Published:Updated:

உன்னோடு ஒரு நிமிஷம்!

உன்னோடு ஒரு நிமிஷம்!

உன்னோடு ஒரு நிமிஷம்!

உன்னோடு ஒரு நிமிஷம்!

Published:Updated:
உன்னோடு ஒரு நிமிஷம்!
கே.கணேசன்


உன்னோடு ஒரு நிமிஷம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாய் சுட்டீஸ்... பிளாஸ்டிக் எவ்வளவு தீமையானது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பிளாஸ்டிக்கில் ஒரு பொருளை உருவாக்கிவிட்டால், அதன்பிறகு அந்த பிளாஸ்டிக்கை நாம் அழிக்கவே முடியாது. இந்த சுற்றுச் சூழல் கேட்டினை நாம் உணர்ந்திருக்கும் அளவுக்கு... கனடாவில் ட்யூபி(Tubby) என்ற நாயும் உணர்ந்து இருக்கிறது.

சவுத் வேல்ஸைச் சேர்ந்த சாண்ட்ரா என்பவர் கில்மோர் சில வருடங்களுக்கு முன் ட்யூபியை வளர்க்க ஆரம்பித்தார். தினசரி வாக்கிங் போகும்போது ட்யூபியையும் அழைத்துச் செல்வார். ஒரு நாள், தெருவில் வீசப் பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து வர அதைப் பழக்கினார். அதிலிருந்து ட்யூபி தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் நடைப்பயிற்சி முடிந்து வரும்போது, தெருவில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை வாயில் கடித்து நொறுக்கி, பின் அதை கவ்வியபடி எடுத்து வந்து தன் உரிமையாளரிடம் சேர்க்கும். கில்மோர், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிக்கு அனுப்பிவிடுவார். கடந்த ஆறு ஆண்டுகளில்... ஒன்றல்ல, நூறல்ல இருபத்தி ஆறாயிரம் பாட்டில்களை இந்த ட்யூபி சேகரித்து இருக்கிறது.

இந்த அரிய சேவைக்காக, கின்னஸ் புத்தகத்திலும் ட்யூபி இடம் பெற்றுவிட்டது. கின்னஸ் சாதனை மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட ட்யூபிக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தர்மபுரி மாவட்டம் கீழ்தும்பலஹள்ளியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல், பால் வியாபாரியும்கூட. தினமும் 1 கி.மீ. தொலைவில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு பாலை கொண்டு செல்வார். அப்போது இவரது செல்ல நாய் மணியும் கூடவே செல்லும். இதைப் பார்த்ததும் அவருக்கு ஒரு யோசனை. மணியிடமும் ஒரு பால் கேனை கொடுத்து அழைத்துச் சென்றார். மணியும் சமத்தாக கேனை வாயில் கவ்வியபடிச் சென்றது. நாளடைவில், யார் துணையுமின்றி தனியாகச் செல்ல ஆரம்பித்தது. பிறகு தங்கவேல் ஒரு குட்டி வண்டியைத் தயார் செய்து, அதில் சுமார் 40 லிட்டர் பால்கேனை வைத்து, பூட்டி அனுப்புகிறார். மணியும், 'வந்தேன்டா பால்காரன்' என்பதுபோல் குஷியாக தினமும் கூட்டுறவு நிலையத்துக்குச் சென்று, பாலை கொடுத்துவிட்டு வருகிறது. இதைப் பார்த்து, அங்குள்ள மக்கள் மணியை வியந்து பாராட்டுகிறார்கள். நாமும் மணிக்கு ஒரு 'ஓ' போடலாமா சுட்டீஸ்!

கே.கணேசன்
-பா.ஆ.வள்ளிகாந்த், தர்மபுரி.

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism