Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

"மை டீயர் ஜீபா !

கரெக்ட்டா சொல்லு ஜீபா, பச்சைக் காய்கறிகளை சாப்பிடணுமா... பச்சையா காய்கறிகளை சாப்பிடணுமா?

மை டியர் ஜீபா !

-ந.அன்பரசி, சென்னை.

பச்சையா சாப்பிடக்கூடிய பச்சை பச்சை காய்கறிகளை பச்சைப் பச்சையாவே சாப்பிடுங்க. பச்சைப் பச்சையா சாப்பிட முடியாத பச்சைப் பச்சை காய்கறிகளை பச்சைப் பச்சையா சாப்பிடாதீங்க. பச்சையா சொல்லணும்னா... காய்கறிகளை சாப்பிடணும், அவ்ளோதான்

சுருட்டை முடி நல்லா படியறதுக்கு ஒரு நல்ல ஐடியா சொல்லு ஜீபா?

-கே.திவ்யப்ரீத்தி, செய்யாறு.

ஒவ்வொரு முடியா பிடிச்சு எதிர் திசையில் சுருட்டிவிட்டா நேராயிடப் போகுது.. சரி... சரி, டென்ஷன் ஆக வேணாம், சொல்றேன். அதுக்கு முன்னாடி... முடி ஏன் சுருளுதுன்னு தெரிஞ்சுக்குவோம்...

நம்மோட முடி முழுசும் வெளிப்புறம் நிறைய புரோட்டீன் செல்களால் ஆனது. முடியோட வேர்ப் பையிலிருந்து உருவாகிற இந்த புரோட்டீன்கள்தான் முடி முழுசுக்கும் பரவியிருக்கு. இதிலே 'கெரட்டின்'ங்கற புரோட்டீனும் இருக்கு. இந்த கெரட்டின்லே நிறைய சல்ஃபர் அணுக்கள் இருக்கும். பக்கத்துப் பக்கத்துலே ரெண்டு சல்ஃபர் அணுக்கள் இருந்தா, அதுங்க ஒண்ணு சேர்ந்து 'டை-சல்ஃபைடு பாண்டு'களை உருவாக்கிக்கும். ஒருவேளை... இந்த சல்ஃபர் அணுக்கள் கொஞ்சம் தள்ளித் தள்ளி இருந்தா, அவை ரெண்டும் கிட்டேவந்து ஒண்ணுசேர ட்ரை பண்ணும். இந்த 'ட்ரை'லே கெரட்டின் செல் கொஞ்சம் வளைச்சு... நல்லா வளைஞ்சு... ஒருவழியா பாண்டு உருவாகும். இப்படி உருவாகிற 'டை-சல்பைடு பாண்டு' ஒரு முடியிலே நிறைய இருந்தா, வளைவான கெரட்டின் செல்களும் நிறைய இருக்கும் இல்லையா. அதனால, முடியும் வளைஞ்சு சுருட்டையா இருக்கும். இந்த பாண்டு கம்மியா இருந்தா சுருள்களும் கம்மியா இருக்கும்.

ஆக, சுருள்களை நேராக்கணும்னா இந்த பாண்டை எல்லாம் ஒடைச்சா போதும். ஆனா, டெம்ப்ரரிதான். நாம நேராக்கி வெச்சிருக்கிற முடியோட அடியிலே... புதுசா முளைச்சு வர்ற முடி, அதனோட ஒரிஜினாலிட்டியோடு நிறைய பாண்டும் சுருளுமா வெளிவரும். திரும்ப அந்த முடியை படிய வைக்கணும்... முடியற காரியம்தான்னாலும் முடியற காரியம் இல்லை திவ்யா, அப்படியே விட்ருவோம்

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டூழியம் என்றெல்லாம் நியூஸ் வருதே... நீ கொஞ்சம் அவங்களுக்கு சொல்லு ஜீபா...

-ப.ஹேமாவதி, விருதாச்சலம்.

ஏரிக்குள்ளே வீட்டைக் கட்டிக்கிட்டு மழை சமயத்திலே தண்ணி வந்துடுச்சு... வெள்ளக்காடாயிடுச்சுன்னு புலம்பறாங்க. தண்ணிக்கான இடத்துக்கு தண்ணிதானே வரும். அதேமாதிரிதான், காட்டு யானைங்க ஊருக்குள்ளே வந்துடுச்சா... இல்லே, ஊரு காட்டுக்குள்ளே போயிடுச்சான்னு பார்க்கணும். நானும் சொல்றேன்... நீயும் கொஞ்சம் அவங்களுக்கு சொல்லு ஹேமா..

மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா ஜீபா?

-எம்.பி.எஸ்.அப்துல் ரஹ்மான் சக்காப், காயல்பட்டினம்.

எல்.கே.ஜி. படிக்கிறவங்களும் மாணவர்கள்தான்... அரசியலுக்கு விவரமானவர்கள், நாணயமானவர்கள், கண்ணியமானவர்கள், சாமான்யமானவர்கள், தரமானவர்கள், யதார்த்தமானவர்கள்... இப்படிப் பட்ட மாணவர்கள் கட்டாயம் வரணும் சக்காப்.

ராக்கெட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் ஜீபா? (என்ன வித்தியாசம்னு கேட்டாதானே டென்ஷன் ஆகுறே... அதான் ஒரு வித்தியாசத்துக்கு இப்புடி. எப்பூடி?)

-பி.செல்வபாரதி, கரூர்.

ரெண்டுமே கெட்டுப் போகாத விஷயங்கள். என்ன கதி ஆனாலும், ஜனங்க மனசில் நிற்கும். ஒண்ணு பாறை... 'ராக்'கெட்டு, இன்னொன்னு மலை... 'கிரிக்'கெட்டு கிரிக்கெட்டில், பந்தை வெச்சுதான் ஆட்டம், ஓட்டம் எல்லாம் பார்க்க முடியும். ராக்கெட்டில், ஓடி ஆடி போனால்தான் பந்து மாதிரி இருக்கிற கோள்கள், நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். கீவீஸீ-ஐ நோக்கிச் செல்லும்போது... கவுன்ட் டவுன் கிரிக்கெட்டில். விண்ணை நோக்கிச் செல்லும்போது... கவுன்ட் டவுன் ராக்கெட்டில் ரொம்ப தறிகெட்டு யோசிக்கிறேன்னு தோன்றதாலே 'ஓவர் ஓவர்'-னு ஓவரை முடிச்சுக்கறேன்

பால் பொங்குவது ஏன்னு நீ சொன்ன விளக்கம் சூப்பரா புரிஞ்சது ஜீபா, தாங்க்ஸ். ஆனால், பால் குக்கரில் சுடவைக்கிற பால் மட்டும் பொங்காமல் விசில் அடிக்கிறதே எப்படி?

-யு.கௌதம், சென்னிமலை.

ச்சீ... ச்சீ நம்ம பால் வடியும் பாலுக்கு விசில் அடிக்கலாம் தெரியாதுப்பா நல்லா கவனிச்சுப் பாரு, பால் குக்கர்லே விசில் ஓட்டை வழியா நாம ஊத்தி வைக்கிற தண்ணீர்தான் கொதிச்சு ஆவியாகி விசிலடிச்சுக்கிட்டே வெளியேறுது. இன்னும் சொல்லப்போனா,பாலோட கொதிநிலை தண்ணியோடதவிட கொஞ்ஞ்ஞ்சம் அதிகம் (100.55 டிகிரி). அதனால தண்ணி முந்திக்கிட்டு விசிலடிச்சு உஷார் பண்ணிடுது

என்ன ஜீபா, சந்திர மண்டலத்துக்கு ஆள் அனுப்பப் போறாங்களாமே... நீ போறியா? நான் ரெகமண்ட் பண்ணவா?

- சி.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை.

ஆள் அனுப்பதானே போறாங்க? 'ALL' அனுப்பற நிலமை வரட்டும் பன்னீரோடு செல்வோம்.

 
     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism