Published:Updated:

லிட்டில் மாஸ்டர் அரவிந்த் !

லிட்டில் மாஸ்டர் அரவிந்த் !

பிரீமியம் ஸ்டோரி

 அரவிந்த் சிதம்பரம், மதுரை டால்பின் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன். வயதோ பன்னிரண்டு. அதற்குள் கோவா, டெல்லி, குஜராத், பெங்களூரு, ஒரிஸ்ஸா என உள்நாட்டிலும் பிலிப்பைன்ஸ், பிரேசில் போன்ற வெளிநாடுகளிலும் செஸ் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறான்.

லிட்டில் மாஸ்டர் அரவிந்த் !
##~##

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் செஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், அதே நாட்டைச் சேர்ந்தவருமான ஹர்ஷல் ஷாஹியை (under age champion) வீழ்த்தி, வெற்றி வாகை சூடியுள்ளான். ஆசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம்பெற்று, இலங்கை, பிரேசில் போன்ற நாடுகளில் நடைபெறவுள்ள உலக செஸ் போட்டிகளில் விளையாட, நேரடியாகத் தகுதி பெற்று இருக்கிறான்.

அரவிந்த், செஸ் விளையாட ஆரம்பித்ததே ஒரு சுவையான விஷயம். ''எனக்கு ஆரம்பத்துல கிரிக்கெட் மேலதான் ஆர்வம் இருந்துச்சு. என் 80 வயது தாத்தாவை கிரிக்கெட் விளையாட கூப்பிடுவேன். அவரால வெயிலில் கிரிக்கெட் விளையாட வர முடியலை. அதனால அவர் என்னை செஸ் விளையாட கூப்பிட்டார். அப்படி யதேச்சையா ஆரம்பிச்சது  தான்'' என்று சொல்லிச் சிரித்தான்.

இப்படி ஒன்பது வயதில் ஆரம்பித்து இன்று பல சாதனைகளுக்கு சொந்தக் காரனாகி இருக்கிறான் அரவிந்த். ''எதிர் காலத்தில் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும்'' என கூறும் இந்த சுட்டி வீட்டின் பொருளாதார நிலை சாதாரணமானது தான்.

தாயின் அரவணைப்பில் வாழும் அரவிந்த் ''சரியான வழிகாட்டுதலும், தேவையான பக்க பலமும் கிடைத்தால் சாதிப்பேன்'' என்கிறான் நம்பிக்கையுடன்.

                   -பூ.ஜெயராமன்
படம்: இ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு