Published:Updated:

ஜம்ஜம் ஜிம்னாஸ்டிக்!

ஜம்ஜம் ஜிம்னாஸ்டிக்!

ஜம்ஜம் ஜிம்னாஸ்டிக்!
ஜம்ஜம் ஜிம்னாஸ்டிக்!

‘சி ன்னப் பிள்ளையா இருக்கும்போது என் சித்தப்பாகூட விளையாடிக் கிட்டே அவரு மேல வளை வேன். அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு!’’ என்பவர், சேலம் க்ளூனி மெட்ரிக்கில் 7-ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் நடத்திய ஆறாவது, ஏழாவது போட்டிகளில் சாம்பியன்ஷிப் பெற்றிருக்கிறார் பவித்ரா. தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் அசோஸியேஷனும் திருச்சி ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கமும் இணைந்து நடத்திய போட்டியில் மூன்றாவதாக வந்துள்ளார். 2005-ல் ஏலகிரியில் நடந்த மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியிலும் 2006-ல் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள பவித்ரா, ஆத்தூரில் தென்னிந்திய அளவில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதலாவதாக வந்துள்ளார். அடுத்து தேசிய அளவில் நடக்கவிருக்கும் போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார்.

‘‘எதை எடுத்தாலும் முதலாவதாக வர நினைப்பேன். படிப்பிலேயும் நான் ஃபர்ஸ்ட். அதுபோல்தான் ஜிம்னாஸ்டிக்ஸிலும்!’’ என்கிறார் பவித்ரா.

-அ. பரஞ்சோதி

 
     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz