பிரீமியம் ஸ்டோரி

புத்தகம் இல்லாப் படிப்பு !

பிட்ஸ்
##~##

மலை ஏறும் வீரர்களைப்போல் முதுகில் பெரிய பெரிய மூட்டை களைச் சுமந்து, தோள் வலியும், பஸ்ஸில் கண்டக்டர்களிடம் திட்டு வாங்கும் நிலையும் இனி இருக்காது சுட்டீஸ்! பேப்பர் புத்தகமே இனி தேவை இல்லை என்கிறது அரசாங் கம். இதெல்லாம் மாய மந்திரமா இருக்குதே என்கிறீர்களா... முதல்ல மேட்டரைப் படிங்க.  

வரும் 2015-ஆம் ஆண்டுக்குள் கல்வியினை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது தென் கொரிய அரசு. இதில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கு, 2 பில்லியன் பணம் செலவிடத் தயாராக இருக்கிறதாம். சிறிய அளவிலான எழுத்துருவாக்கங்களையும், டிஜிட்டல் பாடப் புத்தகங்களையும் தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறது. டேப்லெட் கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் வழி வரும் பாடப் புத்தகங்களுக்கு ஏற்றவையாக இருக்குமாம். இந்தத் திட்டத்திற்கான அனைத்து எலெக்ட்ரானிக் டேப்லெட்களையும் கொரியன் சாம்சங் நிறுவனம் தயாரிக்கிறது. ஆப்பிள் ஐ-பாட்களை சில பள்ளிகள் இப்போதே பயன் படுத்தத் தொடங்கிவிட்டன. இப் புதிய திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, அவர்கள் எதையும் சொந்தமாக உருவாக்கவும், தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்று அரசு கூறுகிறது. இப்போதுள்ள புத்தகச் சுமையும் தோள்வலியும் குறையும். 2013-க்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருக்கிறது. காலச் சூழ்நிலை, உடல்நிலை பாதிப்பு இருப்பின், அவர்கள் பள்ளிக்கு வெளியே இருந்தும் படிக்கலாம். இதுபோல நம்ம நாட்டிலும் வந்தால் ஜாலியா படிக்கலாம் தானே!

-கே.ஆர்.ராஜமாணிக்கம்

இதில் என்ன அதிசயம் ?

பிட்ஸ்

காந்திஜி ஒரு முறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார். அவருடன் காகா காலேல்கர் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளும் சென்றிருந்தனர். ''இங்கே 'ஜோக் ஃபால்ஸ்’ என்ற நீர் வீழ்ச்சி இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். அதைப் பார்க்கலாமே'' என்றார் காலேல்கர். ''எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள் போய் பாருங்கள்'' என்றார் காந்திஜி.

''என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவை விட மிக உயரத்தில் இருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' என்றார் காலேல்கர். ''அதிலென்ன அதிசயம்! ஆகாயத்தில் இருந்து விழும் மழைத் தண்ணீரை விடவா இது உயரத்திலிருந்து கொட்டுகிறது'' என்றார் காந்திஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு