Published:Updated:

சுட்டி விகடன் - ஆல்டைம் டீச்சர் !

ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

அந்தச் சுட்டிகளின் ஸ்கூல் பேக்கில் இதுவரை, பாடப் புத்தகங்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது சுட்டி விகடனும்! ''சுட்டி விகடன் எங்களுக்கு எப்பவுமே ஸ்பெஷல். அதுலயும், FA பக்கங்கள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அதுல வர்ற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்குப் பயன்படுது. பாடம் சம்பந்தமா சந்தேகம் வரும்போதும் நாங்க இப்போ சுட்டி விகடனைதான் எடுத்துப் பார்க்கிறோம்''- உற்சாகம் பொங்கச் சொல்கின்றனர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு ராணி மெய்யம்மை ஆச்சியால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், இப்போது 1,157 மாணவிகள் படிக்கின்றனர். சுட்டி விகடனில் வெளிவரும் FA பக்கங்கள் உள்ளிட்ட பயனுள்ள பகுதிகளைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், 500 மாணவிகளுக்கு ஓர் ஆண்டுக்குக்கான சந்தா செலுத்தியிருக்கின்றனர்.

''மாணவிகளுக்கு என்ன பிடிக்கிறதோ... அதன் வழியாக பாடத்தைச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் உற்சாகமாகப் படிப்பார்கள். எங்கள் பள்ளியின் செயலாளர் குமாரராணி மீனா முத்தையா, 'பள்ளிக்கூடப் பாடம் மட்டும் போதாது; உலகப் பாடமும் வேண்டும்’ என்பதில் உறுதியாக இருப்பார். அதனால்தான் எங்கள் மாணவிகள், எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றியுடன் வருகின்றனர்.

சுட்டி விகடன் - ஆல்டைம் டீச்சர் !
சுட்டி விகடன் - ஆல்டைம் டீச்சர் !

சுட்டி விகடனின் ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் மீது அக்கறைகொண்ட தாயாக, ஆசிரியராக, தோழியாக உள்ளது. படிப்புக்கு உதவும் FA மற்றும் SA பக்கங்கள் உட்பட, சுட்டிகளைக் கட்டிப்போடும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் அதில் இருக்கின்றன. எங்கள் மாணவிகள் அவற்றை ரசித்துப் படிக்கிறார்கள். அதனால்தான் சுட்டி விகடன் தவறாமல் கிடைக்க வேண்டும் என நினைத்து சந்தா செலுத்தினோம்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி.

''கதைகள், சுட்டி மனசு, புதிர்கள், அறிவியல் விந்தைகள் என சுட்டி விகடனின் ஒவ்வொரு பக்கமும் எங்களின் ஃபேவரைட்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கின்றனர் மாணவிகள்.

உங்க ஸ்கூல்ல வாங்கிட்டீங்களா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு