Published:Updated:

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

Published:Updated:
##~##

சுட்டி விகடன் FA பக்கங்களின் சிறப்பை உணர்ந்து, பல தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் தாமாக முன்வந்து சுட்டி விகடனுக்கு சந்தா செலுத்தி, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அளித்துவருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டம், செலவடை என்ற ஊரில் இருக்கும் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் ஆண்டுச் சந்தா செலுத்தி இருக்கிறார்கள். ''சுட்டி விகடனை பள்ளி நூலகத்தில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். அதில்,CCE பாடத் திட்டத்தின் செயல்முறைகள் ரொம்ப நல்லா இருந்துச்சு. 'எங்களுக்கும் சுட்டி விகடன் வாங்கித் தர்றீங்களா’னு நானும் என் நண்பர்களும் பிரின்ஸிபால் சார்கிட்ட கேட்டோம். உடனே ஏற்பாடு செய்தார். நாங்களே வாங்கணும்னா, ஊரில் இருந்து நாலு கிலோமீட்டர் போகணும். இப்போ சந்தா மூலம் எங்களைத் தேடி சுட்டி விகடன் வருது. அதில் வரும் செயல்திட்டங்களைப் படிப்போம். அடுத்த புராஜெக்ட் போட்டியில் கலந்துக்கிட்டு அசத்துவோம்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மாணவர்கள்.

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

இதேபோல, தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளியிலும் மாணவர்களின் கைகளில் தவழ்கிறது சுட்டி விகடன். ''இப்போ, சுட்டி விகடன் எங்க பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கு. இதை எங்களுக்கு அறிமுகம் செய்த தலைமை ஆசிரியர் கிரிஜா டீச்சருக்கும், பள்ளியின் ஏ.ஓ.பவானி மேடத்துக்கும் ரொம்ப, தேங்க்ஸ்'' என்கிறார்கள் பரவசமாக.

நாங்களும் களத்தில் இறங்கிட்டோம் !

''என் மகன் சுட்டி விகடனைத் தொடர்ந்து படிப்பான். அதில் வரும் ஒவ்வொரு பகுதியுமே மாணவர்களின் படிப்பையும் கற்பனைத்திறனையும் மெருகேற்றுவதை உணர்ந்தேன். இதை, என் பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டியது எனது கடமை என்பதால், அவர்களுக்கு அறிமுகம்செய்து, சந்தா செலுத்த வழிகாட்டினேன்'' என்கிறார் தலைமை ஆசிரியை கிரிஜா.

- ச.காளிராஜ்
படங்கள்: க.தனசேகர்,
ஏ.சிதம்பரம்