ஹாய் சுட்டீஸ்... உலகத் தோட தட்பவெட்பநிலை, மாற்றம் அடைவதால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படறாங்க. அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படும் சுட்டிகள், முதல் முறையாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானப் பயணம் புறப்பட இருந்தார்கள். பயணத்தின் நோக்கம் குறித்தும், தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்தும் சுட்டி விகடன் சார்பாக எடுத்த பேட்டி இதோ...

இயக்கம் பற்றி... ''இயக்கத்தின் பெயர், 'மக்கள் கல்வி பொருளாதார மேம்பாட்டுச் சங்கம்’ (speech). இதன் துணை நிறுவனம், 'குழந்தைகள் ஆதார மையம்’ (RCPDS) இவை இணைந்து செயல்படுகின்றன. திருச்சுழி என்கிற இடத்தில் 2008-ல் ஆரம்பிக் கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, ஒரிஸா, ஆந்திரா போன்ற இடங்களில் இயங்குகிறது. தமிழ் நாட்டில் இந்த இயக்கம் 4000 குழந்தைகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதில் உறுப்பினராகச் சேர ஆண்டு சந்தாவாக, 5 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் மீது ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நான் இதை உருவாக்கியதற்கான முக்கிய காரணம், 'குழந்தைகள் நலனே''’ என்கிறார் RCPDS-ன் தலைவர் ஜான் தேவவரம்.

நோக்கம்... ''இயற்கைச் சீற்றம், தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதே ஆகும். எதிர்காலத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கப் போராடுவோம்.''

முதல் விமானப் பயணம்... ''ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் முதலா தாஜ் மஹாலைப் பார்க்கும்போது என்ன உணர்வு ஏற்படுமோ... அந்த உணர்வுதான் எங்களுக்கும் இருக்குது'' என்று கூறுகிறார்கள் இந்த இயக்கத்தின் சுட்டிகள்.

பிரச்சாரம் பற்றி... ''துண்டு பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள், புத்தகம் மூலம் பிரச்சாரம் செய்யப் போறோம். எங்கள் பணி, எல்லாருக்கும் உதவ வேண்டும். அதே சமயம், நீங்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மரக் கன்றுகள் நிறைய நடவேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிருங்கள். மழை நீரைச் சேகரிங்க, தண்ணீரை வீணாக்காதீங்க. குளிர் சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறையுங்க. இப்படி செய்வதினால், தட்பவெப்ப நிலை மாற்றத்தால் விளையும் தீமைகளைத் நாம் பெருமளவில் குறைத்துவிட முடியும்.'' என்கிறார்கள் இந்த குட்டி சுற்றுச்சூழல் போராளிகள்.

படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்