பிரீமியம் ஸ்டோரி

மை டியர் ஜீபா மழைக்காக பள்ளிக்கூடம் பக்கமா நீ ஒதுங்கி நின்னுருக்கியா?

-ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

டீக்காக டீக்கடை பக்கம் ஒதுங்கி இருக்கேன். டிபனுக்காக ஓட்டல் பக்கம் ஒதுங்கி இருக்கேன். அட உங்க ஊர்ல மழைக்காக பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினா, மழை வருமா? நல்லா இருக்கே இந்த மேட்டரு

மை டியர் ஜீபா !
##~##

மரியாதையா எங்களுக்கு ஒரு புதிர் சொல்லப் போறியா இல்லியா மை டியர் ஜீபா?

-ஆர். முருகன், திருச்சி.

தம்பி இப்படியா... மிரட்டிக் கேப்பாங்க? அண்ணன் எப்படி பயந்ந்ந்து போய்ட்டேன் பாரு... உனக்கென்ன புதிர்தானே வேணும்? இந்தா பிடிச்சுக்கோ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

இது ஆல்பபெட்ஸ்தான். பார்க்க எல்லாம் கரெக்ட்டா இருக்கிற மாதிரி தெரியும். தெரியுதா? ஆனா, நல்லா உத்துப் பார்த்தேனா இதுல ஒண்ணு மிஸ்ஸாகி இருக்கறது தெரியும். அது என்னன்னு சொல்லிடு பார்ப்போம் (சுட்டீஸும் ட்ரை பண்ணலாம். கடைசியா என் பதிலைச் சொல்றேன்)

அன்புள்ள ஜீபா, அமாவாசையன்று ஏன் நிலா வருவதில்லை?

-து.சௌந்தர்ராஜ், பெருந்துறை.

எல்லா நாள்லயும் நிலா வரத்தான் செய்யுது. அமாவாசை அன்னிக்கு நமக்கு அது தெரியும்ம்ம்... ஆனா தெரியாது

சூரிய வெளிச்சம் அதுமேல படாத பகுதியைத்தான் நாம அன்னிக்கு பார்க்க முடியும். இருட்டா இருக்கற தால அது நமக்குத் தெரியாது.

ஹாய் ஜீபா என் வீட்டில் என் அப்பா அம்மா என்னை 'படி படி’ என்று சொல்கிறார்கள். அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு படிக்கவே பிடிக்காது. அவங்க கிட்டே திட்டு வாங்காம எஸ்கேப் ஆகறதுக்கு ஒரு வழி சொல்லேன். ப்ளீஸ்

-ந.நவநீதகிருஷ்ணன், கோவை.

மை டியர் ஜீபா !

எல்லாரும் பிடிச்சா படிக்கறாங்க? படிச்சுட்டுதான் பிடிச்சுக்கறாங்க... உயர்ந்த இடத்தை படிக்கலைனா எதையுமே 'பிடிக்காம’ கஷ்டப்படணும். அதனால நவநீதா, அப்பா அம்மா படி படின்னு சொன்னா, கண்ணை மூடிட்டு படிச்சுடு... ஸாரி, கண்ணைத் திறந்துட்டுப் படி... எதைப் பத்தியும் யோசிக்காம படிச்சு முடிச்சுடுன்னு சொல்ல வந்தேன். படிச்சாதான் கஷ்டத்துல இருந்து எஸ்கேப் ஆகலாம். ஓகே?

மை டியர் ஜீபா கையெழுத்தை  வெச்சே ஒருத்தரோட தலையெழுத்து எப்படி இருக்கும்னு சொல்ல முடியுமா?

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

புதுசா வாங்கின செருப்புலே அதோட தடங்களை வெச்சு, அது எவ்வளவு நாள் உழைக்கும்... எப்போ பட்டை அறுத்துக்கும்... எங்கே காணாமப் போகும்... எத்தனை கிலோ மீட்டருக்கு கூடவே வரும்... -இதெல்லாம் சொல்ல முடியுமா என்ன? மனுஷன் தயாரிக்கிற செருப்புக்கே மனுஷனால தீர்மானமா சொல்ல முடியாதப்போ, நாம ஒவ்வொருத்தரும் கடவுளோட தயாரிப்பு. எதையும் கணிச்சுச் சொல்ல முடியாதுங்கறதுதான் நிஜத் தலையெழுத்து

பிலாடெலிக் பீரோ (Philatelic Bureau)-ன்னா என்ன ஜீபா?

-க.அழகப்பன், காரைக்கால்.

தபால்தலை சேகரிக்கறதை பிலாடெலி’ன்னு சொல்றாங்க. ஒருத்தரோட நினைவா வெளியிடப்படற ஸ்டாம்பு, அது கூட தர்ற 'முதல் நாள் கவர்’ (Brochure), நினைவு ஸ்டாம்ப் கூட தர்ற சிறு வெளியீடு (First Day Covers), 'மின்ட்’ ஸ்டாம்ப் (பயன்படுத்தாத ஸ்டாம்புகள்),  1947-இல் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் போஸ்டல் ஸ்டாம்ப்ஸோட பட்டியல் (Catalogue)... இதெல்லாம் கிடைக்கிற ஆபீஸைத்தான் 'பிலாடெலிக் பீரோ’ன்னு சொல்றோம். மாவட்ட ஹெட் போஸ்ட் ஆபீஸ் மாதிரியான மிக முக்கியமான இடங்கள்லே மட்டும் இந்த பீரோ செயல்படுது. இந்தியா முழுசுக்கும் மொத்தம் 67 இருக்கு. தமிழ்நாட்டுல சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய போஸ்ட் ஆபிஸ்லே இந்த பீரோ இருக்கு. என்ன அழகு... இந்த டீட்டெய்ல்ஸ் போதுமா?

என்ன சுட்டீஸ் கண்டுபிடிச்சீங்களா? அதுதான்  'இங்கிலீஷ் ஆல்பபெட்’னு சொல்லிட்டேன் இல்லே... அப்புறம் அதுலே எப்படி 'ஒண்ணு’ இருக்கும்? மிஸ்ஸாகிதான் இருக்கும். எப்பூடி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு