Published:Updated:

சபாஷ் சஞ்சீவி !

மா.நந்தினி செ.சிவபாலன்

##~##

''வில்வித்தைக்கு, உடலில் வலிமையும் இலக்கில் முழுக்கவனமும் முக்கியம். உடலையும் மனதையும் நெறிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு இது'' என்ற சஞ்சீவி பேச்சில் அவ்வளவு தெளிவும் பக்குவமும்.

மயிலாடுதுறை, ஐடியல் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர் சஞ்சீவி. மாவட்ட, மாநில அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.

''ஆரம்பத்தில் ஸ்கேட்டிங்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம், வில்வித்தை செய்றவங்களைப் பார்த்து ஆர்வம் வந்தது. அதனால், வில்வித்தைப் பயிற்சியில் சேர்ந்தேன். ஏனோ தெரியலை, முதல்முறையாக வில்லை கையில் எடுக்கும்போதே இதுதான் நாம் சாதிக்கவேண்டிய துறைனு முடிவு பண்ணிட்டேன்'' என்கிறார் சஞ்சீவி.

சபாஷ் சஞ்சீவி !

'இந்த சிறிய வயதிலேயே வில்வித்தை போன்ற கடுமையான விளையாட்டு எதற்கு?’ என்று நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்.

''ஏன்னா, பார்க்கிறதுக்கு 'வில்லில் அம்பை வெச்சு இழுத்துவிடறதுதானே!’ என்று சுலபமாகத் தோன்றினாலும் அத்தனை சுலபம் கிடையாது. தோள் வலிமை, கை விரல்களின் உறுதி, உடல் அசைவும் மிக முக்கியம். இந்தச் சின்ன வயசிலேயே ஆரம்பிச்சாதானே, நம்முடைய இலக்கை சீக்கிரமா எட்ட முடியும். இதே மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்தான் செஸ் பிளேயர் விஸ்வநாதன் ஆனந்த். உலக சதுரங்கத்துக்கு ஆனந்த் மாதிரி, வில்வித்தைக்கு சஞ்சீவி என்று சொல்லும் காலம் வரும்'' என்று சொல்கிற சஞ்சீவி பேச்சில், அம்பு போன்ற கூர்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு