Published:Updated:

அமெரிக்க நாயகன் !

அமெரிக்க நாயகன் !

அமெரிக்க நாயகன் !

அமெரிக்க நாயகன் !

Published:Updated:

30-11-2010
அமெரிக்க நாயகன் !
அமெரிக்க  நாயகன் !

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுட்டிகளையும் இளைஞர் களையும் தேடிச் சென்று சந்தித்தார்கள். ஆதரவற்ற... படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டும் சிறுவர், சிறுமியர்களை சந்தித்த மிஷேலுக்கு... ஒரு சிறுமி, நம்மூர் விளையாட்டான பாண்டியாட்டத்தைக் கற்றுக்கொடுக்க... வேறொரு சிறுமி 'சா... பூ... த்திரி' கற்றுக்கொடுத்தார்.

அதேநாள் மாலை, தீபாவளியைக் கொண்டாட மும்பை கொலாபா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒபாமாவும் மிஷேலும் சென்று, மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை ரசித்தனர். ''தீபாவளிக்கு வந்துவிட்டு, பாட சம்மந்தமாகவே பேசிட்டு இருந்தா எப்படி?'' என்ற மாணவிகள், மீனவ நடனம் ஆடினார்கள். அப்போது, மிஷேலின் கையைப் பிடித்து தங்களோடு ஆட அழைக்க... அவரும் தயக்கமில்லாமல் ஆடி அசத்தினார். இதையடுத்து... ஒபாமாவையும் தங்களோடு நடனமாட மாணவர்கள் அழைக்க, 'அமெரிக்க ஜனாதிபதியாயிற்றே' என்ற பந்தா எதுவும் இல்லாமல்... அவரும் கை, கால், இடுப்பை பாட்டின் ரிதத்துக்கு ஏற்ப அசைத்து ஆட, பள்ளியே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்க  நாயகன் !

மகிழ்ச்சி ஆரவாரத்தால் நிறைந்தது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை, மும்பை செயின்ட் சேவியர் கல்லூரிக்குச் சென்ற ஒபாமா தம்பதிகள், அங்கு குழுமியிருந்த மாணவர்களோடு கலந் துரையாடினார்கள். இதை சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் ஏராளமான மாணவ, மாணவியர் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒபாமாவுக்கு முன்னால் பேசிய மிஷேல், ''இவரை சும்மா விடாதீங்க. கஷ்டமான கேள்வியா கேளுங்க!'' என்று கிண்டலாகச் சொல்லி விட்டுப் போனார். ''இதனால்தான், இந்தம்மா பேசிய பிறகு நான் எங்கும் பேசுவதே கிடையாது!'' என்று ஒபாமா தமாஷ் பண்ண... ''நம்ம ஊர் தலைவர்களும் இப்படி சகஜமா மாணவர்களோட பேசினா நல்லாயிருக்குமே!'' என்று மாணவர்கள் மத்தியில் எழுந்த விமரிசனத்தைக் கேட்க முடிந்தது.

'ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி பெற்றுத் தர, அமெரிக்கா ஆதரவு அளிக்கும்' என்று ஒபாமா, நமது நாடாளு மன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குறிப்பிட்டதுதான் ஹைலைட்! இரண்டு வருடத்துக்கு முன்பு... கடலில் 'கேட் வே ஆஃப்' இந்தியா வழியாக மும்பை வந்த தீவிரவாதிகள், தாஜ் ஓட்டலை தாக்கியது நினைவிருக்கும். தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதே தாஜ் ஓட்டலில் ஒபாமா இப்போது தங்கியதால்... அரபிக் கடலில் ஆயுதம் தாங்கிய 34 அமெரிக்க போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. வெள்ளை மாளிகையின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளும் ஒபாமாவுடன் இந்தியா வந்துவிட்டதால்... தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறைய ஆயுதங்களும், மும்பைக்கு வந்து இறங்கின. ஒபாமா, தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த சமயம், வேறு எவரும் அங்கே நுழைந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக... அந்த ஓட்டலின் அத்தனை அறைகளையும் அமெரிக்க அதிகாரிகள், தங்களுக்காக ரிசர்வ் செய்துவிட்டனர். அவர், டெல்லியில் மௌர்யா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய போதும், இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஒபாமா தங்கியிருந்த ஒவ்வொரு நாளும், அவரது பாதுகாப்புக்காக அமெரிக்கா 900 கோடி செலவு செய்தது. ஒபாமாவின் தலையில் தேங்காய் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, அவர் விஜயம் செய்த காந்தி அருங்காட்சியகத்தைச் சுற்றி இருந்த தென்னை மரங்களிலிருந்த தேங்காய்கள் வெட்டப்பட்டன.

ஆனால், 'இந்த செய்திகள் அத்தனையுமே மிகைப்படுத்தப் பட்டது' என்று மறுத்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன், ''இதற்கு முன்பிருந்த ஜனாதிபதிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு தரப்பட்டதோ அதே அளவுக்குத்தான் ஒபாமாவுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன'' என்று கூறியிருக்கிறது.

எப்படியோ... ஒபாமாவின் வருகை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பல நன்மைகள் ஏற்பட வழி வகுக்கும் என நம்பலாம்!

அமெரிக்க  நாயகன் !

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism