Published:Updated:

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

Published:Updated:
##~##

'எனக்கு றெக்கை முளைச்சிடுச்சு... ரொம்ப அழகா... வெள்ளைக் கலரா, புஸுபுஸுனு  ரெண்டு றெக்கைகள். ஆனா, பறக்கிற நேரம் பார்த்து எங்க அம்மா எழுப்பிவிட்டுட்டாங்க.’

ஏழாவது படிக்கும் புவனேஸ்வரி, தன் கனவை இப்படி அழகான கதையாக எழுதி இருந்தார்.

எய்டு இந்தியா மற்றும் எல் - டி ஃபைனான்ஸ் இணைந்து நடத்திய, யுரேகா இளம் படைப்பாளிகள் விழாவின் வண்ணத் துளிகளில்... ஒரு துளிதான் இது.

தமிழகத்தின் 600 கிராமங்களில் இருந்து பல கட்டமாக நடந்த போட்டிகளில் வென்று, மாநில அளவிலான போட்டிக்கு வந்திருந்த அத்தனை சிறுவர்களும் தங்களது கற்பனைத் திறனால் பார்வையாளர்களை வியக்கவைத்தனர்.

இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில்... முதல் நாள், கதை சொல்வது எப்படி... கதை எழுதுவது எப்படி... கதைக்கு ஓவியம் வரைவது எப்படி என அந்தத் துறை சார்ந்தவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அடுத்த நாள், நடுவர்களைத் திணறடிக்கும் அளவுக்குப் போட்டி இருந்தது.

கரண் என்ற மாணவனுக்கு வலது கை செயல் இழந்துவிட்டது. அவனால் அந்தக் கையால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும், இடது கையால் மரங்கள் பற்றிய ஓவியங்களை வரைந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். நிறையப் பேர் தங்கள் வட்டார மொழி வழக்கில் கதைகளைச் சொன்னது சிறப்பாக இருந்தது. 10 வார்த்தைகளைச் சொல்லி, அந்த வார்த்தைகள் வருமாறு கதை எழுதச் சொன்னதும் கற்பனைக் குதிரையில் அனைவரும் பறக்க ஆரம்பித்தனர்.

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

கதை சொல்லலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சுட்டிகள், விழா மேடையில் கதைகள் சொன்னார்கள். அதேபோல கதை எழுதுவது, ஓவியம் வரைவது ஆகியவற்றில் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் மூன்று இடங்களைச் சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்தனர்.

இயக்குநர் சேரன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேராசிரியர் வசந்தி தேவி, கவிஞர் வெண்ணிலா, எல் - டி நிறுவனத்தின் சத்யநாராயணன், யுரேகா பாலாஜி சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு பரிசளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

றெக்கை முளைத்த சின்னச் சிட்டுகள் !

விழாவில் பங்கேற்ற பென்னாகரத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெயப்பிரியா, ''நான் '200 வருடங்களுக்குப் பின் உலகம்’னு ஒரு கதை எழுதினேன். அதுக்கு லட்சுமணன் ஓவியம் வரைஞ்சான். இதுக்காக நாங்க ரெண்டு நாளா பேசிப் பேசி டெவலப் பண்ணினோம். லட்சுமணன் மாதிரி நிறைய ஃப்ரெண்ட்ஸ் இங்கே எனக்குக் கிடைச்சிருக்காங்க'' என்று சொல்ல, லட்சுமணன் கெத்தாக தன்  காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்.

- செ.கிரிசாந்த், ஹெச்.ராசிக் ராஜா
படங்கள்: ரா.மூகாம்பிகை