குட்டையைக் குழப்புவது, தப்பான வழிமுறைகளில் பரிசோதனை செய்வது, கையில் கிடைத்ததைக் கலக்குவது... இப்படி பல விஷயங்களின் குழப்பமான கலவையில்தான் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறது வேதியியல். தங்கள் பரிசோதனையின்போது நடப்பவற்றை விஞ்ஞானிகள் மூளையைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனிக்க வேண்டும். ஏனெனில் சில சமயம் ஒரு கேள்விக்கான விடையைத் தேடும்போது வேறொரு கேள்விக்கான விடை கிடைக்கக்கூடும்.

தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றி சில விஞ்ஞானிகள்...

‘தைரியமாக யூகம் செய்யாமல் எந்த ஒரு பெரிய கண்டுபிடிப்பையும் நிகழ்த்த முடியாது’ - நியூட்டன்.

‘என்கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கண்டுபிடித்தது தோல்விகள்தான்’ -ஹம்ஃப்ரி டேவி.

பல ஆச்சர்யமான கண்டுபிடிப்புகள் சந்தோஷ விபத்துகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றன. ஆனால் அவை கண்டுபிடிப்புகளாக அமைந்ததால்தான் விபத்துகள் கூட மகிழ்ச்சியானவையாக மாறின.

சில வினோதமான கண்டுபிடிப்புகள்

ராய்ப்ளான்கெட்என்ற கண்டுபிடிப்பாளருக்கு இன்ஸ்பிரேஷன் அவருடைய மனைவியின் சமையல் ‘திறன்’தான். எப்போது அவர் சமையல் செய்தாலும் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும். இதனால் எரிச்சலான அவர்கண்டு பிடித்ததுதான்நான்ஸ்டிக் பாத்திரங்கள்.

1930-ம் வருடம் காகித நிறுவன ஊழியர் ஒருவர் தவறுதலாக மரக்கூழில் அதிக ஸ்டார்ச் சேர்த்துவிட்டார். கிடைத்த ரிசல்ட் - பலமான அதே சமயம் அடுத்த பக்கம் இருக்கும் பொருட்கள் தெரியும் காகிதம், ட்ரேஸிங் பேப்பர்!

1943-ஆம் வருடம் விஞ்ஞானிகள் சிலர் சிலிக்கானில் இருந்து செயற்கை ரப்பர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதில் கிடைத்த பொருள் டயர் உருவாக்குவதற்கு துளியும் பயன்படவில்லை என்றாலும் அதை வைத்து விஞ்ஞானிகளால் விளையாட முடிந்தது. இது ஒரு புத்திசாலி சேல்ஸ் மேனின் கண்ணில் பட ‘சில்லி புட்டி’ என்றழைக்கப்படும் ‘பிளாஸ்டிக் க்ளே’ உருவானது. மூன்றே நாட்களில் அந்த சேல்ஸ்மேன் விற்ற சில்லி புட்டி பந்துகளின் எண்ணிக்கை ஏழரை லட்சம். புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி செயல்படுகிறது என்பதற்காக விண்வெளி வீரர்கள் இதை அப்போலோ 8 விண்கலத்திலும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

சார்லஸ் குட் இயர் - ரப்பருக்கான வல்கனைசிங் முறையைக் கண்டுபிடித்தவர். அப்போதெல்லாம் ரப்பர் காலணிகள் வெயில் நேரத்தில் உருகி, போட்டிருப்பவரின் கால்களையும் பதம் பார்த்து விடும். கொதித்துக் கொண்டு இருந்த ரப்பரில் தெரியாத் தனமாக கந்தகத்தை சார்லஸ் தட்டிவிட, உருவானது வல்கனைசிங் முறை.

இதே போல் ஒரு குழப்பமான விபத்தில்தான் ஒரு புது வகை ப்ளாஸ்டிக்கை லியோபேக்லேண்ட் கண்டுபிடித்தார்.ஃபீனாலும், பார்மால்டிஹைடும் கலந்து உருவான ப்ளாஸ்டிக் இது. லியோ, சீஸ் சாண்ட்விச் சாப்பிடும்போது அதில் ஃபார்மால்டிஹைட் கொட்டியதாம். இதுதான் அந்த ப்ளாஸ்டிக் கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாம்.

வண்ணமயமான வில்லியம்ஸ்

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பெர்கின்ஸ் என்ற புத்திசாலி சுட்டிக்கும் இதே போன்ற ஆச்சர்ய விபத்தால்தான் ஒரு கலர்ஃபுல்லான கண்டுபிடிப்பு கிடைத்தது.

பெர்கின்ஸுக்கு 12 வயது நடக்கும்போது வேதிப் பரிசோதனை களை ஒரு நண்பன் நிகழ்த்திக் காட்டினான். அதில் ஆர்வமான பெர்கின்ஸ் தொடர்ந்து பலவேதிப் பரிசோதனைகள் செய்து பார்க்க ஆரம்பித்தான். ஒருநாள் தங்கள் பண்ணை வீட்டில் ‘க்வினைன்’ மருந்தை கரியில் இருந்து தயாரிக்க முயன்றுகொண்டு இருந்தான் பெர்கின்ஸ். ஆனால், அவனுக்குக் கிடைத்தது அசிங்கமான கருப்புநிற மண்டிதான்.

ஆனால் பெர்கின்ஸ் ஆராய்ச்சியை விடவில்லை. அதில் ஆல்கஹாலை சும்மா கலந்து பார்த்தான். ரிசல்ட் - அழகான கத்தரிப்பூ நிற துகள்கள். இது சற்று வித்தியாசமான நிறமாக இருக்கவே, அதைப் பட்டின் மேல் சாயமாக பயன்படுத்திப் பார்த்தான் பெர்கின்ஸ். அவன் எதிர்பார்த்ததை விடவும் பட்டில் அழகாகப் பொருந்தியது அந்த சாயம்.

இதை ஒரு ஸ்காட்லாந்து நிறுவனத்துக்கு மாதிரி அனுப்பி அவர்களிடம் ‘ஆர்டர்’ வாங்கிய பெர்கின்ஸ் உடனேயே தந்தையின் துணையுடன் ஒரு சாய நிறுவனத்தை ஆரம்பித்தான். இந்த நிறத்துக்கு பெர்கின்ஸ் வைத்த பெயர் ‘டைரியன் பர்ப்பிள்’.

பிறகு என்ன? பர்ப்பிள் இங்கிலாந்தின் ஃபேஷனாக ஆனது. ராணியில் தொடங்கி வீட்டு நாய்க்குட்டி வரை பர்ப்பிளை ஏதோ ஒரு விதத்தில் அணிந்தார்கள்.

35 வயதிலேயே ரிட்டயர் ஆகும்அளவுக்கு பெர்கின்ஸிடம் பணம் சேரத் தொடங்கியது. ஆனால் இவை எல்லாம் பர்ப்பிளின் மாயம் மட்டும்தான்.

பர்ப்பிள்நிறத்தைக் கண்டுபிடித்தது கடைசி வரை பெர்கின்ஸின் புகழ் பரப்பும் விஷயமாகவே இருந்துவந்தது. பர்ப்பிள் நிறம் கண்டு பிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை உலகத்தின் பெரிய விஞ்ஞானிகள், நிறுவனர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்து, கொஞ்ச நாட்களில் இறந்து போனார் பெர்கின்ஸ்.