செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, பொடியாக நறுக்கிய வெண்டைக் காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு புளித் தண்ணீர், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். இறக்கும் பொழுது சிறிய உருண்டை வெல்லம் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ருசியான பச்சடி இது.
கிடைக்கும் சத்துக்கள்
கார்போஹைட்ரேட் - 45 கிராம்
ப்ரோட்டீன் - 7 கிராம்
கொழுப்பு - 18 கிராம்
ஆற்றல் - 370 கிலோ கலோரி
கால்சியம் - 235 மில்லி கி
இரும்பு - 7 மி.கி
பீட்டா கரோட்டின் - 155 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 210 மை.கி
கொலின் - 10.5 கி
டயட்டீஷியன் கமென்ட்ஸ் இது நல்ல சைடு டிஷ். புளிப்பான டேஸ்ட்டுடன் இருக்கும். ஆற்றல், கார்போஹைட்ரேட், ஆகியவை கொஞ்சம் கிடைக்கும். கால்சியமும் மிதமாகக் கிடைக்கும். சப்பாத்தி, சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். எளிதாக செரிமானம் ஆகும். வயிற்றுக்கும் மிக நல்லது.
வெண்டை தளர் காரக் குழம்பு!
தேவையானவை குழம்புப் பொடி தயாரிக்க (துவரம் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், எண்ணை - தேவையான அளவு. இவை அனைத்தையும் வறுத்துப் பொடிக்கவும்). புளித் தண்ணீர் - ஒரு கப், 1 இஞ்ச் நீளத்துக்கு வெட்டிய வெண்டைக்காய் - 2 கப், பெருங்காயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
|