Published:Updated:

மாதம் ஒரு மலை யாத்திரை !

மாதம் ஒரு மலை யாத்திரை !

பிரீமியம் ஸ்டோரி

சென்ற மாதம் 'அவசியம்’ என்ற மலையேற்ற அமைப்பின் உதவியுடன் முதன்முறையாக மலையேற்றம் சென்றிருந் தேன். மலையில் இருந்த இரண்டு நாட்களுமே எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாய் இருந்தது. என்னை நான் மிகவும் புதுமையாகவும் புத்துணர்வாகவும் உணர்ந்தேன்.

மாதம் ஒரு மலை யாத்திரை !
##~##

இந்த மலை யாத்திரை யோசனை எப்படி வந்தது என்று, 'அவசியம்’ மாதம் ஒரு தெய்வீக மலை தரிசனக் குழுவின் தலைவர் இராமுஜியிடம் கேட்டேன். ''நம் முன்னோர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் நலமான வாழ்வுக்காக  எத்தனையோ நல்ல விஷயங்களைச் செய்து இருக்கிறார்கள். இயற்கையைப் பாதுகாக்க, இறை நம்பிக்கையை ஆதாரமாகக்கொண்டு  காடுகள், மலைகள், கடல், குளம், ஆறுகள், அருவிகள் போன்ற வாழ்வியல் ஆதாரங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். நாமோ... அவற்றை எல்லாம்  மறந்துவிட்டோம். அதை உணர்த்தவே, இந்த மலை தரிசன யாத்திரைகளை நிகழ்த்தி வருகிறோம்'' என்றார்.

மதுரையில் ஆடிட்டராக இருக்கும்  இராமுஜி,  நண்பர்கள் சிலருடன் இணைந்து 'அவசியம்’ என்ற இந்த மலையேற்றத்தை ஆரம்பித்து இருக்கிறார். அது இன்று பெரிதாகி, தன் ஏழாவது  ஆண்டில் அடியெடுத்து வைத்தி ருக்கிறது.

மலையேற்றம் தவிர, மாதம் ஒரு கிராமம் செல்லுதல், கிரிவலப்பாதையில் மரக் கன்றுகள் நடுதல், மலைக்கிராம ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பள்ளி சாதனப் பொருட்கள் வழங்குவது என பல சமூகப் பணிகளையும் செய்கிறார்கள்.

''மாதம் ஒரு மலை ஏறுங்கள். உங்கள் வாழ்க்கையில் நிகழும் அற்புதங்களையும், மனதில் நிகழும் மாற்றங்களையும் உணருங்கள்'' என்கிறார் இராமுஜி.

சூழ்நிலை காரணமாக மாநகரத்தின் சாலையில் தினமும் பயணம் செய்துகொண்டு, மாசுபட்ட காற்றை சுவாசித்துக் கொன்டிருக்கும் நகரவாசிகள் புத்துணர்ச்சி பெற, மாதம் ஒரு மலையேற்றம் செல்வது நல்ல பலனை அளிக்கும்.

மாதம் ஒரு மலை யாத்திரை !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு