நாய்களுடன் விளையாடுவது என்றால் பலருக்குக் கொள்ளைப் பிரியம். நம் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் பட்டியலில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்க்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. ஆனால், இப்போது நாய்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. காரணம், நாய்களைத் தாக்கிவரும் ரேபீஸ் என்னும் வெறி நோய்.

இந்த நோய்த் தாக்குதலில் இருந்து நம் செல்ல நாயை எப்படிப் பாதுகாப்பது, ரேபீஸ் நோய் தாக்கப்பட்ட நாய் கடித்தால் என்ன மாதிரியான சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது பற்றி டாக்டர்கள் ஆலோசனை கூறு கின்றனர்.

டாக்டர். எம்.ஜி.முகம்மது அலி, கால்நடை மருத்துவர்

நாய்கள் மட்டுமின்றி பல வகையான விலங்குகளையும் ரேபீஸ் கிருமி தாக்கும். உதாரணமாக தென்னாப்பிரிக்காவில் வெளவால்களுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு இருக்கிறது. ஆடு, மாடு, கோழிகளைக்கூட ரேபீஸ் நோய் தாக்கும்.

மனிதர்களுடன் ஒன்றிப் பழகும் விலங்கான நாய்களுக்கு ரேபீஸ் நோயின் பாதிப்பு வரும்போதுதான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை ரேபீஸ் நோய் தாக்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. தெரு நாய்கள்தான் ரேபீஸ் நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே வீட்டு நாய்களைத் தெரு நாய்களோடு பழக விடக்கூடாது. நாய்களுடன் விளையாடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாயை அச்சுறுத்தும்போதுதான் அது நம்மைக் கடிக்க வரும். நாயை அடிக்கக் கூடாது. நாய் குட்டி போட்டிருந்தால் கொஞ்ச நாளைக்கு அதனருகில்செல்ல வேண்டாம்.

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு நோய்த் தாக்குதல் ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாய்க்கு குடற்புழு மருந்து கொடுப்பது அவசியம். நாய்க்கு உடல் ரீதியான பிரச்னைகளோகாயமோ இருந்தால் நம்மைக் கடிக்க வரும். அப்போது கால்நடை மருத்துவர் மூலம் நாய்க்குத்தேவையான சிகிச்சைகளைஅளிக்க வேண்டும்.

டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்.

ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடிக்கும்போது அதன் உமிழ்நீரில் இருக்கும் வைரஸ் கிருமிகள், நரம்பு வழியாக மனித மூளைக்குச் சென்று அங்குள்ள திசுக்களை அழிக்கும். இதனால் சிலசமயம் மனித உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். வீட்டு நாய் கடித்தால் ‘டெட்டனஸ்’ என்ற தடுப்பூசி மட்டும் போட்டால் போதும். ஆனால், ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் தொடர்ச்சியாக சில வாரங்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.

நாயின் பல் பதியும் அளவிற்குகடித்தால் அல்லது கடித்த இடத்தில் ரத்தம் வந்தால்தான் தடுப்பூசி போட வேண்டும் என்று சிலர் அலட்சியமாக இருப்பார்கள். இது முற்றிலும் தவறானது. ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயின் நகம் மனிதர்களின் தோல் பகுதியில் கீறலை ஏற்படுத்தினாலோ, அந்த நாய் மனிதர்களை நாவினால் நக்கினாலோகூட உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் ரேபீஸ் நாய்க்கடிக்கு இன்னமும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. எனவே கிருமியின் தாக்கம் உடலில் அதிகரிக்கும் முன்பே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

நாய்கடித்த இடத்தை முதலில் சோப்புப் போட்டு நன்றாக கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தில் டிஞ்சர் அல்லது டெட்டால் போன்ற மருந்துகளைப் போடலாம். இதுதான் நாய்க்கடிக்கு முதலுதவி (நாய் கடித்த இடத்தில் காபித்தூள், சுண்ணாம்பு, சந்தனம், பச்சிலைச்சாறு போன்றவற்றை தடவக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தினால் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் வெளியேறுவது தடைப்படும்). பிறகு உடனடியாக டாக்டர்களிடம் காட்டி தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாய் கடித்த 3-ம் நாள் அதன் பின்னர் 7, 14, 28-ம் நாட்களில் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே போடப்படுகிறது. ஒரு தடுப்பூசி 350 ரூபாய் என்ற விலையில் தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது.

ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயைஅடையாளம் காண்பது எப்படி?

நாய் வழக்கத்துக்கு மாறாக அங்குமிங்கும் பதற்றத்தோடு ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரைப் பார்த்தாலும் குரைக்கும்.

அதன் வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டே இருக்கும்.

சரியாக சாப்பிடாது. தண்ணீரும் குடிக்காது.

இருட்டான இடத்தில் படுத்துக் கொள்ளவே விரும்பும். வெளிச்சத்தைக் கண்டால் நாயின் உடல் நடுங்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அந்த நாய் ரேபீஸால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். அப்படி பாதிக்கப்பட்ட நாய் 7 முதல் 12 நாட்களுக்குள் இறந்துவிடும்.

உங்கள் தெருவில் நாய்களின் தொந்தரவு அதிகமாக இருந்தாலோ, ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் இருப்பது தெரிந்தாலோ அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள். அதேபோல, தெரு நாய்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டோ, ஏதேனும் உடல்நலக் குறைபாடுடனோ இருந்தால் உங்கள் ஊரில் உள்ள ரெட் கிராஸ் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குத் தகவல் கொடுங்கள்.

நாய் நட்பான பிராணிதான். ஆனால் அதற்கொரு நோய் தாக்கி இயல்பை இழக்கும்போது தன்னை அறியாமல் அது நமக்கு எதிரி ஆகிறது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். சரிதானே..?

ஓ  ட வேண்டாம், நில்! சாலையில் நடந்து செல்லும்போது நாய் துரத்தினால் அப்படியே நின்றுகொள்ளவும். வண்டியில் செல்லும்போது நாய் துரத்தினால், வேகத்தைக் குறைத்து வண்டியை ஓரமாக நிறுத்திவிடவும். நாயிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று ஓடக்கூடாது. ஓடினால்தான் நாய் ஆக்ரோஷமாக துரத்தி வரும்.