Published:Updated:

வெளியே சிங்கம்..உள்ளே நாம் !

வெளியே சிங்கம்..உள்ளே நாம் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

எத்தனை நாட்களுக்குத்தான் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருக்கும் சிங்கத்தை வெளியே நின்று புகைப்படம் எடுப்பது? நான்கைந்து சிங்கங்கள் சீறிக்கொண்டு நம்மை நோக்கி ஓடிவர, நாம் கூண்டுக்குள் இருந்தபடி பார்த்தால், எப்படி இருக்கும்?

அப்படி சிங்கங்களை நேருக்குநேர் சந்திக்க,  நியூஸிலாந்தில் இருக்கும் 'ஓரானா வைல்டு லைஃப் பார்க்’ (Orana Wildlife Park) செல்ல வேண்டும். அங்கிருக்கும் அதிகாரிகள், இந்த விலங்குகள் சரணாலயத்தைப் பிரபலப்படுத்த, இப்படியரு புது உத்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு ட்ரக்கில் இரும்புக் கூண்டைப் பொருத்தி, பார்வையாளர்களை அதற்குள் பூட்டிவிடுவார்கள். இந்தக் கூண்டு, வெட்டவெளியில் சிங்கங்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லும். மனிதர்களைப் பார்த்ததும் பாய்ந்துவரும் சிங்கங்கள், கூண்டின் மேல் ஏறுவதும், கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நம் முகத்தின் அருகே கர்ஜிப்பதும் பார்க்கவே த்ரில்லிங்காக இருக்கும்.

வெளியே சிங்கம்..உள்ளே நாம் !

பயப்படாமல் இந்தக் கூண்டு உலா சென்றுவிட்டு வந்தால், 'அஞ்சா சிங்கம்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொள்ளலாம்.

வெளியே சிங்கம்..உள்ளே நாம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு