வாசகிகள் பக்கம்

நான் விவரம் தெரியும் வயதுக்கு வரும் முன்னரே என் அம்மாவும் அப்பாவும் பரஸ்பர விவாகரத்தின் மூலம் பிரிந்துவிட்டார்கள். பெண் பிள்ளை என்பதால், அம்மாவின் அரவணைப்பில் வளர்க்கும்படி கோர்ட் அறிவுறுத்தியது. விவாகரத்தான சில வருடங்களுக்குப் பிறகு, அம்மா இன்னொரு ஆணுடன் பழக ஆரம்பித்து, குடும்பமும் நடத்த ஆரம்பித்தார். நான் அம்மாவோடு இருந்ததால், அவர்களுடன் வாழ நேர்ந்தது.

என் மீதான அன்பில் எந்தக் குறையும் இல்லாமல் அம்மா பார்த்துக் கொண்டார். அம்மாவுடன் வாழ்ந்த அந்த நபரும் அப்படியே. நான் ஏதாவது சோகத்தில் இருந்தால் தோள் மீது சாய்த்துக் கொண்டும், மடி மீது தலை சாய்க்க வைத்தும் தேற்றுவார் அந்த நபர்.

ஆனால், என்னைச் செல்லமாக வளர்ப்பது போல அவர் என் அங்கங்களை தொடுவதும், விளையாடுவதுமாக இருந்திருக்கிறார் என்பது, 'டீன்’ வயதுக்கு வந்தபோதுதான் புரிந்தது. அதற்குப் பிறகும் பருவ உணர்ச்சிகளைத் தூண்டி அவர் விளையாடியது எனக்கு ஏதோ புதுவித அனுபவமாக இருக்க, தவறென உணர்ந்து துண்டிக்காமல் போய்விட்டேன் இந்தப் பாவி.

ஒரு நாள் என் அம்மா இல்லாத நேரத்தில் என்னை மொத்தமாக சீரழித்துவிட்டது அந்த மிருகம். இப்போது கண்ணீருடன் கழிகின்றன என் நாட்கள். இந்தக் கேவலமான காரியத்தை என் அம்மாவிடம் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல், குமுறிக் கொண்டிருக்கிறேன். அந்த மிருகமோ, நடந்ததைச் சொல்லி பயமுறுத்தியே என்னை தொடர்ந்து சிதைத்துக் கொண்டுஇருந்தான். அவனிடமிருந்து மெள்ள இப்போதுதான் விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் அனுபவிக்கும் இந்தக் கொடூரம் யாருக்கும் நேரக்கூடாது. கணவரைப் விட்டுப் பிரிந்து இன்னொரு ஆணுடன் சேரும் முன், நீங்கள் வைத்துள்ள பெண் பிள்ளையின் எதிர்காலம் பற்றி ஆயிரம் முறை சிந்தியுங்கள் அம்மாக்களே!

- அம்மாவின் முடிவால் பாதிக்கப்பட்ட மகள்

இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை எல்லாம் இங்கே இறக்கி வையுங்கள். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும்

அமையப்போகிறது.! உங்கள் அடையாளங்கள் எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி! உடனே, உங்கள் செல்போனிலிருந்து 04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.