"நாம் செய்யப்போகும் உருவத்தை, முதலில் களிமண் அல்லது சுண்ணாம்புக் கட்டியில் வடித்துக் கொள்வார்கள். பிறகு கண்ணாடியை அதிகபட்ச சூட்டில் உருக்கி, அதில் வார்த்து எடுக்கும் முறையை காஸ்ட் கிளாஸ் சிற்பங்கள் என்பார்கள். எந்த எந்த பகுதிக்கு என்ன வண்ணம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்து அதற்கேற்ற வண்ணக் கண்ணாடிகளை... சிற்பத்தை வடிக்கும் கலைஞர் தேர்வு செய்வார். ஃபிளேம் ஒர்க்கிங் என்பது, பர்னலை கொண்டு கண்ணாடியில் நேரடியாக சிற்பங்களைச் செய்வது. சிறிய சிறிய கண்ணாடிச் சிற்பங்களை இப்படி செய்வார்கள். காஸ்ட் கிளாஸ் சிற்பத்திலேயே சில நுணுக்கமான பகுதிகளை ஃபிளேம் ஒர்க்கிங்கில் செய்வார்கள். இங்கே நீ பார்க்கற சிற்பங்கள் பெரும்பாலும் காஸ்ட் அண்ட் ஃபிளேம் ஒர்க் இரண்டும் கலந்த சிற்பங்கள்தான். இதைத் தவிர, லேம்ப் ஒர்க், ஃப்யூஸ்டு கிளாஸ் சிற்பங்களும் இருக்கு ஜீபா" என்றார் ஷாலினி பிஸ்வஜித்.
"எல்லாமே நல்லா இருக்கு. இதோட விலை எவ்வளவு?" என்று கேட்டேன்.
"அதெல்லாம் சஸ்பென்ஸ் ஜீபா... சட்டுனு சொல்லிட மாட்டோம். உனக்கு வேணும்னா சொல்லு, உன்னை மாதிரியே ஒரு கண்ணாடி சிற்பத்தைச் செய்து தரச் சொல்றேன். என்ன... ஆர்டர் கொடுத்துடலாமா?" என்று கேட்டார் ஷாலினி பிஸ்வஜித்.
"விலையைச் சொல்லாட்டி போங்களேன். என்னை எதுக்குங்க சிற்பமா செய்யணும்... நான்தான் ஒவ்வொரு சுட்டிங்க மனசிலும் சிற்பமா பதிஞ்சு இருக்கேனே. அதோட விலைக்கு ஈடே கிடையாது. ஒரு உதவி மட்டும் செய்ங்க. போன முறை கன் (நிuஸீ) மேட்டர் செய்தப்ப ஜேம்ஸ் பாண்ட் மாதிரி எல்லாமே ஆண் சுட்டிகளா அனுப்பினேன். இந்த முறை, சிற்பம் மாதிரி பெண் சுட்டிகளை இந்த கண்ணாடிச் சிற்பங்களோடு போட்டோ எடுக்க பர்மிஷன் கொடுங்க" என்று சொல்லிட்டுக் கிளம்பினேன்.
படங்கள் வீ.நாகமணி
|