Published:Updated:

பிறந்தது புதிய நாடு !

பிறந்தது புதிய நாடு !

பிரீமியம் ஸ்டோரி

எஸ்.ரம்யசினேகா

வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தாலே எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்.உலகில் புதிதாக ஒரு நாடு பிறந்தால்..?

அப்படி, ஜூலை 9-ஆம் தேதி ஒரு நாடு பிறந்தது. உலகில் இதுவரை 192 நாடுகள் இருந்தன. இனி 193 இருக்கும். ஏன் புதிய நாடு?

பிறந்தது புதிய நாடு !
##~##

ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு நாடு சூடான்.   வடக்கு சூடான்... முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகவும், தெற்கு சூடான்... பழங்குடி கருப்பு இன மக்களைப் பெரும்பான்மையாகவும் கொண்டுள்ளது. வடக்கு சூடான் ஆட்சியாளர் களின் பாராமுகத்தால், தெற்கைப் பிரித்து தனி நாடாக அறிவிக்கும் கோரிக்கை அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்தது. காலப்போக்கில் அது, உள்நாட்டுப் போராகவே மாறி, சுமார் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

நிலமை மோசமானதை அடுத்து, கடந்த 2005-ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சூடான் பிரச்னையில் தலையிட்டன. சூடானை இரு நாடுகளாகப் பிரிக்க திட்டம் உருவானது. 2011-ஜனவரியில் வாக்கெடுப்பும் நடந்தது. இதில், 100-க்கு 99 தெற்கு சூடானியர்கள், பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து புதிய நாடு உதயமாகி இருக்கிறது.

ஜூலை 9-ஆம் தேதி, நள்ளிரவில்... தலைநகர் ஜூபாவில் மக்கள் குவிந்தனர். முரசுகளைக் கொட்டி வெற்றி ஆரவாரம் செய்தனர். தேசியக் கொடிகளை அசைத்து, 'புதிய நாட்டின் அதிபர் சல்வா கிளிர் மயார்டிட் வாழ்க!’ என்று முழங்கினார்கள். இவ்விழாவில் இந்தியத் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சூடானின் அதிபர் ஒமர் அல் பஷீர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கும் அதே சமயம், புதிய அரசின் முன் நிற்கும் சவால் மிகப் பெரியது. இயற்கை வளங்கள் தாராளமாக இருந்தும், உள்நாட்டுப் போரால் தெற்கு சூடானில் வளர்ச்சிப் பணிகள்  முடங்கிவிட்டன. அது இன்றைக்கு வறுமை நாடாக பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 100-க்கு 15 பேர்தான்.

நாட்டு மக்களின் உறுதியான தேசப் பற்று, எண்ணெய் வளம் மற்றும் வேளாண் செழிப்பு போன்றவற்றை தெற்கு சூடான் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் வளர்ச்சி நிச்சயம்!

தெற்கு சூடான் வளமான நாடாக மாற, ஹேப்பி வெல்கம் சொல்லி, நாமும் வாழ்த்துவோமா சுட்டீஸ்!

தெற்கு சூடான்-சில குறிப்புகள்!

இதன் மொத்தப் பரப்பளவு: சுமார் 6.20 லட்சம் சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை: சுமார் 96 லட்சம்.

சூடான், எண்ணெய் வளம் மிகுந்த பகுதி. இதில் 85 சதவிகிதம், தெற்கு சூடான் வசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தெற்கு சூடானில் விலை மதிப்பு மிக்க யூரேனியம், தங்கம், வைரம் அதிக அளவில் பூமிக்கு அடியில் கிடைக்கின்றன. வேளாண் துறையில் முழுவீச்சில் தெற்கு சூடான் இறங்கினால், ஆப்பிரிக்கக் கண்டத்தின் மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கக்கூடிய அளவுக்கு  வளமான நாடாக இது விளங்கும்.

பிறந்தது புதிய நாடு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு