Published:Updated:

சுட்டீஸ் சினிமாக்கள் !

சுட்டீஸ் சினிமாக்கள் !

சுட்டீஸ் சினிமாக்கள் !

சுட்டீஸ் சினிமாக்கள் !

Published:Updated:

30-11-2010
'பிக்னிக்' கூடையும் யோகி பியரும் !
கலக்க வருது சுட்டீஸ் சினிமாக்கள் !

சுட்டீஸ் சினிமாக்கள் !

சுட்டிகளுக்கு ஹாலிவுட்டின் சினிமா ட்ரீட் அடிக்கடி கிடைத்து குஷிப்படுத்தும். அப்படி கிடைக்கப் போகும் இரண்டு படங்களில் ஒன்று... கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வித்தைகளைக் காட்டி, 3டியில் வரப்போகும் 'யோகி பியர்'. பேக்கிரவுண்ட் காட்சிகள் எல்லாம் சாதாரண சினிமா மாதிரியே இருக்க, கதாபாத்திரங்கள் மட்டும் 3டி கார்ட்டூனாக வலம் வர இருக்கும் இந்த படத்தின் கதாநாயகன், யோகி பியர். பார்த்தவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு இந்த யோகி பியரை வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கான டிரெய்லரை பார்க்கும் போதே...'படத்தைப் பார்க்க வேண்டும்!' என்ற ஆசை பொங்குகிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் 'பிக்னிக் கூடை'யை மையப்படுத்தி, யோகி பியர் செய்யும் அட்டகாசங்கள் அற்புதமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்... இந்த படத்தை வெளியிடும் வார்னர் பிரதர்ஸ்.

வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பரா இருவரின் இந்த மூலக்கதையை கொண்டு இயக்கி இருப்பவர், எரிக் பிரிவிஜ். வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் இந்த படம் கிறிஸ்துமஸ் சமயத்தில் திரைக்கு வருகிறது.


முடிவு யாருக்கு ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டீஸ் சினிமாக்கள் !

ஹாரி பாட்டர் சீரியஸின் கடைசிப் புத்தகமான 'ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ்' சினிமாவாக நவம்பரில் திரைக்கு வருகிறது. ஆறு ஹாரி பாட்டர் சினிமாக்களிலும் நடித்த டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் இதிலும் நடித்திருக்கிறார்கள். வில்லன் வால்டிமார்ட், தன் உயிரின் பகுதிகளை எங்கெங்கே எப்படி மறைந்து வைத்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் ஹாரி பாட்டர் வெற்றிபெற்றானா, இல்லையா என்பதுதான் கதையின் ஒன்லைன்.

திகில் நிறைந்த இந்த படத்தில், கடைசியில் யார் உயிரோடு இருப்பார்கள்? படுரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வில்லன் உயிரின் ஒரு பகுதி அடங்கியிருக்கும் 'ஹோர்கிராக்ஸ்' எங்கே இருக்கிறது? டெத்லி ஹாலோஸ் எவ்வளவு திகிலானது? போன்ற திக் திக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஜே.கே. ரௌலிங் எழுதிய ஏழாவது பாகம், ஹாரி பாட்டர் சீரியஸின் கடைசிப் புத்தகம்... என்றாலும், எட்டாவதாகவும் ஒரு ஹாரி பாட்டர் சினிமா அடுத்த ஆண்டு ஜூலையில் வருகிறது. அதன் படப்பிடிப்பையும் எடுத்து முடித்துவிட்டார்கள். 'இதற்கு, கதை எங்கிருந்து வந்தது?' ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் கதையைத்தான் இரண்டு சினிமாக் களாக எடுத்திருக்கிறார்கள். இந்த எட்டாவது சினிமா, ஒரு 3டி சினிமா!

ஹாரி பாட்டராக நடித்த டேனியல் ராட்க்ளிஃப், தோழி எம்மா வாட்சன், தோழன் ரூபர்ட் கிரின்ட் மூவருமே, பத்தாண்டுகளாக மாயாஜால உலகத்தில் ஊறிப் போயிருந்தார்கள். சுட்டிகளாக நடிக்க ஆரம்பித்த இவர்கள், இப்போது இருபது வயதைக் கடந்த இளைஞர்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன், ஹாரி பாட்டராக நடிக்க தனக்கு எப்படி சந்தர்ப்பம் கிடைத்தது என்பதை, இப்போது டேனியல் ரெட்க்ளிஃப் சொல்லியிருக்கிறான். ''ஹாரி பாட்டரில் நடிக்க தொடர்ச்சியாக பல ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தார்கள். பல மாதங்களாகியும் ரிசல்ட் சஸ்பென்ஸாகவே இருந்தது. ஒருநாள்... நான் குளித்துக் கொண்டிக்க, அப்பா பாத்ரூமுக்குள் ஓடிவந்து... 'ரிசல்ட் வந்துவிட்டது' என்றார். நான் வெடித்து அழுதேன். 'பாத்ரூமுக்குள் ஏன் வந்தாய்? என்று கேட்டு அழுகிறேனா... இல்லை சந்தோஷத்தில் அழுகிறேனா?' என்று தெரியாமல் அப்பா குழம்பிப்போனார். என் வாழ்கையிலேயே அதுதான் மிகச் சிறந்த தருணம்'' என்று விவரித்திருக்கிறான்.

-
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism