Published:Updated:

இயற்கையை நேசியுங்கள் !

இயற்கையை நேசியுங்கள் !

இயற்கையை நேசியுங்கள் !

இயற்கையை நேசியுங்கள் !

Published:Updated:

30-11-2010
இயற்கையை நேசியுங்கள் !
 
இயற்கையை நேசியுங்கள் !

நவம்பர் 11-ம் தேதி சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி அரங்கம் சுட்டிகள் மற்றும் கல்லூரி மாணவிகளால் நிறைந்திருந்தது. சுட்டிகளின் ஆதர்ச நாயகனான கலாம் அவர்களின் உரையைக் கேட்பதற்குத்தான் மொத்த கூட்டமும் காத்திருந்தது. சுட்டி ஸ்டார்களான நாங்களும் விழாவுக்குப் போயிருந்தோம். தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய தலையங் கங்களைத் தொகுத்து 'உண்மை தெரிந்தது சொல்வேன்' என்ற தலைப்பில் மூன்று தொகுப்புகளாக வெளியிட்டப்பட்டது. கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்களை வெளியிட்டுப் பேசிய அப்துல் கலாம், "எனக்கு பத்து வயதாக இருக்கும் போது செய்திதாள்களை வீடு வீடாகப் போடும் வேலையைச் செய்தேன். அப்போது முதல் தினமும் செய்திதாள்களை தவறாமல் படிக்க ஆரம்பித்தேன். அதன் மூலம் நிறைய பொது அறிவு கிடைத்தது. ஆகவே, சுட்டிகளாகிய நீங்கள் தினமும் பேப்பர் படிப்பதை பழக்கமாக கொள்ளுங்கள்'' என்றவர், நாம் நம்மை சுற்றி உள்ள பகுதிகளில் மரங்களை வளர்த்தல், தண்ணீரை மாசுபடாமல் காத்தல் போன்ற செயல்பாடுகளால் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையை நேசியுங்கள் !


வாழ்க்கைக் கல்வி கற்றோம் !

இயற்கையை நேசியுங்கள் !

பள்ளிகளில் கற்றுத் தரப்படும் ஏட்டுக் கல்வி... அறிவுத்திறனையும் தொழில்துறையில் முன்னேறவும் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், ஒரு சிறந்த மனிதனை உருவாக்க இது மட்டுமே போதாது. இதற்காக, ஆசிரியர் கல்வி பயிற்சி இயக்ககம் தமிழகம் முழுவதும் வாழ்வியல் திறன் பயிற்சியை நடத்தி வருகிறது. சமீபத்தில் எங்கள் பள்ளியிலும் இரண்டு நாட்கள் நடந்தது. இப்பயிற்சிக்காக திறமை வாய்ந்த ஆசிரியர்களை நியமித்துள்ளனர். இப்பயிற்சியில் படைப்பாற்றல் திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன், கூர்மையாக சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், தன்னை அறிதல், தகவல் தொடர்புத் திறன், தன்னை பிறர் நிலையில் வைத்துப் பார்த்தல், மன அழுத்தம் மற்றும் உணர்வு களைக் கையாளும் திறன்... இப்படி 10 திறன்கள் மாணவ மாணவியருக்கு கற்றுத்தரப்பட்டது. இடையிடையே சில விளையாட்டுக்களும், விழிப் புணர்வூட்டும் சி.டி காட்சிகளும் வழங்கப்பட்டன. பயிற்சியின் இறுதியில் அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. படிப்பு, ஹோம் ஒர்க், தேர்வு என்றே திரும்பத் திரும்ப ஒரே மாதிரி சுழன்று கொண்டிருந்த எங்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

இயற்கையை நேசியுங்கள் !


வெள்ளி சுட்டிகள் !

இயற்கையை நேசியுங்கள் !

தூத்துக்குடி மாவட்டத்தின் மிகவும் சிறிய கிராமத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு சுட்டிகள், சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான ‘ஆல் இந்தியா ரியூ சிம்காம்' போட்டியில் வெள்ளிப் பதக்கங்களுடன் திரும்பி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் பவ்வியமாக இருக்கும் இந்த சுட்டிகள் சாரதா மற்றும் அனுசுயா, நேஷனல் லெவல் கராத்தேயில் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள் என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஒன்றியம், பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் தி பெஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். "எனக்கு சின்ன வயசுல இருந்தே கராத்தேனா ரொம்ப பிடிக்கும். பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாரும் கராத்தே கத்துக்கப் போனதைப் பார்த்து நானும் சேர்ந்தேன். ஆல் இந்தியா ரியூ சிம்காம் போட்டியில் கலந்துகிட்டு சுமார் 50 பேர் கிட்ட பைட் பண்ணினேன். 10, 11 வயது பிரிவில் 2-வது பரிசான வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதுதான் எனக்கு முதல் போட்டி" என்கிறாள் சாரதா. அதே போட்டியில் 8-9 வயது பிரிவில் அனுசுயாவும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். ‘ரொம்ப சந்தோசமா இருக்கு' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார். அடுத்ததா கன்னியாகுமரியில் ஒரு போட்டி நடக்கப் போகுது. அதிலும் கலந்துகிட்டு வெற்றியோடு வருவோம்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

-ஆ. கோமதி நாயகம்
படம் ஏ.சிதம்பரம்


அதுதான் எடிசன் !

இயற்கையை நேசியுங்கள் !

புகழ்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அப்போது 80 வயது. வீட்டில் இருந்தபோது... அவருடைய பிரமாண்டமான ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் செய்தியை அறிந்தார்.

பதட்டமடையாமல் மனைவியையும் அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்குக் கிளம்பினார். அங்கே, ஆய்வுக்கூடம் சாம்பல் குவியலாகக் காட்சி அளித்தது. மனைவி பதறினாள். எடிசனோ அமைதியாக "நடந்ததைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்? இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்" என்றார்.

தன் மகனிடம், "அது பழைய கட்டடம். புதிய தேவை களுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டுமென்று பேசிக்கொண்டு இருந்தோமல்லவா? இப்போது அதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக் கிறது" என்றவர், புதிய ஆய்வுக்கூடம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைபடத்தை வரைய ஆரம்பித்தார். அதுதான் எடிசன்.

இழப்பு பெரியதுதான். ஆயினும் திரும்பப் பெற முடியாததைப் பற்றி கவலைப்படாமல், அடுத்து செய்ய வேண்டியதில் ஈடுபட வேண்டும்!

இயற்கையை நேசியுங்கள் !


எப்படி படிக்க...?

ஒரு மாணவருக்கு, ஒரு வருடம் வழக்கமான கல்வி ஆண்டு, 365 நாட்கள் பின்வருமாறு பிரிக்கப் படுகின்றது.

ஓய்வெடுக்க 52 ஞாயிற்றுக் கிழமைகள்...மீதமுள்ளவை - 313 நாட்கள்.

கோடை விடுமுறை - 50 நாட்கள்... மீதமுள்ளவை 263 நாட்கள்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் என்றால் 122 நாட்கள் உறக்கத்தில் ஓடிவிடுகின்றன. மீதமுள்ளவை- 141 நாட்கள்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் விளையாட்டு, கேளிக்கை என்றால், 15 நாட்கள். மீதமுள்ளவை 126 நாட்கள்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் உணவு உண்ண, மற்ற தனிப்பட்ட தேவைகளுக்காக... மீதமுள்ளவை 96 நாட்கள்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அக்கம் பக்கம் உரையாட, 15 நாட்கள்... மீதமுள்ளவை 81 நாட்கள்.

வருடத்தில் தேர்வுகள் குறைந்த பட்சம் 35 நாட்கள்... மீதமுள்ளவை 46 நாட்கள்.

காலாண்டு, அரையாண்டு, திருவிழா விடுமுறை - 40 நாட்கள்... மீதமுள்ளவை 6 நாட்கள்.

நோய் நோக்காடு, சிகிச்சை விடுமுறை... குறைந்த பட்சம் - 3 நாட்கள்... மீதமுள்ளவை 3 நாட்கள்.

சினிமா, மற்ற நிகழ்ச்சிகள் குறைந்த பட்சம் - 2 நாட்கள். மீதமுள்ளது 1 நாள்.

அந்த ஒரு நாள் உங்கள் பிறந்த நாள்!

அன்றைக்குப் போய் நீங்க எப்படிப் படிக்க முடியும்?!

இயற்கையை நேசியுங்கள் !
இயற்கையை நேசியுங்கள் !

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism