Published:Updated:

சூப்பர் டூப்பர் DOGS !

சூப்பர் டூப்பர் DOGS !

சூப்பர் டூப்பர் DOGS !

சூப்பர் டூப்பர் DOGS !

Published:Updated:
சூப்பர் டூப்பர் DOGS !
ஊர் மனம்
சூப்பர் டூப்பர் DOGS !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லோருக்குமே தாங்கள் பிறந்து வாழ்ந்த ஊர், நினைவுகளில் நீடித்து நிற்கும். பல வெளிநாடுகளைப் பார்த்தாலும், சொந்த ஊருக்குச் செல்கையில் உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் அலாதியானது. படித்த பள்ளி, விளையாடிய மைதானம், பழகிய நண்பர்கள் என்று நம் பால்ய கால அனுபவங்களையும் குறிக்கிறது. சொந்த ஊரை நேசிக்க முடியாதவன், தாய் நாட்டையும் நேசிக்க முடியாது. சொந்த ஊரை நேசிப்பது வேறு; அதைத் தவிர வேறு உயர்ந்தது இல்லை என்று நினைக்கும் கிணற்றுத் தவளை மனப்பான்மை வேறு.

ஒவ்வொருவரும் தங்களின் சொந்த ஊருக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும். எந்த பரபரப்பும் இல்லாமல், யாதொரு நிகழ்ச்சி நிரலும் இல்லாமல்... நாம் படித்த பள்ளிக்கூடம், சின்ன வயதில் ஆசையாக பலகாரங்கள் வாங்கிச் சாப்பிட்ட கடை, நடந்துபோன தெருக்கள் ஆகியவற்றை தரிசிக்க நேர்ந்தால், வாழ்க்கையை எவ் வளவு சிக்கலாக நாம் மாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது புரியும்.

குழந்தைகளைப் பொருத்தவரை, நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அதை முழுமையாக மனத்தில் நிறைத்துக் கொள்ளுங்கள். அது கொடுக்கும் அனுபவங்கள் அலாதியானவை. இப்படிப்பட்ட ஒரு புதிய பார்வையை கிளர்ந்து எழச்செய்கிற வகையில், 'ஊர்மனம்' என்ற நூலைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் மணா.

23 பிரபலங்கள், இந்நூலில் தங்களுடைய ஊரைப் பற்றி பகிர்ந்துள்ளார்கள். இது யாழ்ப்பாணத்திலிருந்து டெல்லி வரை... பல ஊர்களைப் பற்றிய தொகுப்பாக உள்ளது. 'தமிழகத்துக்குச் சுதந்திரம் 47ல் வந்துவிட்டாலும், புதுக்கோட்டையில் அது வருவதற்குத் தாமதமானது' என்கிற கந்தர்வனின் செய்தி, நமக்கு வியப்பைத் தரும். தேனி மாவட்டம் இயற்கை அழகின் சொர்க்கபுரி. 'வருஷ நாட்டு ஜமீன் கதை'யைப் படித்தேன். அதிகம் பிரபலமாகாத இடங்களில் ஒன்றான, மேகமலையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிக்கும் அதுதான் காரணம். தேனியைப் பற்றி கங்கை அமரன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். திலகவதி தருமபுரியைப் பற்றியும், சுந்தரராமசாமி நாகர்கோவிலைப் பற்றியும், பாக்யராஜ் கோயம்புத்தூரைப் பற்றியும், தங்கள் ஞாபகங்களை வழியவிடுகிறார்கள்.

இந்த நூல், சிறுவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நம் ஊரிலும் எத்தனையோ அழகான பகுதிகளை நாம் தவறவிட்டு விடுகிறோம். இந்த ஊர்களில் ஏதேனும் ஒன்று, உங்களின் சொந்த ஊராக இருக்கலாம். அதைத் தவறவிட்டு விடாதீர்கள். முதிர்ச்சி என்பது, ஒரு பொருள் இருக்கிறபோதே அதன் அருமையை உணர்வதுதான். அந்த முதிர்ச்சியை கைக்கொள்ளுங்கள். 'ஊர்மனம்' நூலை, உயிர்மை பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.

வெ.இறையன்பு I.A.S.
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism