Published:Updated:

நாங்களும் சுத்தம்தான் !

நாங்களும் சுத்தம்தான் !

##~##

'பார்ச்சூன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ என்ற நிறுவனம், பாம்பு வடிவிலான ரோபோவைக் கண்டுபிடித்திருக்கிறது. 'பயோ க்ளீனர் 2’ எனப்படும் இந்தக் கருவியில் 'ஷெவானிலா ஒனிடென்ஸிஸ்’ (Shewanella oneidensis) என்ற பாக்டீரியாவைச் செலுத்தி, கடலுக்குள் அனுப்புவார்கள். இது, கடல் நீரில் உள்ள நச்சுகளை உறிஞ்சுகிறது.

குட்டைகள், குளங்கள் என இடத்தின் மாசுத்தன்மைக்கு ஏற்றவாறு இந்தக் கருவியைப் பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக்கொள்ள முடியும். இதில் உள்ள விளக்குகள் சிவப்பு நிறமாக எரிந்தால், தண்ணீரைச் சுத்தப்படுத்திவிட்டது என்று அர்த்தம். தான் இயங்குவதற்கான மின்சாரத்தையும் நீரிலிருந்தே இந்தக் கருவி தயாரித்துக்கொள்ளும்.

நாங்களும் சுத்தம்தான் !

நூலகங்களில் உள்ள பழைய புத்தகங்களைப் பராமரிப்பது சாதாரண விஷயம் கிடையாது. சில புத்தகங்களைத் தொட்டால், உதிர்ந்துவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும். அதை எடுத்துத் தூசி தட்டுகிறேன் எனச் சொல்லி கிழித்துவிட்டால், என்ன செய்வது?

இனி அந்தக் கவலை இல்லை.   அரியவகையிலான பழைய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை மிக நேர்த்தியாக, எந்தவித சேதமும் இல்லாமல் சுத்தப்படுத்தும் கருவி வந்துவிட்டது. இதன் ஒரு பக்கத்தில் புத்தகத்தை வைத்தால், தூசிகளைத் துடைத்து, மறுபக்கம் அனுப்பிவிடும். இந்தக் கருவி ஒரு நிமிடத்துக்கு 12 புத்தகங்களைச் சுத்தம் செய்யுமாம்.

நாங்களும் சுத்தம்தான் !
நாங்களும் சுத்தம்தான் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு