''சாதிக்க நினைச்சீங்கன்னா இந்த சுட்டி வயசுல இருந்தே யோசிங்க. அப்பதான் முப்பது வயசுல முடியும். நாங்க அப்படி சின்ன வயசுல நினைச்சோம். இப்ப முடிஞ்சது'' என்று பெருமையுடன் சொல்கிறார்கள் பாபு மற்றும் வரதராஜன்.

சென்னையில் உள்ள ஆவடி பிக்ஷிதி மைதானத்தில், ஜூலை 14 முதல் 24 வரை இவர்கள் நடத்திய வித்யாசமான நிகழ்ச்சி, எல்லோரையும் வியக்க வைத்து இருக்கிறது. உலகின் மிக நீளமான பேனர், உலகின் நீளமான மெட்டாலிக் ஃப்ரேம், ஒரு மணி நேரத்தில் ஒரு பேனரில் வாங்கப்பட்ட அதிகமான கையப்பம் என பல்வேறு சாதனைகளைப் படைத்து, ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என விருதுகளை அள்ளி இருக்கிறார்கள்.

நாம் பன்னிரண்டு வருடங்கள் படிக்கிற தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல் விஷயங்களை, இந்திய வரைபடத்தின் வடிவில், ஒரு லட்சத்து 31 ஆயிரம் சதுர அடியில் நீளமான பேனரில் கொண்டுவந்து இருக்காங்க. அது மட்டுமா? இந்தியாவின் கலாசாரம், வெளிநாட்டுத் தொடர்புகள், மருத்துவம், பாரம்பரியம், ஐடி கம்யூனிகேஷன்ஸ், சினிமா, புத்தகங்கள், விவசாயம், இந்திய ஜனத்தொகை, மொழிகள், விளையாட்டுகள், விண்வெளி... இப்படி மொத்த இந்தியாவையே படங்களுடன் கொடுத்து இருக்காங்க. இதைப் புத்தகமாக போட்டால், ஹாரி பாட்டர் போல வால்யூம் வால்யூமா போகும். இதை எல்லாம் பதிமூணே நாளில் செய்ததுதான் ரொம்பவும் ஹைலைட்!

''நாம செய்கிற சாதனை பள்ளி மாணவர் களுக்கு பயன்படணும்னு நினைச்சோம். அதுக்காக, உலகின் மிக நீளமான பேனரை வைக்க முடிவு செய்தோம். பல்வேறு தடைகளைத் தாண்டி, இந்த மைதானத்தில் வைக்க, ஜூலை முதல் தேதிதான் அனுமதி கிடைச்சது. இருபத்து நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுத்தாங்க. உடனே வேலையை ஆரம்பிச் சோம். இந்திய மேப் போல மைதானத்தில் மார்க் பண்ணினோம். ராத்திரி, பகலா சரியாகத் தூங்காமல், சாப்பிடாமல் ஆயிரம் பேரை வெச்சு மழை, வெயில் எதைப் பத்தியும் கவலைப்படாமல் வேகவேகமா செய்து ஜூலை பதினான்காம் தேதி தயார் செய்துட்டோம்'' என்கிறார் பாபு.

பேனரை ஆய்வு செய்ய வந்த நிபுணர் குழுவினர் அசந்து போனார்களாம். ''பதிமூன்றே நாளில் செய்து முடிச்சதை எங்களால் நம்பவே முடியவில்லை. அபாரமான உழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.'' என்று பாராட்டி இருக்கிறார்கள். நாள் முழுவதும் தீவிரமாக பார்வையிட்டு, அன்று நள்ளிரவு 12 மணிக்குத்தான் விருதுகளை அளித்தார்கள்.

''இதுபோன்ற சாதனைகள் செய்ய பெரிய ஆட்களாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி இருந்தால் போதும். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். இதே ஆவடியில் பிறந்து வளர்ந்து, இங்கேயே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இந்தச் சாதனையை செய்ய ஒரு கோடி ரூபாய் வரை செலவானது. எந்த பெரிய நிறுவனங்களிடமும் உதவி கேட்கவில்லை. நண்பர்கள், சில உறவினர்களின் துணையுடன் செய்தோம். அவர்கள் எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.'' என்கிறார் வரதராஜன். இவர் ஒரு பொறியாளர். உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, தான் பார்த்து வந்த ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் வேலையை உதறிவிட்டு பாபுவுடன் இணைந்து இருக்கிறார்.

''இந்த விருதுகள், நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் மறக்க வைத்து இருக்கிறது. இந்த முறை இந்திய வரலாற்றைச் சொன்னோம். அடுத்து, இதைவிடப் பெரிய பேனர் வைத்து, அதில் உலக வரலாற்றைச் சொல்லும் எண்ணம் இருக்கிறது. இதை எல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள் என பலர் கேட்கிறார்கள். ஏதோ பிறந்தோம்... வளர்ந்தோம் என்று இல்லாமல், நாமும் இந்த உலகில் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக எதையாவது செய்ய வேண்டும். சுட்டிகள் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள் பாபு மற்றும் வரதராஜன்.

படங்கள்: எம்.உசேன்

நீ.நிகிலானந்தன்,
ஏ.ஆர்.ஆனந்த்,
அ.எழில் பிரியதர்ஷிணி,
ந.கொ.சரித்திரா,
அ.புவன், சீனியர்
சுட்டி பி.கவின்