1173-ஆம்
வருடம் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வடிவமைத்தவர்
யார் என்று சரியாகக் கூறமுடியாது. காரணம் இதன் கட்டுமானப்
பணிகள் இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்தது தான். எனினும் முதலில்
கட்டுமானப்பணியைத் தொடங்கியவர் - பொனானோ பிஸானோ.
நேராகக்
கட்டப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் கட்டடம் கட்டும்போதே சாய்ந்த
நிலைக்குப் போனது.
ஏழாவது
மாடியில் இருந்து அளந்ததில் கிட்டத்தட்ட 4.4 மீட்டர் தூரத்துக்கு
சாய்ந்திருக்கும் இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையால்தான்
(60 சதவிகிதம் நீர் சேர்ந்தது இந்தப் பகுதி மண்) சாயத் தொடங்கியது.
இந்த
கோபுரத்தின் எடை 14,500 டன்கள்.
சுமார்
ஐந்தரை டிகிரி கோணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கை
நோக்கி சாய்ந்திருக்கிறது இந்தக் கோபுரம்.
கோபுரத்துக்குள்
இருக்கும் சுழல் படிக்கட்டுகளின் மூலம் கோபுரத்தின் உச்சி வரை
செல்ல அனுமதி உண்டு.
1173-ஆம்
வருடம் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி மூன்றாவது மாடி
கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 1178-ஆம் வருடம் பாதியில்
நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு
சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி 1272-ஆம் வருடம் கட்டுமானப்
பணி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஏழாவது மாடி கட்ட ஆரம்பித்த
போது 1278-ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.
மறுபடி
1360-ஆம் வருடம் தொடங்கப்பட்ட கட்டுமானப்பணிகள் தொடர்ந்து
பத்து வருடங்கள் தடையின்றி நடக்க பைசா கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர
உச்சிக்குச் செல்ல அமைக்கப் பட்டிருக்கும் படிகள் - 293
கோபுரத்தின்
உயரம் - 58.36 மீட்டர்கள்.
ஒவ்வொரு
வருடமும் சாய்ந்துகொண்டே இருக்கும் இந்த கோபுரத்தை அவ்வப்போது
நிமிர்த்த யாராவது முயற்சி செய்வதுண்டு. ஒருமுறை 800 டன்
எடை கொண்ட கற்களை கோபுரத்தின் ஒரு பக்கம் நிறுத்தி, அதிலிருந்து
கயிறு கட்டி கோபுரத்தை நிமிர்த்தப் பார்த்தனர்.
இரண்டு
வெவ்வேறு எடையுடைய பந்துகள் காற்றோ மற்ற குறுக்கீடுகளோ
இல்லை என்றால் ஒரே நேரத்தில்தான் பூமியில் விழும் என்று கலிலியோ
மக்களுக்கு எடுத்துச் சொன்னது பைசா கோபுரத்தின் உச்சியில்
இருந்துதான்.