பிரீமியம் ஸ்டோரி

'பட்டர்ஃப்ளை பாலாஜி’ என்று பெருமையோடு  அழைக்கும் அளவுக்கு பட்டர்ஃப்ளை நீச்சலில் உயர்ந்திருக்கிறான் பாலாஜி. பொன்னேரி அருகில் உள்ள பஞ்செட்டி வேலம்மாள் இன்டர் நேஷனல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த சுட்டி, ஃப்ரீ ஸ்டைல் பட்டர்ஃப்ளை நீச்சலில் தேசிய அளவில் பல பதக்கங்களை வசப்படுத்தி உள்ளான்.

பலே பலே பாலாஜி !
##~##

''பள்ளியில் இருக்கும் நீச்சல் குளத்தில் பொழுதுபோக்கா நீச்சல் அடிக்க ஆரம்பிச்சேன். அதில் ஆர்வம் அதிகமாச்சு. இதை வெறும் பொழுதுபோக்கா இல்லாம சாதனையா மாத்தணும்னு முடிவெடுத்தேன்'' என்ற பாலாஜி, அடுத்தடுத்து நீச்சலில் தன் கை, காலை வீசியடித்து, சத்தம் இல்லாமல் சாதனைகளைச் சேர்த்துள்ளான்.

''காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் தவறாமல் பயிற்சியில் ஈடுபடுவேன். என்னோட கோச் விஜய், பல நீச்சல் வீரர்களின் அட்டகாசமான நீச்சல் நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்'' என்கிறான்.

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான தென் மண்டல நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம், தேசிய நீச்சலில் மூன்று, தமிழ்நாடு ஜூனியர் ஸ்டேட் நீச்சலில் ஒன்று என தங்கப் பதக்கங்களின் பட்டியல் நீள்கிறது. தற்போது ஜூனியர் ஸ்டேட் மீட் நீச்சலில் வென்று, ஆகஸ்டில் நடக்க உள்ள போபால் நேஷனல் நீச்சல் போட்டிக்குத் தேர்வாகி உள்ளான்.

ஆசிய விளையாட்டில் ஜூனியருக்கான பிரிவில் இடம்பிடிக்கத் தயாராகி வரும் பாலாஜிக்கு ஒலிம்பிக்கில் சாதிக்கும் லட்சியம் இருக்கிறது.  

       -க.நாகப்பன
 படங்கள். அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு