Published:Updated:

நான்ஸ்டாப் நாயகி !

நான்ஸ்டாப் நாயகி !

நான்ஸ்டாப் நாயகி !

காரைக்குடி ஸ்ரீ கலைவாணி வித்யாலயா பள்ளி மாணவியும், சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டாருமான 10-ஆம் வகுப்பு மாணவி இரா.நாச்சாள், ஜூன் 23 அன்று... காலை 11.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை தொடர்ந்து பத்து மணி நேரம் சொற்பொழிவு ஆற்றி, 'நான்ஸ்டாப் நாயகி’யாக ஜொலித்தார். இதில், இவர் பல்வேறு மேடைகளில் பேசிய பேச்சுக்கள், கவிதைகள், திருக்குறள்கள், மூதுரைகள், உலக நீதி, திருப்பாவை, திருவெம்பாவை, ஆத்திச்சூடி, சிவ புராணம் மற்றும் தமிழ் இலக்கிய வகைப் பட்டியலையும், 6-முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் மனப் பாடச் செய்யுள்களையும் இடைவிடாது விளக்கிக் கூறினார்.

நான்ஸ்டாப் நாயகி !
##~##

இந்தச் சாதனை விழாவில், திருக்குறள் அறத்துப் பாலின் 38 அதிகாரங் களையும் ஒப்புவித்த மாணவ-மாணவிகளுக்கு, 'அறம் விருது’ வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

இந்தச் சாதனையை நிகழ்த்திய நாச்சாள், ''சொற்பொழிவு நேரத்தை இன்னும் அதிகப்படுத்தி, உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற முயற்சிப்பேன்'' என்றார்.

 பொக்கிஷ எக்ஸ்பிரஸ் !

''இந்தியாவை அறிய, விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை. எதிர்மறையாக எதுவும் இல்லை'' என்று கூறியவர் ரவீந்திரநாத் தாகூர்.

விவேகானந்தரின் சிந்தனைகள், உலக மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் எனலாம். அவரது 148-ஆவது நினைவைச் சிறப்பிக்கும் வகையில்,  விவேகானந்தா எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அது புதுவை, மதுரை, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களை வலம் வந்துகொண்டு இருக்கிறது.

நான்ஸ்டாப் நாயகி !

விவேகானந்தரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, அவரது தத்துவ மொழிகள், அரிய புகைப்படங்கள் ஆகியவை அதில் இடம்பெற்று உள்ளன.

இன்றைய புதிய தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் கண்டுகளிக்க வேண்டிய பொக்கிஷம்.

இந்தக் கண்காட்சியைப் பார்க்க வந்த பலருக்கும், 'மீண்டும் ஒரு முறை இந்த மகான் பிறக்கக்கூடாதா?’ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

-நா.இள.அறவாழி படம்: ஜெ.முருகன்

 தலைவரே...தலைவரே !

ஓவியக் கண்காட்சி வைக்க வயது தேவையில்லை. திறமை இருந்தால் போதும் என்பதை நிரூபித்து இருக்கிறான் 15 வயது மனிஷ்.

நான்ஸ்டாப் நாயகி !

சென்னை, பார்வதி ஸ்ரீ ஆர்ட் கேலரியில் மூன்று நாள் கண்காட்சியாக தனது ஓவியங்களைப் பார்வைக்கு வைத்தான். இலை உதிர் காலங்கள், அடர்ந்த காடு, பறவைகள் என மிகப் பெரிய ஓவியங்களையும் ஒரே நாளில் வரைந்து இருக்கிறான் மனிஷ். கறுப்பு மை பேனாவை வைத்து வரையப்பட்ட அப்துல் கலாம், கரித் துண்டைக் கொண்டு வரையப்பட்ட பூனையும் பலரைக் கவர்ந்தன. மொத்தம் 50 வகை  ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில், பல ஓவியங்கள் விற்றுப்போனது. பல தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ள மனிஷ், ''ராஜா ரவிவர்மாவைப்போல பெரிய ஓவியராக வரவேண்டும்'' எனச் சொல்கிறான்.

 ஓவிய நாயகன் !

''தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சியும் வந்துவிட்டது. ஆனால், எங்களுக்கு இப்பத்தான் தேர்தல் ஆரம்பிக்குது. எங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்'' என்று உற்சாகமாகச் சொன்னார்கள் அந்த சுட்டிகள்.

இராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் உள்ள எம்.ஜி.பப்ளிக் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தலைவனைத் தேர்வு செய்ய, பள்ளி நிர்வாகம் தேர்தல் நடத்தும்.

நான்ஸ்டாப் நாயகி !

அப்படி இந்த ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள்...(வேட்பாளர்கள்) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று, தேர்தல் வாக்குறுதிகள் அளித்து, மாணவர்களிடம் வாக்குகளைச் சேகரித்தனர்.

மாணவர்களிடையே ஒற்றுமை வளர ஆவன செய்வேன். கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகத்திடம் முறையிடுவேன். ஆசிரியர் - மாணவர் உறவு வளர முயற்சி செய்வேன். வேற்றுமை பாராட்டாது எல்லோரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். இவைதான் தேர்தல் வாக்குறுதிகள்.

வாக்களிக்க வரும் மாணவர் களின் விரலில் மை தடவி, வாக்குச் சீட்டை அளித்து, முத்திரை இடும் பகுதிக்கு அனுப்பி வைப்பது, பெட்டியைப் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று வைப்பது, அந்தப் பகுதிக்குள் யாரையும் வராமல் கண்காணிப்பது என, நாட்டில் நடக்கும் தேர்தல் போலவே நடந்தது. ''இது, ஜனநாயகத்தில் வாக்களிப்பதற்கான முக்கியத்துவம் பற்றி மாணவர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது. இதனால், இவர்கள் பிற்காலத்தில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்'' என்கிறார் தலைமை ஆசிரியர் பூங்குழலி.

-ச.புபேஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு