Published:Updated:

உயிர் தரும் ஓவியம் !

ந.ஆஷிகா,பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி
##~##

வீட்டு வாசலில் கலைநயத்துடன் வரவேற்றது ரங்கோலி. அதைத் தாண்டி உள்ளே சென்றால்... காட்டில் ஒரு மானை, புலி  பதுங்கிப் பார்ப்பது போன்று ஒரு சுவர் ஓவியம்.

''வாசலில் இருக்கிறது அம்மா போட்ட கோலம்... இது நான் போட்ட கோலம்'' என்று சிரிப்புடன் சொல்கிறார் அரவிந்தன்.

மதுரை, சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார் அரவிந்தன். பென்சில் கலரிங் தொடங்கி, சுவர் ஓவியம், அக்ரிலிக் பெயின்டிங் என இவர் வரைந்த ஓவியங்கள் ஏராளம். தமிழ்நாடு வனத் துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். வனத் துறை வெளியிட்ட மாதக் காலண்டரில், 'மயிலைக் காப்போம்’ என்ற தலைப்பில் இவர் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில், பரிசு பெற்றவர்களில் இவர் மட்டுமே பள்ளி மாணவர்.

''என் அண்ணனும் நல்லா ஓவியம் வரைவார். அதைப் பார்த்துதான் வரைய ஆரம்பிச்சேன். மேல் படிப்புக்காக அண்ணன் ஓவியத்தை விட்டுட்டார். நான்  பிடிச்சுக்கிட்டேன். சேதுபதி பள்ளியில் சேர்ந்ததும் ஆசிரியர் ஆறுமுகம் என்னைப் பாராட்டி, என் திறமையை வெளிப்படுத்த உதவினார். தலைமையாசிரியரும் என்னை  உற்சாகப்படுத்தி, பல போட்டிகளுக்கு அனுப்பினார்'' என்கிறார் அரவிந்தன்.

உயிர் தரும் ஓவியம் !

தேவையில்லாத பொருட்களில் இருந்து பல அலங்காரப் பொருட்களைத் தயாரிப்பதிலும் அசத்துகிறார் அரவிந்தன். உடைந்த மரக்கட்டைகள், தேங்காய்ச் சிரட்டைகள் எல்லாம் அழகான உருவங்கள் பெற்று, வீட்டை அலங்கரிக்கின்றன.

உயிர் தரும் ஓவியம் !

''இதுவரை 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளேன். காடுகள், கலாசாரம், இயற்கை என நாம் தொலைத்த விஷயங்களுக்கு ஓவியங்கள் மூலம் உயிர் கொடுப்பதுதான் என் லட்சியம்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு