Published:Updated:

தரையில் பறக்கும் தங்க தர்ஷினி !

தரையில் பறக்கும் தங்க தர்ஷினி !

தரையில் பறக்கும் தங்க தர்ஷினி !

தரையில் பறக்கும் தங்க தர்ஷினி !

Published:Updated:
##~##

''என் தாத்தாவுக்கு ஸ்கேட்டிங் மேலே ரொம்ப ஆர்வம். அப்பா சின்ன வயசா இருக்கும்போது அவரை தாத்தா ஸ்கேட்டிங் கத்துக்கச் சொன்னாராம். ஆனா, அப்பா கத்துக்கலை. தாத்தாவின் செல்லமான நான், அந்த ஆசையை நிறைவேத்திட்டேன்'' என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் தர்ஷினி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பன்னாரியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார் தர்ஷினி. சமீபத்தில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடந்த உலக அளவிலான ஸ்கேட்டிங் ரோல்பால் போட்டியில் இந்தியப் பெண்கள் அணியில் தங்கம் வென்றுள்ளார்.

''மூன்று வயதிலிருந்தே கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டேன். 10 வயதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான  போட்டிகளில் பரிசு வாங்க ஆரம்பிச்சேன். 'உலகப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சுலபத்தில் கிடைக்காது. உனக்குக் கிடைச்சா, தைரியமா கலந்துக்குவியா?’னு பயிற்சியாளர் கேட்டார். நான் கொஞ்சமும் தயங்காம, 'கலந்துப்பேன். என்னால் ஜெயிக்க முடியும்’னு சொன்னேன். கென்யாவில் போய் இறங்கினால்... மலேசியா, நேபாள், ஈரான், எகிப்து, உகாண்டா, ருவாண்டா என இதுவரை மேப்பில் மட்டுமே பார்த்த பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. மனசுல லேசா ஒரு ஜெர்க். ஆனாலும் என் கால்களின் மேல் எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. மொழி தெரியாத அவங்களுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்துட்டு போட்டியில் கலந்துக்கிட்டேன். தங்கத்தைத் தட்டிட்டு வந்தேன்'' என்கிறார் தர்ஷினி.

ஸ்கேட்டிங் தவிர, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் குண்டெறிதல் போன்ற போட்டிகளிலும் மாவட்ட அளவில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார் தர்ஷினி.

தரையில் பறக்கும் தங்க தர்ஷினி !

''போட்டிகளுக்காக மாநிலம், நாடுகள் எனக் கடந்து போனாலும் படிப்பிலும் கவனமா இருக்கேன். இதில் எனக்கு வகுப்பு ஆசிரியர்களும் தோழிகளும் எப்பவும் துணையா இருக்காங்க. 'ஓடி முடிச்சுட்டியா? உட்காரு. என்னென்ன பாடங்களை நடத்தினாங்கன்னு சொல்றோம்’னு உதவி செய்வாங்க. நான் டாக்டர் ஆகணும். ஒரு பக்கம் கையிலே ஊசியை வெச்சுக்கிட்டு உடம்புக்கு முடியாதவர்களின் நோய்களை விரட்டுவேன். இன்னொரு பக்கம், கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டு போட்டியாளர்களை மிரட்டுவேன். எப்பூடி ரைமிங்!'' என்கிறார் உற்சாகமாக.