Published:Updated:

வழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் !

வழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் !

வழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் !

வழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் !

Published:Updated:
##~##

சுட்டி விகடனில் வெளிவரும் FA பக்கங்கள் மாணவர்களிடம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது? ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உறுதுணையாக இருந்துள்ளது?

பென்னாகரம்- கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மைதிலி சங்கரன் சொல்கிறார்.

''பள்ளிப் பாடம் என்றாலே அலுப்பூட்டும் விஷயம் என்பதை CCE முறை முற்றிலும் மாற்றிவிட்டது. ஒரு பக்கம் கல்வித் துறை எங்களுக்கு அளித்த  பயிற்சிகளும், மறுபுறம் சுட்டி விகடனின் வழிகாட்டுதலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. FA பக்கங்களில், எந்த செயல்திட்டங்களை எந்த மாதிரி செய்யலாம் என்பதை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் சக ஆசிரியர்கள் எழுதினார்கள். அவற்றில் சிறந்தவற்றை எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் செய்துகாட்டினோம். மேலும், அந்தச் செயல்திட்டங்களில் இருந்து எங்களுக்கும் புதிதாக யோசனைகள் தோன்றியது. அவற்றை சுட்டி விகடனுக்கு அனுப்பி, எங்கள் மாணவர்களின் படைப்புகளும் புகைப்படங்களுடன் வெளியானபோது உண்டான மகிழ்ச்சி, அளவிட முடியாதது'' என்கிறார்.

வழிகாட்டியாக வரும் சுட்டி விகடன் !

''சுட்டி விகடன் FA பக்கங்களில், ஒரு பள்ளியில் மாணவர்கள் நடத்திய நாடகத்தைப் படிச்சோம். நாமும் இது மாதிரி வித்தியாசமாக செய்யணும்னு முடிவு பண்ணி, தமிழகத்தை ஆண்ட அரசர்கள் பற்றித் தெருக்கூத்து நடத்தினோம். இதற்காக அரசர்கள் பற்றிய தகவல்களைத் தேடிப் படிச்சோம். அது, நமது முன்னோர்களின் வீரம், பண்பாடு, கலை எனப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க உதவியாக இருந்தது. இந்தத் தெருக்கூத்தை சுட்டி விகடன் புராஜெக்ட் போட்டியில் வெளியானது. எங்களை இன்னும் வித்தியாசமாகச் செய்யத் தூண்டியது'' என்கிறார்கள் அந்தப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்கள்.

''CCE முறையின் நோக்கம், மாணவர்களின் கற்றல் சூழலை இனிமையாக்குவது தான். 'கூடு தேடிப் பயணம்’ என்கிற பெயரில் மாணவர்களை அழைத்துக்கொண்டு, எங்கள் ஊரில் இருக்கும் மரங்களை நாடினோம். அங்கே இருந்த பல வகையான பறவைகளின் கூடுகளைக் காண்பித்து விளக்கினேன். இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல், எனக்கும் புது அனுபவமாக இருந்தது. இதற்கு, சுட்டி விகடனின் திகி பக்கங்களே தூண்டுகோலாக இருந்தன'' என்கிறார் ஆசிரியை இந்திரா காந்தி.