முதல்வர் விருது !

'அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம்’ 44 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இதன் தலைவர் தகடூர் வேணுகோபால். இந்த அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்... பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, காமராஜர் பெயரில் 'முதல்வன்’ விருதை ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் விருது விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய தியாகி லட்சுமிகாந்தன் பாரதி, ''மாணவர்கள் எல்லோரும் பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்றைப் படிப்பதன் மூலம் அவரது எளிமையான, நேர்மையான, தூய்மையான அரசி யலைப் பின்பற்ற முடியும்.'' என்றார்.

கவிஞர் வெ.இன்சுவை யின் நூலினை வெளியிட்டுப் பேசிய தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ''ஆசிரியர்களுக்குத் தரும் மரியாதை, இறைவனுக்கு அளிக்கும் மரியாதை. கல்விதான் மனித நேயத்தை உருவாக்கும்.'' என்றார்.

மாநில அளவில் +2-வில் முதல் மதிப்பெண் பெற்ற கே.ரேகா உள்ளிட்ட 298 மாணவர்களுக்கு காமராஜரின் முதல்வன் விருதும், 100% தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது. அதை வழங்கிய நகர்ப்புற நில அளவை மற்றும் நில வரிகள் துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ்., ''கடின உழைப்பினால் மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால், மதிப்பெண்கள் மட்டும் போதாது. மனித நேயம், மற்றவர்களை மதிக்கும் பண்பு போன்றவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

பறந்தது ஜிசாட் 12

ஸ்ரீஹரிகோட்டா என்றதும் சின்னக் குழந்தைக்கும் ராக்கெட்தான் நினைவுக்கு வரும். இது, 145 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கடற்கரைப் பகுதி 27 கி.மீட்டர் இப்பகுதி, தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டாலும், வானம் அதிக நாட்கள் தெளிவாக இருக்கும். இங்கே மொத்தம் மூன்று ஏவுதளங்கள் உள்ளன. 1971-ல் முதல் ஏவுதளம் அமைக்கப்பட்டது. இங்கு இருந்துதான் பி.எஸ்.எல்.வி. ஏவப்படுகிறது. சமீபத்தில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-17 ராக்கெட் மூலம் இந்தியாவில் ஜிசாட்-12 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக... இந்தத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் திட்ட இயக்குநர் டி.கே.அனுராதா, பணி இயக்குநர் பிரமோதா ஹெக்டே, செயல்பாடு இயக்குநர் கே.எஸ்.அனுராதா ஆகிய மூன்று பெண் விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு உதவ 100 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ரீல் இல்லே... ரியல் !

''நான் மணலை கயிறா திரிப்பேன்... தண்ணி மேல நடப்பேன்'' என்று சிலர் அள்ளி விடுவதைக் கேட்டிருப்பீங்க... ஆனால், மேகிக் கோஜியர்ஸ்கி என்பவர், நிஜமாகவே நீரின் மேல் நடந்து அசத்துகிறார். பைபிளில் சொல்லி இருக்கும் அற்புத நிகழ்ச்சி வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு இதை மிகுந்த விழிப்போடும் விடாமுயற்சியோடும் செய்துள்ளதாகக் சொல்கிறார் மேகிக். இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயதாகும் விளையாட்டு வீரரான இவர், நீருக்குள் நீண்ட தூரம் அதிவேகமாகச் செல்லும் பயிற்சியையே முதலில் மேற்கொண்டார். இது, வேகமாக அடிக்கும் காற்றுக்கும்... உயரமாய் எழும் அலைகளுக்கும் விடும் சவாலாகும். இருப்பினும், அவைகள் இவருக்கு இச் சாதனை புரிய உதவியதாகவும், தொடர்ந்து 50 முறை நீருக்குள் நீண்ட தூரம் நடந்து சென்று திரும்பியதாகவும் சொல்கிறார். இவரது நான்கு நாள் தொடர் முயற்சியில்... நான்காவது நாளில்தான் மந்திர வித்தையோ, நவீன தொழில் நுட்ப உத்திகளையோ கையாளாமல் சாதித்துள்ளார். இஸ்ரேலின் கேப்பர்நாமில் உள்ள உலகப் புகழ்பெற்ற தேவாலயத்தின் முன், கலிலி கடல் பகுதியில்... தனது அதிகபட்ச வேகத்தைப் பயன்படுத்தி, நீர்மேல் நடந்து அனைவரையும் அசத்தி உள்ளார். சும்மா சொல்லக் கூடாது... பேர் வாங்க என்னவெல்லாமோ செய்யறாங் கப்பா!

-கே.ஆர்.ராஜமாணிக்கம்