Published:Updated:

தலைமை ஆசிரியர்களுக்கும்...ஆசிரியர்களுக்கும்...

தலைமை ஆசிரியர்களுக்கும்...ஆசிரியர்களுக்கும்...

தலைமை ஆசிரியர்களுக்கும்...ஆசிரியர்களுக்கும்...

தலைமை ஆசிரியர்களுக்கும்...ஆசிரியர்களுக்கும்...

Published:Updated:

வணக்கம்.

##~##

நவீன உலகின் புதிய தலைமுறை மாணவர்களைப் புத்துணர்ச்சியுடன் சந்தித்துவரும்  உங்களுக்கு, இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், 1 முதல் 9-ம் வகுப்பு வரை CCE மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, மாணவர்களிடம் சிறப்பான மாற்றத்தை நிகழ்த்திவருகிறது. அவர்களின் கற்பனை வளமும் எழுத்துத்திறனும் அபரிமிதமாக வளர்கிறது. இந்த CCE மதிப்பீட்டு முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 'சுட்டி விகடன்’ இதற்குப் பொறுப்புமிக்கப் பங்களிப்பை தொடர்ந்து அளித்துவருவதை அறிவீர்கள்.

இதற்காக வழங்கப்படும் FA என்ற வளரறி மதிப்பீட்டில், மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற, ஆசிரியர்களாகிய நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை 'சுட்டி விகடன்’  அறியும். ஆகவேதான், தமிழகக் குழந்தைகளின் உளவியலை நன்கு கருத்தில்கொண்டு FA பக்கங்களை வழங்கிவருகிறோம். 'சுட்டி க்ரியேஷன்ஸ்’ தொடங்கி 'வாங்க... வரைந்து பழகலாம்’ வரை பல பகுதிகள் FA-வுக்கு மிக மிக உதவக்கூடியவை. ஆசிரியர்களின் பங்களிப்புடன் மொத்தம் 16 பக்கங்களில், 9-ம் வகுப்பு வரை பாடவாரியாக செயல்பாடுகளும் செயல்திட்டங்களும் தரப்படுகின்றன. அவ்வப்போது 'ஸ்கிராப் புக்,’ 'படங்களின் ஆல்பம்’ முதலானவையும் சுட்டி விகடன் இதழுடன் இணைப்புகளாக வழங்கப்படுகின்றன.

தலைமை ஆசிரியர்களுக்கும்...ஆசிரியர்களுக்கும்...

தமிழ்நாட்டின் மிகச்சிறிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் இந்தப் பாடத்திட்டத்தின் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில், சுட்டி விகடன் இதழ்களை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தோம். முதல் கட்டமாக சுட்டி விகடன் 15.09.13 மற்றும் 30.09.13 இதழ்களை 20,000 பள்ளிகளுக்கு அனுப்பினோம். அது, உங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தொலைபேசி, கடிதங்கள் மூலம் நீங்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆண்டுச் சந்தாவுக்கான விண்ணப்பங்கள் என எல்லாமே எங்களை உற்சாகப்படுத்துகிறது.

இதோ, இரண்டாம் கட்டமாக மேலும் 20,000 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, உங்கள் கைகளில் தவழ்கிறது சுட்டி விகடன். இது இன்னும் அதிகமான மாணவர்களைச் சென்றடைய உங்களைப் போன்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் அவசியம். சுட்டி விகடனில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை, ஆசிரியர்களாகிய நீங்கள் சுட்டிக்காட்டினால், அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். உங்கள் மாணவர் களுக்கு சுட்டி விகடனை அறிமுகப்படுத்துவதன் மூலம், அறிவுலகின் ஜன்னலைத் திறந்துவிட முடியும்.

மாணவர்களின் அசத்தலான அறிவுத்திறனை வெளிக்கொண்டுவரும் சவால் நிறைந்த இந்தப் பணியில், நாம் உற்சாகத்துடன் இணைந்து செயல்படுவோம்.

நன்றி!
- ஆசிரியர்