பிரீமியம் ஸ்டோரி

  ஹாய் ஜீபா ஓட்டப் பந்தயத்தில் உன்னை வெல்ல யாராலும் முடியாது என்று என் நண்பன் சொல்றான். அது உண்மையா ஜீபா?

-அ.ஸ்ரீராம், நாமக்கல்.

ஆமா தெரியாதா உனக்கு? சந்தேகமா இருந்தா எனக்கும் அந்த நண்பனுக்கும் பந்தயம் வெச்சுப் பாரு... உன் நண்பன் உண்மையைத்தான் சொன்னான்னு நீயே புரிஞ்சுக்குவே

  நம் உடலில் அடிபட்டால் வலி ஏன் ஏற்படுகிறது ஜீபா?

-த.ஞானசெல்வன், பிரியம்மாள்புரம்.

மை டியர் ஜீபா ?
##~##

நம்ம உடம்புல மூணு முக்கியமான பகுதிகள் இதுக்கு காரணமா இருக்கு. முதலாவது, 'பெரிபெரல்’ நரம்பு... கிளை கிளையா நரம்பு இழை மண்டலங்கள் ஒரு வலை மாதிரி நம்ம உடம்பு முழுக்க பரவவிட்டு இருக்கும். இந்த 'நெட் ஒர்க்’ இழைகள் எல்லாமே அதன் நுனியில் 'நோஸிசெப்டார்’ங்கற நரம்பு செல்லை வெச்சிருக்கும். இந்த 'நோஸி’ ரொம்ப சென்ஸிட்டிவ் வெட்டு, தீக்காயம், வலி தர்ற அழுத்தம் (அடி, கிள்ளு, நசுங்குதல்...) உஷ்ணம், அலர்ஜி... இப்படி எது எங்கே நடந்தாலும் அந்தப் பகுதில இருக்கிற 'நோஸி’ உடனே அந்த மெஸ்ஸேஜை 'நெட் ஒர்க்’ வழியா 'எலக்ட்ரிக்’ தூண்டுதல் மூலம், நம்மோட தண்டுவட நரம்புக்கு அனுப்பிடும். இது வலியோட அளவைப் பொறுத்து ஸ்பீடா அனுப்பறதும், நிதானமா அனுப்பறதுமா வேறுபடும். வயிற்று வலி, அரிப்பு எல்லாம் ஸ்லோவா போவும். நெருப்புல விரல் பட்டுடுச்சுன்னா அடுத்த செகண்டு தண்டுவடத்துக்கு நியூஸ் போயிடும்.

அடுத்தது, தண்டுவட நரம்பு.. இங்கே இதுக்குன்னே ஒரு ஸ்பெஷல் நரம்பு செல் 'கேட் கீப்பர்’ மாதிரி வாசலிலேயே இருக்கும். வர்ற மெஸ்ஸேஜை செக் செஞ்சு ஜுஜுபி வலியை தானே டீல் பண்ணிக்கும். நெருப்புல விரல் பட்டது... மேல் கூரையில தலை இடிச்சுக்கிட்டது எல்லாத்தையும் மைக்ரோ செக்கெண்டு கேப்ல மூளைக்கு நியூஸ் அனுப்பிடும். கூடவே, உடம்புல இருக்கிற 'மோட்டார் செல்’களுக்கும் தகவல் அனுப்பிடும். இந்த மோட்டார் செல்கள், பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கிற தசைகளுக்கு கட்டளை அனுப்பி, உடனே ரியாக்ட் பண்ணவைக்கும். 'விரலை உடனே அங்கேயிருந்து இழுத்துக்கோ...’ 'சட்டுன்னு தலையை கீழே குனிஞ்சுக்கோ...’ இப்படி

கடைசியா, நம்ம மூளை... தண்டுவடம் அனுப்பற வலி மெஸ்ஸேஜ் எல்லாம் மூளையில இருக்குக்கிற ஒரு இன்பாக்ஸ்ல வந்து விழும். இதுக்கு 'தளாமஸ்’ன்னு பேரு. மூளைக்குள்ளே ஆழத்தில் இருக்கும் இந்த 'ஸ்விட்ச்சிங் ஸ்டேஷ’னுக்கு செய்தி வந்ததுமே மூளையில் இருக்கிற 'செரிபரல் கார்டெக்ஸ்’ங்கற சிந்திக்கும் பகுதிக்கு 'இது நெருப்பு வலி... இது இடிச்சுக்கிட்ட வலி’னு சொல்லிடும். கூடவே, அழுகை, பயம், உணர்ச்சிவசப்படுதல், எரிச்சல் மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிற மூளையின் 'லிம்பிக் சென்ட’ருக்கும் தகவலைச் சொல்லிடும். இதற்குப் பிறகுதான் நாம் வலி என்பதையே உணர ஆரம்பிப்போம்.

நான் இங்கே இவ்வளவு பெருசா சொன்ன விஷயங்கள் எல்லாமே கண் இமைக்கறதுக்குள்ளே நடந்து முடிஞ்சிடும். இறைவனோட படைப்பு அதிசயங்களில் இதுவும் ஒண்ணு

  மை டியர் ஜீபா உன்னை திடீரென ஜனாதிபதி ஆக்கிவிட்டால், பதவியை வைத்துக் கொண்டு மக்களுக்கு நீ என்ன செய்வாய்?

-அ.அருண் பாலாஜி,

பத்தாம் வகுப்பு, சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

முதல் காரியமா, இன்னும் எதை படிக்கறதுன்னு குழப்பத்தில் இருக்கிற பத்தாம் கிளாஸ் சுட்டிகளுக்கு இப்பவே 50 மார்க் இலவசமா கொடுக்கச் சொல்லிடுவேன். அப்புறம், ஸ்கூல்ல... ஸ்டூடண்ட்ஸுக்கு என்ன ஹோம் ஒர்க் கொடுக்கறாங்களோ அதே ஹோம் ஒர்க்கை டீச்சரும் செஞ்சுட்டு வரணும்னு பண்ணிடுவேன். அப்புறம், 'எத்தனை முறை வேணும்னாலும் பெட்ரோல் விலையை ஏத்திக்கலாம். ஆனா, ஒவ்வொரு முறை ஏத்தும்போதும், 'சப்ளை இருக்கிற’ முதல் பத்து நாளைக்கு ஒரு லிட்டர் வாங்கினா ஒரு லிட்டர் ஃப்ரீயா தரணும்னு ஆர்டர் போட்டுடுவேன்...

இப்படி திடுதிப்புன்னு ஜனாதிபதி ஆக்கினா இப்போதைக்கு இவ்ளோதான் யோசிக்க முடியுது. கொஞ்சம் டயம் கொடுத்தா இன்னும் பல பயனுள்ள திட்டங்களை யோசிக்கலாம். எப்பூடி

  ஹாய் ஜீபா அறிவாளி ஒருவனை அரசர் சோதிக்க, அவனை ஓர் அறையில் அடைத்தாராம். அதில் இரண்டு கதவுகள். ஒன்று பாதாள வழி. மற்றொன்று தப்பிச் செல்லும் வழி. இரண்டு கதவுகளிலும் ஒவ்வொரு காவலாளி நின்றிருக்கிறார்கள். அதில் ஒருவன் உண்மை மட்டுமே பேசுவான். மற்றவன் பொய் மட்டுமே பேசுவான். அறிவாளி, அவர்களில் யாராவது ஒருவரிடம்... ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு தப்பிச் சென்றுவிட்டான். அப்படி என்ன கேள்வி கேட்டான்? கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணு ஜீபா, இதைக் கேட்ட என் தோழிக்கு பதில் சொல்லணும்...

-மா.பிரின்ஸி, தேவகோட்டை.

மை டியர் ஜீபா ?

யாராவது ஒரு காவலாளிகிட்டே போய், இன்னொரு காவலாளியைக் காட்டி, 'எது தப்பிச்சுப் போற வழின்னு அவன்கிட்டே கேட்டா, அவன் எந்தக் கதவைக் காட்டுவான்’னு அந்த அறிவாளி கேட்டிருப்பான். அவன் காட்டுற கதவு வழியா போகாம, காட்டாத கதவு வழியா தப்பிச்சுப் போயிருப்பான் (காவலாளி உண்மை பேசுறவனோ, பொய் பேசுறவனோ... யாரா இருந்தாலும் இது ஒர்க் அவுட் ஆகும். பொய் பேசற காவலாளி, மற்றவன் உண்மையா சொல்ற கதவைக் கூட தப்பா மாத்திதான் சொல்வான். அதேபோல, உண்மை சொல்ற காவலாளி, மற்றவன் பொய்யா எந்தக் கதவை காட்றானோ அதை அப்படியே உண்மையா சொல்வான்). என்ன பிரின்ஸி... பதில் ஓகேவா? ஒழுங்கு மரியாதையா உன் தோழி கொடுக்கிற பரிசுல பாதி ஷேர் எனக்கு வந்தாகணும். இல்லேனா, இதேமாதிரி ஒரு ரூம்ல உன்னை அடைச்சுட்டு காவலாளிகள் ரெண்டு பேரையும் பொய்யும் உண்மையும் மாத்தி மாத்தி சொல்ல வெச்சுடுவேன். எப்பூடி?

  மை டியர் ஜீபா 'கடந்த சித்திரபானுக்கு முந்தைய தமிழ் சித்திரபானு வருஷம் ஐப்பசி மாதம் 10-ஆம் தேதி திங்கள் கிழமை’ என்றொரு பிறந்த ஜாதகம் இருக்கிறது. அதற்குச் சரியான ஆங்கில வருஷம், மாதம், தேதி என்ன? சொல்லேன் ப்ளீஸ்

-எம்.செல்லையா, சாத்தூர்.

என்னை ஒரு ஜோசியக்காரனா மாத்திடறதுன்னு வேண்டுதல் ஏதும் பண்ணி இருக்கீயா தலைவா? அடுத்து ஒரு நல்ல மரத்தடி பார்த்து பிசினஸை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. அந்த அளவுக்கு கரைச்சுக் குடிச்சு ஒருவழியா கண்டுபிடிச்சுட்டேன். அக்டோபர் மாசம், 26-ஆம் தேதி, 1942-ஆம் வருஷம். (சாத்தூர்ல ஜாதகம் பார்த்துச் சொல்ல நல்ல டிமாண்டு இருக்கும் போல ஊர்ல பெரிய சைஸ்ல ஆலமரம் ஏதும் இருந்தா உடனே தகவல் சொல்லு... புறப்பட்டு வர்றேன்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு