Published:Updated:

நண்பேன்டா !

நண்பேன்டா !

நண்பேன்டா !

நண்பேன்டா !

Published:Updated:

நாங்க எதிரிங்க இல்லை...நண்பேன்டா !
கார்த்திகா குமாரி

நண்பேன்டா !

"படம் பார்த்த நிறைய பேர் சொன்னாங்க... 'நல்லா நடிச்சிருக்கீங்கடா... கண்டிப்பா நிறைய அவார்டு வாங்கு வீங்க'ன்னு. நாங்களும் எதிர்பார்த்தோம். ஆனா, நேஷனல் அவார்டே கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கலை..." என்று ஒரே குரலில் சொல்கிறார்கள் அன்புவும், ஜீவாவும். இல்லை... இல்லை, கிஷோரும், ஸ்ரீராமும் - சென்ற வருடம் வெளியான குழந்தைகள் திரைப்படமான 'பசங்க' படத்தின் நாயகர்கள். அதிக சந்தோஷமோ, அதீத பெருமையோ இல்லாமல், இயல்பாகவும் நான்-ஸ்டாப்பாகவும் பேசுகிறார்கள் இந்த சுட்டிகள்.

"போன வருடம் மே ஒண்ணாம் தேதி எங்களுக்கும், தமிழகச் சுட்டிகளுக்கும் கோடை விடுமுறை சிறப்புப் பரிசா, 'பசங்க' படம் ரிலீஸ் ஆச்சு. இந்த வருஷம் எங்களுக்கு இந்த விருது தான் ஸ்பெஷல் கிஃப்ட். முன்ன எல்லாம் எங்களுக்கு கிஷோர்,

ஸ்ரீராம் என்பது மட்டும் தான் பெயரா இருந்துச்சு. இப்போ எங்கே போனாலும் அன்பு, ஜீவான்னுதான் கூப்பிடறாங்க. அவ்வளவு ஏன், கிளாஸ்ல அட்டன்டென்ஸ் எடுக்கும்போது, 'கிஷோர்'னு கூப்பிட்டா... அது என்னைத்தான் அப்படின்னு ரெஜிஸ்டர் ஆகவே... நிறைய நாளாச்சு. அந்த அளவு அன்பு எனக்குள்ளே ஸ்டூல் போட்டு உட்கார்ந்திட்டான்" என்று பெருமிதமாகச் சொல்லும் கிஷோர், இப்போது சென்னை குமாரராணி மீனா முத்தையா பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறான்.

"எனக்கு அந்தக் கவலை இல்லை... நான் சின்ன வயசில் இருந்து வீட்டில் ஹோம் டியூஷன் முறையில்தான் படிக்கறேன். எனக்கும் என் தம்பிக்கும் மட்டும்தான் அட்டன்டென்ஸே... இப்போ, நைன்த் ஸ்டாண்டர்டு. ஒரு காமெடி தெரியுமா? என்னோட முதல் படம் 'கற்றது தமிழ்'. அதில் ஜீவா அண்ணாவோட சின்ன வயசு கேரக்டரா நடிச்சிருந்தேன். நான் லீட் ரோலில் நடிக்கற முதல் படத்தில் என் பேரே ஜீவாதான்" என்று சொல்லி சிரிக்கும் ஸ்ரீராம், அந்தப் படத்தில் நடித்ததன் மூலம்தான் பசங்க வாய்ப்பைப் பெற்றான்.

"என்னோட கதை வேற... ரெண்டு வருஷம் முன்னாடி நான் 'ஸ்ப்ரிங் போட்ஸ்' டான்ஸ் கிளாஸில் டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தப்போ, நான் ஆடறதை ஒருத்தர் வீடியோ எடுத்திட்டுப் போனார். அப்போ அதை சீரியஸா எடுத்துக்கலை. யாரோ 'ஃபேன்'னு (!) நெனைச்சேன். ரெண்டு மாசம் கழிச்சு அப்பாவுக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுநாளே டைரக்டர் பாண்டிராஜ் அண்ணனைப் பார்க்கப் போனேன். டான்ஸ் ஆட, தலைகீழா நிக்கன்னு எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அத்தனையையும் செஞ்சு காட்டச் சொன்னார். நானும் எல்லா வால்தனத்தையும் பண்ணிக் காமிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். கடைசியில பார்த்தா நீதான் ஹீரோன்னு சொல்லிட்டாரு. அப்புறம் புதுக்கோட்டையில்தான் ஷுட்டிங்னு சொன்னாங்க... எனக்கு சொந்த ஊரு திருச்சி தான்னாலும் புதுக்கோட்டை வட்டார வழக்கில் பேசிப் பழக்கமில்லை. ஆனா, அங்கே போன முதல் நாளிலேயே அந்த ஊர்ப் பசங்களை மாதிரிப் பேசி சமாளிச்சிட்டேன். நான் மட்டுமில்லை. ஸ்ரீராமும் அப்படித்தான்" என்றான் கிஷோர்.

தொடர்ந்த ஸ்ரீராம், "அதுமட்டுமில்லை... படத்தில்தான் நாங்க எனிமீஸ். ஆனா, நிஜத்தில் முதல் முதல் சந்திச்ச நாளில் இருந்தே... நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நானும் கிஷோரும் மட்டுமில்லை... அந்தப் படத்தில் நடிச்ச தாரிணி, பக்கடா, குட்டிமணி எல்லோருமே எங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான்" என்றான்.

"ஆனா, ஆரம்பத்தில் மத்தவங்களைவிட நாங்க ரெண்டு பேரும் பெரிய பசங்கங்கறதால எங்களைப் பார்த்தாலே பயந்து ஓடுவாய்ங்க. அவங்களைத் துரத்திட்டுப் போய், 'நாங்க ரொம்ப நல்லவங்க'ன்னு புரிய வைக்கறதுக்குள்ள செம காமெடியாயிடுச்சு" என்றான் கிஷோர்.

"அதுக்கப்புறம் எல்லோரும் பயங்கர க்ளோஸ் ஆகிட்டோம். ஷுட்டிங் விட்டாச்சுன்னா செவன் ஸ்டோன்ஸ், கிரிக்கெட்னு ஏதாவது விளையாட ஆரம்பிச்சிடுவோம். நான் ஒரிஜினல் பவுலிங் ஸ்டைல்ல பந்து போடுவேனா... எல்லாரும் மிரண்டுருவாய்ங்க" என்ற ஸ்ரீராமை, "ஹேய், பொய் சொல்லாதே... தம்மாத்துண்டு கிரிக்கெட் பிட்ச்ல நீ ஓடி வந்து பவுலிங் போடும்போது, பேட்ஸ்மேனுக்கு ரொம்பப் பக்கத்தில் வந்திடுவே... அவனவன் முகத்தில் பந்து பட்டிரு மோன்னு தானே பயப்படு வான். அதுக்கு ஏன்டா இவ்வளவு சீன் போடறே" என்று கலாய்த்தான் கிஷோர்.

"நீ மட்டும் என்ன... எல்லாரையும் விட சீனியர்ங்கறதால எவ்வளவு சேட்டை பண்ணுவே... அதுவும் தாரிணியைக் கிட்டத் தட்ட அழவே வெச்சிடுவாங்க இவனும், பக்கடா, குட்டி மணியும்" என்றான் ஸ்ரீராம்.

"சரி, சரி ஓவரா உண்மையை வெளியிட வேணாம். எனக்கு கிரிக்கெட், ஃபுட்பால், டேபிள்டென்னிஸ், செஸ்னு ஏகப்பட்ட கேம்ஸ் விளையாடத் தெரியும். ஸ்விம்மிங், டான்ஸிங் பண்ணுவேன். ட்ரம்ஸ் வாசிப்பேன். தமிழில் துரோகி, ஒரு தெலுங்கு படம், நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ், விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். உன்னைப் பத்தி சொல்லு ஸ்ரீராம்" என்றான் கிஷோர். "எனக்கு க்ராஃப்ட் வொர்க் பண்றது, குக்கிங் இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். தீராத விளையாட்டுப் பிள்ளை, தமிழ்ப்படம் என ரெண்டு படத்தில் நடிச்சிருக்கேன். அதுபோக நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ், விளம்பரங்கள் நடிச்சிட்டிருக்கேன். ஒரு அரசாங்க ஆவணப் படத்தில் ஜூனியர் அப்துல் கலாமாகவும் நடிச்சிருக்கேன்" என்ற ஸ்ரீராம் தொடர்ந்து, "பசங்க படத்தில் நடிச்சதுக்கப்புறம் நிறைய அவார்ட்ஸ், ஏகப்பட்ட பாராட்டுகள்... ஆனா, எல்லாத்தையும்விட முக்கியமான விஷயம் எங்க நட்பு. இப்போகூட கிஷோர் என்ன தெரியுமா சொல்லி இருக்கான்... 'அடுத்த வருஷம் டென்த் ஸ்டாண்டர்டை நீ ஸ்கூல்லதான் படிச்சாகணும். மெட்ரிக் எடுத்தேன்னா நான் உனக்கு சொல்லித்தர்றேன்' அப்படின்னு... வெறுமனே ஷுட்டிங் மேட்ஸா இல்லாம நல்ல நண்பர்களாகவும் எங்க பயணம் தொடருது" என்றான்.நண்பேன்டா..!

அட்டை, படங்கள் என்.விவேக்

 
     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism