இந்த தினத்துக்கு வித்திட்ட, பிரான்ஸிஸ் அசிசி 1181 - 1182-ல் இத்தாலியில் பிறந்தவர். தந்தை பியட்ரோ டி பெர்னாடன் துணி வணிகத்தில் சிறந்து விளங்கியவர். தாய் பிகா பூர்லமொன்ட். பிரான்ஸிஸ் பிறந்த சமயத்தில், தந்தை வியாபார விஷயமாக பிரான்ஸ் சென்றிருந்தார். தாய்க்கு தனது மகன் கிறிஸ்துவ மத போதகராக வரவேண்டுமென ஆசை. அதனால், கிறிஸ்துவப் பெரியவரான ஜெவானி டி பெர்னாடன் என்ற பெயரை வைத்தார். ஆனால், தந்தையோ பெரிய வியாபாரியாக மகன் விளங்க வேண்டும் என்று விரும்பினார். மகனுக்கு பிரான்செஸ்கோ என்று பெயரிட்டார். பிரான்ஸிஸ், ஆரம்பத்தில் ஆடம்பரமும், அமர்க்களமுமாக வளர்ந்தார். பிறகு ஏழைகளின் துயரைக்கண்டு, உதவ ஆரம்பித்தார். தந்தையோடு வியாபாரத்தில் ஈடுபடும்போது, பல சமயங்களில் துணிகளை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவார். இதனால், தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படும். 1201-ஆம் ஆண்டு புருசியாவுக்கு எதிராக இத்தாலி போர் தொடுத்தபோது... படையில் சேர்ந்தார். எதிரிகளிடம் பிடிபட்டு, கைதியாக சிறையில் இருந்தார். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் அவரை பொதுச்சேவைப் பக்கம் திருப்பியது. விடுதலையான பிறகு, இத்தாலியில் உள்ள அசிசி திருச்சபையில் சேர்ந்தார். இயற்கையின் மீது ஆர்வம் உண்டானது. பறவைகளையும், விலங்குகளையும் அன்புடன் நடத்தினார். அவற்றைப் பாதுகாக்க பிரச்சாரம் செய்தார். விலங்குகள், பறவைகளின் தெய்வம் என்றே இவரை அழைத்தனர். 1226 அக்டோபர் 3-ஆம் தேதி மரணமடைந்தார். அடுத்த இரண்டாவது ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கிடைத்தது. இவர் நினைவாகவே அக்டோபர் நான்காம் தேதி வனவிலங்குகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பிற உயிரினங்களைப் பாதுகாப்பது கடமை என்றால், நம்மை எதிரி நாடு களிடமிருந்து காத்துக்கொள்வதும் முக்கியம். அதை ஒவ்வொரு நாடும் ராணுவம் மூலம் செய்கிறது. நம் இந்தியாவும் ராணுவ பலத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே செல்கிறது. தரைப் படை, கப்பல் படை, விமானப் படை என முப்படைகள் இருப்பது தெரியுமல்லவா? அதில் இந்திய விமானப் படை தினம், அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம், விமானப் படையின் பல்வேறு சாகசங்கள் நடக்கும். விமானப் படையில் பணிபுரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்படும்.
|