Published:Updated:

கிட்ஸ் @ கிச்சன்.காம்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

கிட்ஸ் @ கிச்சன்.காம்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

மித்ரா

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... சென்ற இதழில் நீங்களே செய்த 'வேர்க்கடலை சாலட்’ எப்படி இருந்துச்சு? நண்பர்களுக்குக் கொடுத்து அசத்தினீங்களா... இந்த முறை உங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச பிஸ்கட் மற்றும் ஜெல்லியை வெச்சு, க்யூட்டா ஒரு ஸ்வீட் செய்வோம். இந்த ரெசிப்பிகளை உங்களுக்காக செய்துகாட்டுகிறவர், சமையல் கலை வல்லுநர் ஷர்மிளா ஆன்ட்டி.

ஜெல்லி பிஸ்கட் டிலைட்

தேவையான பொருட்கள்:

ஜெல்லி (ஏதாவது ஒரு ஃப்ளேவர்) - 1 பாக்கெட்

மேரி பிஸ்கட் - 10

வெண்ணெய் (பட்டர்) - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை: முதல்ல, மேரி பிஸ்கட்களைப் பொடிச்சு வெச்சுக்கங்க.

கிட்ஸ் @ கிச்சன்.காம்

வெண்ணெயை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி உருக்குங்க. (கவனம் குட்டீஸ்... அடுப்பை உபயோகிக்கும் வேலையை, அம்மாதான் செய்யணும்.)

 உருகிய வெண்ணெயை எடுத்து, பொடிச்ச பிஸ்கட் தூளுடன் சேர்த்து, நல்லாக் கலந்துக்கங்க.

ஜெல்லி பாக்கெட்டின் மேல் போட்டிருக்கும் குறிப்புகளைப் படிச்சு, அதன்படி ஜெல்லியைத் தயாரிச்சுக்கங்க.

இந்த ஜெல்லிக் கலவையுடன் மேரி பிஸ்கட் தூளையும் கலந்து, பிஸ்கட் செய்றதுக்கான மோல்டுகளில் அல்லது சின்னக் கண்ணாடிக் கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வெச்சிடுங்க.

நல்லா செட் ஆனதும் எடுத்தால், அழகிய கலரில், பளபளக்கும் ஜெல்லி பிஸ்கட் டிலைட் ரெடி!

குறிப்பு: ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, லெமன், மேங்கோ என எல்லாவிதமான ஃப்ளேவர்களிலும் ஜெல்லி கிடைக்கும்.

மாடல்: குருவதனா