்படுகிறது. இங்கிருந்து நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் இதுவரை ஏவப்பட்டு இருப்பது சிறப்பம்சமாகும். அடுத்து, இரண்டாவது ராக்கெட் ஏவுதளம், ராக்கெட்டை முழு உருவமாக அதன் முழுமையான வடிவத்தில் செங்குத்தாக தனியாக தயாரித்து, பிறகு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம் வரை அவை வாகனத்தின் மூலம் நகர்த்தப்பட்டு ஏவக்கூடிய வகையில் அதி நவீன ஏவுதளமாக அமையப் பெற்றது. 'சந்திரயான்' செயற்கைக்கோள் இங்கிருந்துதான் ஏவப்பட்டது. அதை நினைக்கும் போது எங்கள்உடல் பெருமையால் சிலிர்த்தது. அடுத்து நாங்கள் சென்றது... ராக்கெட்டை கண்காணிக்கும் ரேடார் வசதி மையம். ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து, அதன் ஆயுட்காலம் வரை தனித்தனியாக கண்காணிக்கப்படுவது இந்த இடத்தில்தான். இந்த ரேடார் மையத்தின் மூலமும் இதே போன்று பெங்களூர், பீகார் மற்றும் மொரீசியஸ் நாட்டில் அமையப் பெற்ற ரேடார் கருவிகள் மூலமும், இந்தியா செலுத்தி இருக்கும் அனைத்து ராக்கெட்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

"இந்தியா 2013-2015-க்குள் மனித செயற்கைக்கோளை(Maned Satellite) விண்ணில் செலுத்தும்"என்றார் சேஃப்டி ரேஞ்சர் வி.கே. ஸ்ரீவத்சவா.

இறுதியில், இஸ்ரோவின் நூலகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ரவீந்திரநாத் அவர்களிடம் நாங்கள் எழுதி வெற்றி பெற்ற 'எனது கனவு விண்கலம்' கட்டுரைகளை மதுரை மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர் களுடன் இணைந்து வழங்கினோம்.

மதுரை மிட் டவுன் ரோட்டரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அரிய திட்டம் ரோட்டரி வரலாற்றிலும் மதுரை பள்ளிகளின் வரலாற்றிலும் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது!

ISRO -க்குப் போன சுட்டி ஸ்டார் !


 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism