சென்னை கோட்டூர் புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம், கடந்த 20.07.2011 அன்று, இரும்புக் கோட்டையாக மாறி இருந்தது. வெள்ளைக்கார பாதுகாப்பு வீரர்கள் சிங்கம் மாதிரி காவலுக்கு நின்றிருந் தார்கள். அவர்களை வேடிக்கை பார்த்த படியே... சென்னையில் இருக்கும் பல மாண வர்கள் உற்சாகமாக அங்கே குவிந்தார்கள். ஹிலாரியின் வருகையாலே இந்த கலாட்டா.

'புகழ்பெற்ற உலகத் தலைவரை சந்திக்கும் பெருமிதமும் சந்தோஷமும் மாணவர்களிடம் தெரிந்தது. கிளிண்டன், அமெரிக்க ஜனாதி பதியாக இருந்தபோதே, இந்தியா மீது தனி பாசத்தோடு அடிக்கடி வந்து சென்ற ஹிலாரி, இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக வந்து இருக்கிறார். அரங்கத்தில் இருந்த கமல்ஹாசன், கௌதமி, பின்னணிப் பாடகி சின்மயி ஆகியோர் எழுந்து நின்று கைத்தட்ட... ஹிலாரி மேடையில் தோன்றி, 'வணக்கம்’ என்று தமிழில் சொல்ல, மீண்டும் கைத்தட்டல்.

''உங்க நாட்டுக்கு இதற்கு முன் பல முறை வந்திருந்தாலும் சென்னைக்கு முதல் முதலா வருகிறேன். நான் ஏன் உங்கள் நாட்டுக்கு அடிக்கடி வருகிறேன் தெரியுமா? 21-ஆம் நூற்றாண்டின் சரித்திரம் உங்கள் நாட்டில் தான் எழுதப்பட இருக்கிறது. இந்த சரித்திரத்தை எழுதப்போவது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. இங்கே வசிக்கும் உங்களைப் போன்ற ஒவ்வொரு குடிமக்களும்தான்!'' என்றார்.

நம் ஊர் கலாச்சாரத்தை அறிய, அன்று மாலை சென்னை கலாக்ஷேத்ரா சென்றார். அங்கே மோகினி ஆட்டம், கதகளி, பரத நாட்டியம் என மாணவ, மாணவிகள் அசத்த... அதை மெய்மறந்து ரசித்தார். அவர் சென்னைக்கு வந்ததே புதன் கிழமை மதியம்தான் என்றாலும், அன்றைய இரவுக்குள் ஆறு நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்புடனும் உற்சாகமாகவும் பங்கேற்றார். 'அடுத்த முறை உங்கள் மகள் செல்சியாவை அழைச்சுட்டு வாங்க’ என்று அன்புடன் கூட்டத்தில் ஒரு குரல் ஒலித்தது. எத்தனை பெரிய பதவியில இருந்தாலும் இயல்பாகவும் அடுத்தவரிடம் அன்பாகவும் பழக வேண்டும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஹிலாரி!

படங்கள்: கே.ராஜசேகரன்,
கே.கார்த்திகேயன்