!பூமிக்கு கிட்டே பறந்தா பறவையும் சரி, ஏரோபிளேனும் சரி பெருசா இருக்கும். அதோட நிழலும் பெருசா விழும்... கண்ணுக்குத் தெரியும். மேலே போகப் போக சைஸ் சின்னதா ஆகிடுதில்லே..? அத்தனூண்டு உருவத்துக்கான நிழலும் தக்கனூண்டுதான் இருக்கும். அதான் தெரிய மாட்டேங்குது. என்னது, நமக்குதானே சின்னதா தெரியுது... விமானம் பெரிசாதானே அங்கே இருக்கும்னு கேக்கறியா? ஆமா! அங்கே பெருசாதான் இருக்கும். நிழலும் அங்கே போயி பார்த்தா பெருசா தெரியும்... தோடா, எப்படி பால் போட்டாலும் அடிப்போம்ல!
தபால் பெட்டிகள் எல்லாம் சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன் ஜீபா?
-ம.அக்ஷயா, அரூர்.
!அதுலே எதுவும் விசேஷம் இல்லை. ஒரே மாதிரி ஸ்டேண்டர்டா இருக்கணும்னு அப்படி செய்யப்பட்டது. முதல் முதல் தபால் பெட்டி பாரீஸ்லே 1653-ல அறிமுகம் செய்யப்பட்டதாம். அப்புறம் ஃபிரான்ஸ்லே 1829-ல செயல்படுத்தினாங்க. 'பில்லர் போஸ்ட்'-ஐ பிரிட்டீஸ்காரங்க 1874-ல அறிமுகம் செஞ்சதும் பிரபலமாகிடுச்சு. ஆரம்ப காலத்திலே போஸ்ட் பாக்ஸ் எல்லாமே க்ரீன் கலர்லேதான் வெச்சிருந்தாங்க. அப்புறம்தான் 1874-ல் 'ரெட் கலர்லே இருக்கட்டும்'னு லண்டன்லே முடிவு செஞ்சு செயல்படுத்தினாங்க. இன்னிக்கு நிலமையே வேற! உலகத்தை ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்தா, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சைன்னு ஒரு கலர் பாக்கியில்லாம எல்லா விதமான போஸ்ட் பாக்ஸையும் பார்த்துடலாம்! பிலிப்பைன்ஸ் நாட்டிலே க்ரே கலர்... சான் மரினோவில் வெள்ளை கலர்... இந்தோனேஷியாவில் ஆரஞ்சு கலர்... அவ்வளவு ஏன், நம்ம ஊரு போஸ்ட் ஆபீஸுக்கு போய் பாரு... ஸ்பீடு போஸ்ட், ஆர்டினரி போஸ்ட், லோக்கல் போஸ்ட், ஃபாரின் போஸ்ட்னு கலர் கலரா கலக்கறாங்கப்பு!
டியர் ஜீபா, வெள்ளையாகறதுக்கு ஒரு சூப்பர் ஐடியா கொடு ப்ளீஸ்... (வெள்ளை பெயின்ட் அடிச்சுக்க சொல்லிடாதே)
-சு.கிஷோர், ஈரோடு
(இதுலேயே இன்னொரு கேள்வியும் இருக்கு... படி ஜீபா!)
நான் குண்டாவதற்கு ஒரு ஐடியா கொடு ஜீபா...
-ஆர்.ராமகிருஷ்ண பாபு, கோவை
(குழம்பாதே ஜீபா! ரெண்டு பேரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் 'நண்பேன்டா'!)
!ஒண்ணு நல்லாத் தெரியுது 'நண்பேன்களே'! உங்கள்லே ராமகிருஷ்ண பாபு படு ஒல்ல்ல்லியா வெள்ளையாவும், கிஷோர் கன்னங்ங்ங்கரேல்னு குண்டாவும் இருக்கீங்க. சரிதானே! ரெண்டு பேருக்கும் ஒரு ஐடியா சொல்றேன். குண்டாகிற வழியை கிஷோர்கிட்டேர்ந்து பாபு தெரிஞ்சுக்கோ... வெள்ளையாகிற வழியை பாபுகிட்டேர்ந்து கிஷோர் தெரிஞ்சுக்கோ... எப்பூடி!
|